





நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களேபுரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்

பிராத்திக்கும் உதடுகளைவிட, பிறருக்கு உதவும் கரங்களே புனிதமானது".
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !
மீசைக் கவிஞன் பாரதி அன்று வைத்த சிந்தனை !!
நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்
கோன் உயர அரசு உயரும்

மே மாதம் முதல் நாளை உலகெங்கும் சர்வதேசத் தொழிலாளர் நாளாக
நாம் கொண்டாடுகிறோம்.
நாம் கொண்டாடுகிறோம்.
உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்!
உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்!

1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு, “மே தினப் பூங்கா” எனப் பெயரிட்டு; அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது;

மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ உருவாகவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது.
அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல் தொழிலாளர் தினத்தை பொதுவுடைமை வாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் அவர்கள் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் கொண்டாடினார்.
உலகத் தொழிலாளர்களே விழித்தெழுங்கள் என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொள்ளவேண்டிய உழைக்கும் திருநாள் .. விடுமுறை தினமல்ல.. உழைத்து சிறக்கவேண்டிய நன்நாள்..
ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும்.
பார் எங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பல பெற்ற நன்நாள்
உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாள்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம்
இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே


Socialists at their May Day Celebration in Union Square, New York, 1933

வல்லமையில் வெளியான ஆக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்..
http://www.vallamai.com/ literature/articles/19565/
http://www.vallamai.com/
அன்பின் இராஜராஜேஸ்வரி,
தங்களுடைய அருமையான மேதின வாழ்த்துகளை நம் வல்லமையில் பிரசுரித்திருக்கிறோம். நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
பவள சங்கரி
May Day in Germany


