நவமாருதி ஸ்லோகங்கள்:
நவமாருதியையும் ஒவ்வொரு கிழமைகளில், அவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால், எல்லா வளங்களும் பெறலாம்.
மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!
குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம:
விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ
நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று
ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும்.
சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி,
மனத் தூய்மை அடையலாம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.
ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும்.
சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி,
மனத் தூய்மை அடையலாம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.
எதிரியின் தொல்லை நீங்க... ஸ்ரீதீர மாருதி!
புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா:
அஜாத்யம் வாக் படுத் வம்ச ஹனூமத் ஸ்மரணாத்பவேத்
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய்க்கிழமையன்று
ஸ்ரீதீர மாருதிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனை செய்து வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் யாவும் நீங்கும்.
வழக்கில் வெற்றி நிச்சயம்!
ஸ்ரீதீர மாருதிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனை செய்து வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் யாவும் நீங்கும்.
வழக்கில் வெற்றி நிச்சயம்!
பாவம் போக்கும் ஸ்ரீபஜனை மாருதி!
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் பாஷ்பவாரி
பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபஜன மாருதியை புதன் கிழமையன்று வணங்கினால், பாபங்களும் தோஷங்களும் விலகும்.
தைரியம் தரும் ஸ்ரீவீர மாருதி!
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபக் கணமாருதம்!
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, வியாழக்கிழமையன்று
ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும்.
கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.
ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும்.
கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.
தம்பதி ஒற்றுமைக்கு..
ஸ்ரீதியான மாருதி!
ப்ரிய மாக்யதே தேவீ த்வாம்துபூப: ஸபாசநேய
திஷ்ட யா சீவஸி தர்மஞ்நே ஜயமெப்ரதி க்ருஹ்யதாம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீதியான மாருதியை வெள்ளிக்கிழமைகளில் வணங்கினால், தம்பதி வேற்றுமை நீங்கும். மனத்துள் அமைதி நிலவும்.
சனியிடம் இருந்து காக்கும் ஸ்ரீபக்த மாருதி!
உல்லங்கிய ஹிந்த்தோ:ஸலிலம் ஸலீலம்
யஸ்ஸோக வஹ்ணிம் ஜனகாத்மஜாயா
ஆதாயதே நைவ ததாஹ லங்காம்
நமாமி ப்ராஜ்ஜலிம் ஆஞ்சநேயம்.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபக்த மாருதிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, வன்னி இலையால் பூஜித்து வணங்கினால், சனி பகவானின் தொல்லையில் இருந்து காத்தருள்வார், ஸ்ரீபக்த மாருதி.
ராகு தோஷம் நீக்கும் ஸ்ரீபால மாருதி!
ஸர்வ கல்யாண தாதாரம் குமாரம் ப்ரும் ஹசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசய ஹனுமந்தம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின்போது ஸ்ரீபால மாருதி வணங்கி வழிபட்டால்,
தேக ஆரோக்கியம் கூடும். ராகு மற்றும் கிரக தோஷங்கள் விலகும்.
தேக ஆரோக்கியம் கூடும். ராகு மற்றும் கிரக தோஷங்கள் விலகும்.
லாபம் தரும் ஸ்ரீபவ்ய மாருதி!
அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம் தவகிம்வத
ஸ்ரீராமதூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதகப்ரபோ!
என்ற ஸ்லோகத்தை எல்லா தினங்களிலும் சொல்லி, ஸ்ரீபவ்ய மாருதிக்கு சிவப்பு நிற புஷ்பங்களைச் சார்த்தி மனதார வழிபட, தொழிலில் வெற்றி உண்டாகும்.
நோய் நீக்கும் ஸ்ரீசஞ்ஜீவி மாருதி!
மனோஜவம் மாருத துல்யவேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸாம் நமாமி
என்ற ஸ்லோகத்தை, பிரதோஷ வேளையில் சொல்லி,
ஸ்ரீசஞ்ஜீவி மாருதியைத் தரிசித்து, கருநீல புஷ்பம் சார்த்தி,
வடைமாலை சார்த்தி வணங்கினால், சகல நோய்களும் நீங்கும்.
ஸ்ரீசஞ்ஜீவி மாருதியைத் தரிசித்து, கருநீல புஷ்பம் சார்த்தி,
வடைமாலை சார்த்தி வணங்கினால், சகல நோய்களும் நீங்கும்.
