பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாயஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
( --மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம்)
பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே,
மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம்.
பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே,
பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே,
பிரதம கணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே,
காலகூடவிஷத்தை அருந்தியதன்அடையாளமாக கழுத்தை உடையவரே,
ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே,
மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.
சனிப் பிரதோஷங்களில் இத்துதியை பாராயணம் செய்தால்
சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும் பெருகும்
சிவனுக்கு நடைபெறும் பூஜைகளில்
சனிப் பிரதோஷ பூஜை மிகவும் சிறந்தது.
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள். அதேநேரம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும் ..!
பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
சனிப் பிரதோஷ தினங்களில் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பிரதோஷ பூஜை மிகவும் சிறப்பு பெற்றது..!
திருவண்ணாமலை கோயிலில் உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, அருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி போன்ற எட்டுக்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படுகின்றன..!
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ் குவிக்க எம் இல்லம் வருக நந்தி.
சிவன் கோயிலுக்குச் செல்லும் போது கோயில் வாயில் அருகே ஒரு நந்தி அமர்ந்திருக்கும். இதனை தொட்டுக் கும்பிட்டு உள்ளே சென்றால் சிவலிங்கத்துக்கு அருகே கருவறைக்கு எதிரே மற்றொரு நந்தி அமர்ந்திருக்கும்.
கோயிலின் வாயிலில் அமர்ந்திருப்பதைதான் நந்தி என்று அழைக்க வேண்டும்.
கோயிலின் வாயிலில் அமர்ந்திருக்கும் நந்தி சிவனின் காவலர்.
அதே சமயம், கருவறைக்கு அருகே அமர்ந்திருப்பது ரிஷபம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனின் வாகனமாகும்.
பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் மனைவியாகிய பிரத்யுஷா என்னும் சாயா தேவி இக்காலத்திற்கு அதி தேவதை என்பதால் அவள் பெயரால் அழைக்கப்பட்டு, “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது ..
பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் `சாயரட்சை’ எனவும் அழைக்கப்படுகிறது.
சாகா வரம் பெறுவதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வலி தாங்காத வாசுகி பாம்பு கக்கிய விஷத்துடன் கடலில் இருந்தும் விஷம் பொங்கியது.
இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காலம்' என்ற நீல விஷமும்,
பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து
கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும்
கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.
விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர்.
ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய
ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.
அந்த ஆலகால விஷத்தை ஒரு கணநேரத்தில்
உட்கொண்டார் சிவபெருமான்.
இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்பு வரும் என்று கருதிய பார்வதி, விஷம் முழுவதும் சிசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்ததால். அன்றுமுதல் ஈசன், திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார்.
விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
11ம் பிறையாகிய ஏகாதசியில் சிவன் விஷம் உண்டார்.
12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார்.
13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ
காலத்தில் நடன தரிசனம் தந்தார்.
சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும்.
எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன்
மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றே முக்கால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும்.
மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றே முக்கால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும்.
பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள்
எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.
எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.
வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும்.
நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.
ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார்.
பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார்.
இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள்அனைவரும் 'ஹரஹர'
என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்..
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள்.
இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது.
இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர்.
ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது.
இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.
சோம சூக்த பிரதட்சணம் செய்வதால் ஒரு வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ தினத்தில் இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்தால் ஐந்து வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்
பிரதோஷத்தின் சிறப்பையும் பயனையும் உரைக்கும் பாடல் ..!
பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம் ஏகித் தொழுத பேறு பெற ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே.’’
VERY GOOD MORNING !
ReplyDeleteHAVE A VERY NICE DAY !!
முழுவதும் படித்து ருஸித்துவிட்டு மீண்டும் மீண்டும் வருவேன்.
>>>>>
மஹா பிரதோஷம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஅழகழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் இன்றைய பதிவு வெகு ஜோர் ! ;)
ReplyDelete>>>>>
அதுவும் இன்று 14.12.2013 கார்த்திகை மாத சனி மஹா பிரதோஷத்தன்று மிகவும் விசேஷமான இந்தப்பதிவினைக் கொடுத்துள்ளது, தேனாக இனிக்கிறது. ;)))))
ReplyDelete>>>>>
சிவ அபசாரம் நீங்கி சகல மங்கலங்களும் பெருகிட, மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கான ஹாலாஸ்ய ஸ்தோத்ரம் + அதற்கான தமிழ் அர்த்தம் கொடுத்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளது.
ReplyDelete>>>>>
தோஷம் என்றால் குற்றம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது .... சூப்பர் !
ReplyDelete>>>>>
தோஷம் என்றால் குற்றம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது .... சூப்பர் !
ReplyDelete>>>>>
முதலில் உள்ள காவலர் நந்தியையே நந்தி என அழைக்கப்பட வேண்டும்.