;) அன்பான “மே தின வாழ்த்துகள்”
ReplyDeleteநாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே .........
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தமான பாடலுடன் ஆரம்பித்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது.
வல்லமை வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகடின உழைப்பாளிகள் நால்வரின் சிலை நல்ல அழகு.
ReplyDeleteஎங்கள் BHEL இல், HRDC [HUMAN RESOURCES DEVELOPMENT CENTRE]
ENTRANCE இதே நால்வர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி தஞ்சை பஸ்ஸில் போகும் போது, டிரைவர் ஸைடு பார்த்தால், மிகப்பெரிய இரண்டு கைகள் ஒன்றை ஒன்று தழுவியபடி, கும்பிடுவது போல இருக்கும்.
அது தொழிலாளர்+முதலாளிகளின் ஒத்துழைப்பு Co-operation between the employees & the employer க்காக வைக்கப்பட்டிருக்கும். அதற்கு மிகவும் சமீபத்தில் தான் HRDC entrance + இந்த தொழிலாளர்கள் சிலை, சற்றே உள்ளடங்கி வைக்கப்பட்டிருக்கும்.
அந்த ஞாபகம் வந்தது. சென்னை மெரினா பீச்சிலும் இதே சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதே மே 1 அன்று தான் (மிகச்சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு 01.05.1972) நான் பெண்பார்க்க பிக்ஷாண்டார் கோயில் சென்று வந்தேன். அம்பாசீடர் புத்தம் புதிய கார் நம்பர் MDG 1034. இனிமையான நினைவுகள்.
ReplyDeleteவணக்கம்! ஆன்மீகப் பதிவுகள் மட்டுமன்றி உழைக்கும் தோழர்களைப் பற்றியும் உணர்ச்சி பொங்க நல்ல பதிவு தருகின்றீர்கள்! மே தின வாழ்த்துக்கள்!
ReplyDelete” சித்திரச் சோலைகளே உம்மை
நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனைத் தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ? “
- பாரதிதாசன்
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமையான பதிவு - ஆன்மீகப் பதிவு எழுதும் போது காட்டும் ஈட்டுபாடு இங்கும் தெரிகிறது. உழைப்பாளர் தினமாகிய மே முதலாம் நாள் பற்றிய பதிவில் இத்தனை தகவல்களா ? பலே பலே ! எத்தனை படங்கள் - எத்த்னை பாடல் வரிகள் - எத்தனை எடுத்துக்காட்டுகள் - அத்தனையும் எழுத - தகவல்கள் சேகரித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஇன்டெல் "IVY Bridge" பிராசசர் ----- http://mytamilpeople.blogspot.in/2012/04/intel-ivy-bridge-processor-features.html
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteஉழைப்பாளர் தின வாழ்த்துகள்..
என்னுடைய சிறுவயதில் பாடப்புத்தகத்தில் பார்த்த உழைப்பாளர் சிலை. அந்த வயதில் அதனை வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தேன். அதே வியப்புடன் இப்போதும் பார்க்கிறேன். உழைப்பாளர்களுக்கும் அதனை ஞாபகமூட்டி பதிவிட்ட உங்களுக்கும் நன்றி.
ReplyDeleteஎன்ன ஒரு அருமையான பதிவு. நன்றி சகோதரி!
ReplyDelete//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteவணக்கம்! ஆன்மீகப் பதிவுகள் மட்டுமன்றி உழைக்கும் தோழர்களைப் பற்றியும் உணர்ச்சி பொங்க நல்ல பதிவு தருகின்றீர்கள்! மே தின வாழ்த்துக்கள்!
” சித்திரச் சோலைகளே உம்மை
நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனைத் தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ? “
- பாரதிதாசன்//
ஐயா,
வணக்கம்.
நேற்று 29.04.2012 திருச்சியில், அதுவும் எங்கள் தெருவிலேயே, ஒரு வீட்டில் “கவிதை உறவு - சங்கமம் 2” அமைப்பினரால் பாவேந்தர் பாரதிதாஸன் பிறந்த நாளுக்காக எளிய, இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மொத்தம் கலந்து கொண்டவர்கள் 10 பேர்கள் [9 ஆண்கள் + 1 பெண்] தான் என்றாலும், எல்லோருமே மிகவும் அருமையான நபர்கள்.
உங்கள் திருமழபாடி என்ற ஊரைச்சார்ந்தவரும், என் இனிய நண்பரும், மூத்த பிரபல எழுத்தாளருமான திரு. மழபாடி ராஜாராம் அவர்கள், என்னை என் வீட்டுக்கே நேரில் வந்து, வற்புருத்தி அழைத்துச்சென்றார்.
நான் அதே நேரம் வேறொரு கூட்டத்தில் [எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு சங்கக்கூட்டத்தில்] கலந்து கொண்டிருக்கும் போது, பாதி மீட்டிங்கிலேயே, என்னை திரு. மழபாடி ராஜாராம் அவர்கள் அழைத்துச்சென்று விட்டார்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கூட்டம் நடந்தது.
கவிதை மழைகள் பொழிந்தன.
நம்ம திருச்சியின் பிரபல கவிதாயினி திருமதி. தனலெட்சுமி பாஸ்கரன் அவர்கள் தாங்கள் கூறியுள்ள
//” சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே; முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ? “//
என்ற பாடலை மிக உருக்கமாகப்பாடினார்கள். பேசினார்கள்.
மணல்மேடு என்ற பகுதியிலிருந்து ஒரு பெரியவர் வந்திருந்தார்.
அவர் தன் இளமை நாட்களில் பாரதிதாஸனை நேரில் சந்தித்துப் பழகியவராம்
அவருக்கு பாவேந்தர் அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதங்களை எங்கள் பார்வைக்கு எடுத்துக் காட்டினார்.
அதில் உள்ள தேதி 01.01.1956.
மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
அடுத்த கூட்டம் நம் கவிதாயினி தனலெட்சுமி பாஸ்கரன் அவர்கள் வீட்டினில் 27.05.2012 அன்று நடைபெற உள்ளதாம்.
என்னைக் கட்டாயம் வர வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டுள்ளார்கள் அந்தக் கவிதாயினி திருமதி தனலெட்சுமி பாஸ்கரன் அவர்கள்.
அவர்கள் குடியிருக்கும் வீடு நீங்கள் இப்போது குடியிருக்கும் KK Nagar க்கு, அருகில் தான் உள்ளது.
நான் ஒருவேளை வரமுடியாவிட்டாலும் நீங்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ளுங்கள்.
அன்றைய தலைப்பும் “தொழிலாளர் தினம்” பற்றித்தான் என்று நேற்று கூறினார்கள்.
இதைப்பற்றி அறிவிப்புக் கடிதமோ/தொலைபேசித் தகவலோ மே மாதம் 20 தேதிக்கு மேல் தருவார்கள்.
அப்போது நான் உங்களுக்கு மெயில் மூலம் தெரிவிக்கிறேன்.
கவிதாயினி வீடு KK Nagar ராஜாராம் சாலையில் உள்ளது.
பிறகு முழு விலாசம் + செல்போன் நம்பர் தருகிறேன்.
நேற்றைய கூட்டத்திற்கு திரு. சாம்பசிவம், செயலர், பாரதி நற்பணி மன்றம், சிந்தாமணி தலைமை தாங்கினார்.
கொட்டப்பட்டு திரு. சக்திவேல், மாவட்ட அமைப்பாளர், கவிதை உறவு முன்னிலை வகித்தார்.
விழா சிறப்பாக நடைபெற்றது. பல விஷயங்கள் பலர் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது.
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தங்கள் தகவலுக்காக்.
[இந்தக் கவிதாயினியைப் பற்றி நான் ஏற்கனவே என் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளேன். இணைப்பு இதோ:
”முன்னுரை என்னும் முகத்திரை”
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html
முடிந்தால் போய் பாருங்கோ.
அன்புடன்
vgk
நல்ல பதிவு அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்.
ReplyDeleteஉழைப்பாளர்கள் தின வாழ்த்துகள்.
ReplyDeleteஅற்பதமான பதிவு
ReplyDeleteமே தின சிறப்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு முதல் நன்றி அம்மா.
ReplyDeleteமே தினம் உருவானதை அறிந்து கொண்டேன், இந்தியாவில் அதிலும் நம் சென்னையில் தான் முதல் மே தினம் கொண்டாடப் பட்டது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
உங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்...
உழைப்பே உயர்வு. உழைப்பாளர்களுக்கான உயர்வான பதிவு, அருமையாக இருக்கிறது.
ReplyDeleteமேதின வாழ்த்துக்கள்.
தொழிலாளர் தினம் வாழ்க.
ReplyDeleteமே தின வாழ்த்துகள்...
ReplyDeleteமே தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஉழைப்பாளர் தின வாழ்த்துகள் !
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
நிறைய விவரங்களைத் தேடிப் பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஎம்ஜிஆர் பாட்டு மறந்தே போனது!
vgkன் நீண்ட பின்னூட்டம் சுவாரசியம்.
ReplyDeleteஅன்பான “மே தின வாழ்த்துகள்”
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மே தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteUzhaipaaLigal anaivarukkum vaazhthukkal!
ReplyDeleteமே தின நல் வாழ்த்த்துக்கள்!
ReplyDeleteமேதின வாழ்த்துகள்...
ReplyDeleteவழக்கம்போலவே அசத்தலான படங்கள்..நல்ல விபரங்கள்
செய்யும் தொழிலை தெய்வமாய் நினைக்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉழைப்பின் மேன்மையை உணர்த்தும் நல்ல படங்களுடன் நல்ல பதிவை அளித்த உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
இனிய மேதின வாழ்த்துகள்..
ReplyDeleteநான் என் நாடகம் ஒன்றில் அரச, அந்தண ,வைசிய ஆதிக்கங்கள் காலம் முடிவடைந்து உழைக்கும் பாட்டாளிகள் காலம் மலரும் என்னும் ரீதியில் வசனம் எழுதி இருந்தேன். BHEL கம்யூனிடி செண்டரில் நடித்துக்காட்டப் பட்ட அந்த நாடகத்தில் இந்த வசனம் வந்ததும் கைதட்டல் ஆரவாரம் அடங்க சிறிது நேரமாயிற்று.நாடகப் போட்டியில் கலந்து கொண்ட எனக்கு வெற்றிக் கோப்பை வாங்கித் தந்த நாடகம் அது.
ReplyDelete@ G.M Balasubramaniam said... //
ReplyDelete// நாடகப் போட்டியில் கலந்து கொண்ட எனக்கு வெற்றிக் கோப்பை வாங்கித் தந்த நாடகம் அது.//
சந்தோஷமான பகிர்வுக்கு மகிழ்ச்சி ஐயா..
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
என்றெல்லாம் வசனம் மன்ப்பாடம் பண்ணி நடித்த மலரும் நினைவுகள் வந்தன ....
கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
நான் நீங்க கொடுத்த லிங்கில் உள்ள கமெண்ட்ஸ் வழியாக இங்கே வந்திருக்கேன் .டைரக்டா வந்தா flicker ஆகுது .
ReplyDeletebelated may day wishes . பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டேன் .பகிர்வுக்கு நன்றி
சற்று அல்ல நிறைய தாமதம்.
ReplyDeleteமே தின வாழ்த்துகள்.
// அப்பாதுரை said...
ReplyDeletevgkன் நீண்ட பின்னூட்டம் சுவாரசியம்.
May 1, 2012 12:04 AM//
Thank you very much, Sir.
vgk
106. கோகுல நந்தன கோவிந்தா
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
மேதின வாழ்த்துக்கள்
2909+8+1=2918
ReplyDelete