நவக்கிரகங்கள் அமைந்திருப்பது போல், திண்டுக்கல் ராம்நகர் பகுதியில், ஸ்ரீவல்லப மகா கணபதி கோயிலில் அமைந்துள்ள நவ மாருதிகளையும் வணங்கினால், சகல வளமும் கிடைக்கப் பெறலாம்.
அழகியப் படங்களும் அற்புதமான விளக்கமும் அருமை. மகிழ்ச்சியாய் இருக்கிறது
ReplyDeleteஒவ்வொன்றுக்கும் ஸ்லோகங்களுடன் தந்திருப்பது விசேஷம். அருமை.
ReplyDeleteஸ்லோகங்கள்அதனால் கிடைக்கும் நன்மைகள் இவற்றை கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅழகிய படங்கள் .
நலங்களை அனைவருக்கும் வழங்கட்டும் நவ மாருதி.
வாழ்த்துக்கள்.
பரிபூரணம் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மகிழ்ச்சியான தரிசனம்+ஸ்லோகத்துக்கு மிக்க நன்றிம்மா!!
ReplyDeleteதிண்டிக்கல்லில் எந்த பக்கம் அருகில் ராம் நகர் இருக்கு ?? உதவினால் இந்தியாவிற்கு வந்தால் போகலாம் என்று இருக்கேன்ம்மா..உங்களுக்கு விலாசம் தெரிந்தால் சொல்லுங்களேன்.
ReplyDeleteமிக மிக அருமை! அத்தனை படங்களும் தினப்படி சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் அதன் பலன்கள என யாவற்றையும் தொகுத்துத் தந்தமை மிகச் சிறப்பு!
ReplyDeleteநன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!
ஆஹா... அருமையான படங்கள்.... ஸ்லோகங்கள் அனைத்தும் அறியத் தந்தீர்கள்.
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குபின் இன்று ‘நலம் நல்கும் நவ மாருதி தரிஸனம்’ என்ற தலைப்பினில் கொடுத்துள்ள பதிவினைக்காண சந்தோஷமாக உள்ளது.
ReplyDelete>>>>>
சனிக்கிழமைக்கு ஏற்ற நல்ல தரிஸனம். மகிழ்ச்சி.
ReplyDelete>>>>>
வெற்றிலை மாலை, பழமாலை, வடைமாலை, கரும்புக்கழிகளுடன் என அனைத்து அனுமன் தரிஸனங்களும், கரும்புச்சாறு போல இனிப்போ இனிப்பு தான்.
ReplyDelete>>>>>
ஒவ்வொரு கிழமைகளிலும் சொல்ல வேண்டிய ஸ்ரீஹநூமத் ஸ்லோகக்களையும் சொல்லி, அதற்கான பலன்களையும் வெகு அழகாக எடுத்துச்சொல்லியுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.
ReplyDelete>>>>>
இலாபம் ஏற்பட பிரதி தினமுமே சொல்ல வேண்டிய ஸ்லோகங்களும், நோய்நொடிகள் தீர பிரதோஷ வேளையில் சொல்ல வேண்டிய ’மனோஜவம் மாருத துல்யவேகம்......’ என்பதையும் திவ்யமாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. ;)
>>>>>
திண்டுக்கல் ராம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீவல்லப மஹா கணபதி ஆலயம் பற்றியும் அங்குள்ள நவ மாருதிகளைப்பற்றியும் அறியத்தந்தது மேலும் சிறப்பு.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள். வாழ்க !
ooo ooo
மாருதி தரிசணம் கண்டேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஅருமையான படைப்பு !! கண்களைக் கவரும் அழகிய படங்களுடன்
ReplyDeleteசிறப்பான தகவலைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .
இதில் எனக்கு "அசாத்திய சாதக ஸ்வாமி" என்ற ஸ்லோகம் மட்டும் தான் தெரியும். இன்றைக்கு மற்ற ஸ்லோகங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.
ReplyDeleteஒரு தவறு கண்டுபிடித்தேன். மன்னிக்கவும். என்னுள் ஒளிந்து கொண்டிருக்கும் வாத்தியார் செய்யும் வேலை அது.
ReplyDeleteநிப்பயத்துவம் - தவறு
நிர்ப்பயத்துவம் - சரி
ஏதோ எனக்குத் தெரிந்த சம்ஸ்கிருதம்.
நல்ல படங்கள் மற்றும் ஸ்லோகங்கள்......
ReplyDeleteஅனைவரும் படித்துப் பயன் பெறட்டும்....
உங்கள் பதிவுகளில் அடிக்கடி அதிகம் வருபவன் சொல்லின் செல்வன் அனுமன் என்று நினைக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநவமாருதி தர்சனம் கிடைத்தது நன்றி.
ReplyDelete