ReplyDeleteபிறகு சிவனுக்கு அருகே உள்ளது ரிஷபம் - வாகனம். அருமையான விளக்கம்.
சாயரட்சை விளக்கம் கேட்டு அசந்து போனேன்.
ஆலால சுந்தரர், திருநீலகண்டர் புராணக்கதைகள் தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் சொல்லியுள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>
பல்வேறு நந்திகள் + ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் மிகச்சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.
ReplyDeleteதிவ்ய தரிஸனம் செய்தோம்.
>>>>>
பல்வேறு நந்திகள் + ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் மிகச்சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.
ReplyDeleteதிவ்ய தரிஸனம் செய்தோம்.
>>>>>
மேலிருந்து கீழ் 5வது வரிசை வெள்ளி ரிஷப வாகனமும், கீழிருந்து மேல் 12வது வரிசையில் உள்ள 2 ரிஷப வாகனங்களும் மிகவும் ஜோராக உள்ளன. ;)
ReplyDelete>>>>>
ஸோம சூக்த பிரதக்ஷணம் செய்யும் முறைகள் அதனால் ஏற்படும் பலன்கள் எல்லாமே நன்கு அறிய முடிந்தது.
ReplyDeleteஇன்று நான் பிரதோஷ வழிபாட்டுக்காகச் செல்லும் சிவன் கோயிலில், தங்களையும் + தங்களின் இந்தப் பதிவினையும் மனதில் நினைத்துக்கொள்வேன்.
தங்களுக்காகவும் ஸ்பெஷலாக வேண்டிக் கொள்வேன்.
>>>>>
தினசரிப் பதிவுகளுக்காக, மிகவும் கடுமையாக உழைக்கிறீர்கள் !
ReplyDeleteஅற்புதமான அழகான பதிவினைக்கொடுத்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
சகல செளபாக்யங்களுடன் தாங்கள் நீடூழி வாழ்க !
o o o o o o o o o o
சனி பிரதோஷம் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் அம்மா,
ReplyDeleteமஹா பிரதோசம் பற்றிய தகவல்களை அறிந்த கொள்ள உதவும் படி மிக அழகான பதிவைத் தந்தமைக்கு எனது அன்பான நன்றிகள். படங்கள் ஆலயத்திற்குள் சென்று தரிசனம் செய்த ஒரு உணர்வை ஏற்படுத்துவது சிறப்பு. பிரதோசத்தின் சிறப்பைட்யும் பயனையும் தெரிவிக்கும் பாடலுக்கும் நன்றி அம்மா.
சனிப்பிரதோஷம் பற்றிய சிறப்பான செய்திகள்..
ReplyDelete; ))))) Thank you very much ;)))))
ReplyDeleteசிறப்பான தகவல்கள்... + படங்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
காலையிலேயே சிவ தர்சனம்
ReplyDeleteதன்யானேன்.
சந்தோஷம்.
இன்று மாலை பிரதோஷ கால சந்திரமௌலீஸ்வர ஊர்வலம்போழுது பிரார்த்திப்பேன்.
பார் யூ அண்ட் யுவர் பாமிலி
சுப்பு தாத்தா.
அழகான படங்கள் & பதிவு.
ReplyDeleteஇன்னும் சோமசூக்த ப்ரதட்சிண முறையில் குழப்பம் நீடிக்கிறது.
நீங்கள் வெளியிட்டுள்ள படங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக
உள்ளன. முதல் படத்தில் முதல் சுற்று வழக்கம் போல் ப்ரதட்சிணமாகவும்
கீழுள்ள வட்டப் படத்தில் முதல் சுற்று அப் ப்ரதட்சிணமாகவும் காட்டப்பட்டுள்ளது.
இதில் எது சரி ?
வழக்கம்போலவே அனைத்தும் அருமை.
ReplyDeleteலால்குடி கோவிலில் சுவாமி மேற்கே பார்த்து பிரதிஷ்டை. சோம சூத்ர பிரதக்ஷிணம் எப்படிச் செய்ய வேண்டும்?
ReplyDeleteசனிப் பிரதோஷ செய்திகள் அருமை. பிரதக்ஷணம் பற்றிய விசாயம் அறிந்து கொண்டேன். நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteதகவல்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteசாயரட்சை என்பதற்கு விளக்கம் இன்றுதான் அறிந்தேன். சனிக்கிழமை பிரதோஷ காலம் பற்றியும், பிரதோஷ பிரதட்சணம் பற்றியும் தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
ReplyDeleteஎன் சகதர்மிணி பிரதோஷம் தவறாமல் கோவிலுக்குச் சென்று புண்ணியம் தேடுகிறார்கள். அதில் எனக்கும் பங்கு வந்துவிடுமல்லவா!
ReplyDeleteசகல ஆன்மிக தகவல்களும் தரும் உங்கள் வலைத்தளம்... மிக்க நன்றி!
ReplyDeleteஆதி அற்புதமான படங்கள். பிரதோஷம் பற்றிய விளக்கங்களும் அருமை.
ReplyDelete