தெய்வத் திருமணங்கள் இந்தப் பூவுலகில் நிச்சயிக்கப்பட்டு, வானவர் புகழ, மானிடர் மகிழ நடந்தேறி ஆனந்தம் அளிப்பன...
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிமீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள்.
பெற்றவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகள்திருக்கல்யாணம் நடத்தி மகிழ்கிறார்கள்..
மீனாக்ஷி திருக்கல்யாணம்
நாமகளும் பூமகளும் தோழியராய் இருக்க
நான்முகனும் நான்மறையை நலமுடனே ஒலிக்க
நாரணனும் தங்கையவள் கரம்பிடித்துக் கொடுக்க
நல்லுலகம் போற்றிடவே சிவசக்தி சேர!
அழகுக்கே இலக்கணமாய் மணமக்கள் ஜொலிக்க
அன்பிற்கே இலக்கணமாய் உலகிற்கருள் கொடுக்க
அருகருகே வீற்றிருந்து காதலிலே களிக்க
அம்மைஅப்பரின் பொற்பதங்கள் பணிந்தேற்றி மகிழ்வோம்..
ஏழ்மையிலும் வறுமையிலும் வாடிக் கொண்டிருந்தவர்கள், வளம் கண்டு மகிழ்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஒளி, கோணலுற்ற மனங்களை எல்லாம் நேர்ப்படுத்தியது
எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஒளி, கோணலுற்ற மனங்களை எல்லாம் நேர்ப்படுத்தியது
உலகம் உய்வுற ஈசன் பார்வதியை மணந்தார்..
உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு.
அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான்.
அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான்.
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.
மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும்.
மக்கள் வெள்ளம் --மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்:
சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன.
பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது.
பொதுவாக திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது.
பாசத்தால் சூழப்பட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது.
ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார்.
மங்கள மங்கையாக மணக்கோலம் கொண்ட சிவசொர்ணாம்பிகை
சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை எனவே சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறுகின்ற திருக்கல்யாணத்தை தரிசனம் செய்பவர்களுக்கு அன்னை இம்மையில் எல்லா நலங்களையும் அளித்து மறுமையில் முக்தி பேறும் வழங்குகின்றாள்.
திருக்கல்யாண கோலத்தில் சொர்ணாம்பாள் காரணீஸ்வரர்
திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் சிவபெருமானுக்கே உரிய திருக்கயிலாயவாகனத்தில் சேவை சாதிக்கின்றார்,
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
சென்னை மயிலாப்பூர் ...கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோலாகல திருக்கல்யாணம் ...
திருக்கல்யாணம் முடிந்து வீதியுலா வரும் போது புல்லாங்குழல் மட்டுமே இசைக்கப்படும் என்பதால் புல்லாங்குழல் இசையில் வீதியுலா நடைபெறும்...
திருமங்கலக்குடி அன்னை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள் புரிகிறார்.
அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கும்.
அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.
இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
ராமர்சீதை திருக்கல்யாணங்கள்!
இந்த இப்பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தீண்டேன் என்று ஏகபத்னி விரதனானராமர் சீதை திருமணத்தில் மிதிலையில் மகிழ்ச்சி!
பங்குனி உத்தரம் ஆன பகற்போது
சிங்கம் மணத்தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத் தான் --
என்பது கம்பன் படைத்த கடி மணப் படலப் பாடல். ‘
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெலாம், கற்பக மலர்களையும், பொன் மலர்களையும், முத்துக்களையும் மழையாகச் சொரிந்தனர். புலவர்கள் வாழ்த்த, மன்னர்கள் பாராட்ட, சுமங்கலிப் பெண்கள் பல்லாண்டு பாட, மங்கலச் சங்குகள் முழங்கின; முரசுகள் முழங்கின. திருமணம் இனிதே நடந்தேறியது.
ராமபிரான், சீதையை கரம் பிடித்த சில நாட்களிலேயே வனவாசம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
வன வாச நாட்கள் மொத்தம் 14 ஆண்டுகள். இதில், ராவணனால் கடத்தப்பட்டு, 10 மாதங்கள் சிறையில் இருந்தார் சீதை.
கானகத்தில் அவர் இருந்தது 12 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மட்டுமே.
இந்த காலங்களில் ராமரை சந்தித்த முனிவர்கள், "நாங்கள் உங்கள் திருமணத்தை காணவில்லை, எனவே மீண்டும் திருக்கல்யாணத்தை நடத்தி காட்ட வேண்டும்!' என்று வேண்டினர். அதன்படி அவர்களுக்காக அவ்வப்போது வன வாசத்தில் ராமர்சீதை திருக்கல்யாணங்கள் 10 முறை நடந்தன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்,ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம்
Sri Adhi jagannatha Perumal along with Sridevi and Bhoodevi
திருவாலியில் சிறப்பாக நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.
புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித் தாயார் சேவை சாதிக்கும் அழகு.
திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தம்பதிகள்-உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து நாடினேன்
நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்
திருமணக்கோலம் கண் கொள்ளா காட்சிகள். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி
ReplyDeleteகண்டு களித்து மனம் மகிழ்ந்தோம்
ReplyDeleteஅற்புதமான திரு உருவப் படங்களுடன்
பதிவும் வழக்கம்போல் மிக மிக அற்புதம்
ம்னமார்ந்த நன்றி
கல்யாணத்தை ரசித்திட்டோம். தம்பதிகளின் அருள் பெற்றோம். மொய் எழுதுற இடமும், பந்தி நடக்கும் இடமும் சொன்னால் வந்த வேலையை முடிச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்.
ReplyDelete”திருவருள் தரும் திரு” என்ற தலைப்பில் நேற்று வெளியிட்ட அழகான பதிவு போலவே இன்றும் “திருக்கல்யாணங்கள்” என்ற தலைப்பில் பல கோயில்களில் நடைபெறும் கல்யாண உத்ஸவங்களைக் கண்குளிரக் காண முடிந்தது.
ReplyDeleteமதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்,
சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர்
ஸீதா ராமர் [அதுவும் வனவாசத்தில் 10 முறைகள் நடைபெற்ற திருக்கல்யாணங்கள்]
திருப்பதி ஸ்ரீநிவாஸர் கல்யாணம்
ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ ஆதி ஜகன்நாதபெருமாள்
திருவாலியில் திருக்கல்யாணம்
புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித் தாயார் சேவை சாதிக்கும் அழகு என ஏராளமான தெய்வத்திருக்கல்யாணங்களைப் பார்த்தது மனதுக்கு சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.
அழகான படங்களில் ஸ்வாமி அம்பாள் தரிஸிக்கச் செய்துள்ளதற்கு நன்றிகள்.
//மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும்.//
ReplyDelete//பொதுவாக திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. //
அழகான அருமையான பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.
//சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை //
ReplyDeleteசித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோருமே தெய்வாம்சம் பொருந்திய அதிர்ஷ்டசாலிகளே.
”சிவ சொர்ணாம்பாள்” ஸ்வர்ணம் போல ஜொலிக்கும் பெயர் அருமையோ அருமை.
//திருமங்கலக்குடி அன்னை மங்களாம்பிகை வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கும்.
ReplyDeleteஅம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.
இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.//
மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டும் மங்களகரமான தகவல்.
படங்களும் வார்த்தைகளும் வர்ணனைகளாக இல்லாமல் நேரில் பார்ப்பது போலவே இருந்தது. மதுரை அழகர் கதை எனக்கு முழுவதும் தெரியாது முடிந்தால் இச் சிறுவனுக்காக அதை ஒரு பதிவாக வெளியிடுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதெய்வங்களின் திருமணத்தை காண கண்கோடி வேண்டும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை.
ReplyDeleteஅருமையான பகிர்வு + தகவல்கள்...
ReplyDeleteவெள்ளிகிழமை மாலையில் படிக்கும் போது கோவிலுக்கு போய் வந்த உணர்வு தருகிறது...
கடைசியாக நீங்கள் போட்ட படத்தை பார்த்ததும் என்றாவது நானும் அதைப்போல ஒன்று வரைய வேண்டும் என்ற ஆவல் வருகிறது...
திருக்கல்யாணத்திற்கான பத்திரிகை அழைப்பிதழ் [ஒரு நாள் தாமதமாக], கல்யாணம் முடிந்த பிறகே எனக்குக் கிடைத்தது.
ReplyDeleteஇருந்தாலும் நம்ம வீட்டுக்கல்யாணம் தானே என நான், அழைப்பிதழ் இல்லாமலேயே, உரிமையுடன் கடமையுடன், பாசத்துடன் வந்து விட்டேன்.
தாமதமாகவாவது, மறக்காமல் அழைப்பிதழ் அனுப்பியது, ஏதோ கொஞ்சம் மன ஆறுதல் அளித்தது.
தெய்வதிருமணங்கள் அருமை.
ReplyDeleteகண்டு பெரும் பேறு எய்தோம்.
நன்றி.
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
94. நீரஜநாப கோவிந்தா
ReplyDelete2814+6+1=2821
ReplyDelete