”அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ….! ” என்று தொடங்கி
”லோகா சமஸ்தா சுகினோ பவந்து…” என்பது
வைணவத்தின் உன்னதமான, உண்மையான பிரார்த்தனை..!
அரங்கநகரும், அரங்கனின் அடியார்களும் வைணவத்தின் ஆணிவேர்.
வைணவத்தின் உன்னதமான, உண்மையான பிரார்த்தனை..!
அரங்கநகரும், அரங்கனின் அடியார்களும் வைணவத்தின் ஆணிவேர்.
”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த –
அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி –
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் –
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே?”
மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது,
தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி,
ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ? என்றவாறு அரங்கனை நினைத்து குலசேகரப்பெருமான் ஏங்குகிறார்
அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்கியம்.
இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.
தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி,
ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ? என்றவாறு அரங்கனை நினைத்து குலசேகரப்பெருமான் ஏங்குகிறார்
அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்கியம்.
இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.
இந்த உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போலவே பரமபதம் முழுவதும் சூழப்பட்டுள்ள அம்ருதகடல் ஒரு சமயம் தளும்பி, ஒரு சில துளிகள் விழுந்த இடமே, ஸ்ரீரங்கம்…!
அரங்கன் மகத்துவம் நிறைந்து ஒளிர்கிறார்... ஸ்ரீரங்கம் முழுவதுமே வைகுண்டத்திற்கும் மேலானது. இங்கு அரங்கன் தரிசிப்பதற்கு சுலபமானவானகவும், எளியவனாகவும் உள்ளான்.
அவன் குளிர்ந்தால் உலகம் குளிர்கின்றது. நம்பெருமாளின் செங்கோல் – ராஜாங்கத்தின் ஒரு அங்கமாக இன்றும் விளங்குகின்றது.
இந்த செங்கோல் மாமன்னன், மஹாதபஸ்வி இஷ்வாகு மஹாராஜாவினால் அரங்கனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செங்கோலாகவே அனுக்ரஹித்திருக்கும்,
ஸ்ரீரங்கத்தில் அரங்கனோடு அற்புதமாக கலந்தவர்கள் தாயார் ரங்கநாயகி, காவிரி, கமலவல்லி , சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்கநாச்சியார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
இதில் அரங்கன் திருவரங்கத்திற்கு வரும் முன்னமேயே ரங்கநாயகித் தாயார் எழுந்தருளி அரங்கன் அமர்ந்தபின் வெளிப்பட்டவள். காவிரியும் அரங்கன் வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலைப்போல் இட்டு ஒரு மணல்திட்டை ஏற்படுத்தியவள்.
மற்றவர்கள் அரங்கன் எழுந்தருளியபிறகு கலந்தவர்கள்.ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயக்கப்படுகின்றன.
கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக் கூடாது என்றனர்.
கம்பர், “அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.
அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, “கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து தலையாட்டினார்.
மேட்டழகிய சிங்கர் என்றழைக்-கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது,
சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
உகந்த மார்கழி மாதத்தில் ஆண்டாள் சந்நிதியிலுள்ள ஆண்டாள் தானே மாறுவேடமணிந்து அலங்கரித்துக் கொண்டாடும் அழகே தனி..!
Sri Paramapathanathar Sannidhi, Srirangam
ஆண்டாள் என்றாலே ஆளுமை மிக்கவள் என்று ஒரு பொருள்.
ஆண்டாள் மிக மிக ஆளுமை மிக்கவள்.
ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாய் கம்பீரமாக எம்பெருமானின் வேடம் ஏற்று எம்பெருமானகவே மாறிவிடும் மாயாஜாலம் வியக்கவைக்கின்றது.
ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாய் கம்பீரமாக எம்பெருமானின் வேடம் ஏற்று எம்பெருமானகவே மாறிவிடும் மாயாஜாலம் வியக்கவைக்கின்றது.
அரங்கன் மோகினி அலங்காரம் ஏற்றால் - ஆண்டாள் அரங்கனின் வேடம் ஏற்று அருள் பொழிகிறாள்..
ஆண்டாள் சந்நிதியில் கண்கொள்ளாக்காட்சி....
ஆண்டாள் சந்நிதியில் கண்கொள்ளாக்காட்சி....
மும்பை - செம்பூர்
Melbourne -ஆஸ்திரேலியா
Trichy Srirangam Temple - entry gate
அரங்கமாநகரைப் பற்றியும் அரங்கனை பற்றியும் அழகான பகிர்வு...
ReplyDeleteதங்களுக்கு மட்டும் இவ்வளவு அழகானப் படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன...:)
அமுதத் துளிகள் அருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அழகான படங்கள்..... திருவரங்கம் கண்டேன்.....
ReplyDeleteஅமுதத் துளிகள் மனதை மிகவும் கவர்ந்தது அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அரங்கனைப் பற்றிய அருமையான விளக்கங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeletearputhamaana post.
ReplyDeletesubbu thatha.
www.menakasury.blogspot.com
அரங்கனைப் போற்றி அற்புதமான பதிவு சகோதரி!
ReplyDeleteநன்றியுடன் வாழ்த்துக்களும்!..
அரங்கன் மகத்துவம் நிறைந்து ஒளிர்கின்றார்
ReplyDeleteஅழகான திருவுரவப் படங்களுடன் மிளிர்கின்றார்.
நன்றி வாழ்த்துக்கள் .....!
தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......!
அம்மா... படங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன....அருமை.....
ReplyDeleteஆண்டாள் பூண்ட அரங்க வேடம் கண் நிறைத்தது ஏனைய படங்கள் திருவரங்க தரிசனத்தை முழுமையாக்கியது.
ReplyDeleteஸ்ரீரங்கம் முழுவதுமே வைகுண்டத்திற்கும் மேலானது. அரங்கனின் பெருமைகளையும் திருவரங்கத்தின் சிறப்புகளையும் மிக அழகாக இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். கோபுர தரிசன படங்கள் மிக அருமை.- காணகிடைக்காத காட்சிகள். .
ReplyDeleteகம்பர் எதிரே நரசிம்மர் தோன்றியது கேள்விப்பட்டதில்லை.
ReplyDeleteகோவில் கோபுரங்கள் தெரிவது போல் நடுவில் வரும் இரண்டு படங்கள் பிரமாதம். ஒரு படத்தில் வலது பக்கம் சற்று ஒதுன்கிக் காணப்படும் வெள்ளைக் கோபுரமும் கோவிலைச் சேர்ந்தது தானே?
அப்பா சார்! வெள்ளைக் கோபுரமும் கோவிலுடையது தான்... கிழக்கு கோபுரம் என்றும், வெள்ளைக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது... முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போது வெள்ளாயி என்ற பெண் அரங்கனைக் காப்பாற்ற, இந்த கோபுரத்தின் மேலிருந்து குதித்து உயிர்த்தியாகம் செய்தாள்... அதனால் இதற்கு வெள்ளாயி கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது... இதற்கு வர்ணம் தீட்டுவது கிடையாது..
Deleteதிருமதி ஆதிவெங்கட் கண்ணாடி அறையில் ஆண்டாள் சேவை சாதிப்பதாக எழுதியிருந்தார்.. அதை இங்கே கண் குளிரக் கண்டேன். நன்றி திருவரங்க தரிசனத்திற்கு.
ReplyDeleteராஜலக்ஷ்மி மேடம் - இன்று 12ம் பாசுரப்படி இராமன் குகன் நட்பை அழகாக வடிவமைத்திருந்தார்கள்..
Deleteவாங்க ரோஷ்ணி அம்மா ..வணக்கம் வாழ்க வளமுடன் ..
Deleteதிருவரங்க வாசியான தங்களின் நேர்முக வர்ணணை அறிவிப்புக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்
அரங்கத்து அமுதத்துளிகள் அனைத்தும் அருமை.
ReplyDelete>>>>>
பதிவு முழுவதும் அனைத்துமே வழக்கம்போல மிக அருமையான படங்களாகக் காட்சியளிக்கின்றன.
ReplyDelete>>>>>
தங்களின் விளக்கங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன.
ReplyDelete>>>>>
ஆளுமை மிக்க ஆண்டாள் பற்றிய படங்களும், செய்திகளும் மிகவும் மகிழ்ச்சி அளித்தன.
ReplyDelete>>>>>
ஆஸ்திரேலிய கோயில் படங்களும் அருமை.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள்.
o o o o o
ரோஸ் கலர் பாவாடை / புடவையில், உற்சவராகக் காட்டியுள்ள குட்டியூண்டு ரங்கநாயகித் தாயாரை தரிஸித்ததில் இன்று எனக்கு மிகவும் சந்தோஷம்.
ReplyDeleteஅந்த ரங்கநாயகித் தாயார் பக்கத்தில் உள்ள வெள்ளி சாமான்கள், அதுவும் தாயாரின் அருகே தாயாருக்கு இடப்புறமாக உள்ள மிகப்பெரிய வெள்ளிச் சம்படம் அதன் மேல் பொறிக்கப்பட்டுள்ள, ’தாமரை மீது அமர்ந்த லக்ஷ்மி’ என எல்லாமே ஜோராக உள்ளன.
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..
Deleteநுணுக்கமான கவனிப்புத்திறனுக்கும் , அருமையான கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் பல..