



கேரளாவின் புகழ் மிக்க திருவிழாக்களுள் ஒன்றுபாலக்காட்டிற்கு அருகேயுள்ள கல்பாத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க விஸ்வநாதசுவாமி ஆலய தேர் திருவிழா ...
தமிழகத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தன் தள்ளாத வயதில் காசிக்குச் சென்று திரும்பி வரும்போது ஒரு 'ஜ்யோதிர்’ லிங்கத்தைக் கொண்டு வந்தார்.
வழியில்... நதிக் கரைகளில் தங்கி, சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பதுமாக இருந்தார்.
வழியில்... நதிக் கரைகளில் தங்கி, சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பதுமாக இருந்தார்.
இப்படியாக, பாலக்காடு - கல்பாத்திக்கு வந்தவர், அங்கிருந்த நிலா பாகீரதி ஆற்றங்கரையில் ஜ்யோதிர் லிங்கத்தை வைத்து வழிபட்டார்.
அங்கு வந்த பொதுமக்களும் வணங்கி வழிபட்டனர். சிலநாட்கள் கழித்து அங்கிருந்து கிளம்பும் வேளையில், அந்த சிவலிங்கம் அசையவே இல்லை. '
இந்த சிவலிங்கம் இருக்கவேண்டிய இடத்தை, அந்த சிவபெருமான் தேர்வு செய்துவிட்டார்’ என உணர்ந்து கொண்டார்...
அப்போது பாலக்காடு பகுதியை ஆட்சி செய்த மன்னன்
இட்டி கோம்பி ஆலயம் எழுப்பினாராம்..
அப்போது பாலக்காடு பகுதியை ஆட்சி செய்த மன்னன்
இட்டி கோம்பி ஆலயம் எழுப்பினாராம்..
கேரள மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜருக்கு கனகசபை அமைந்துள்ளது.
இத்தலத்தில் நவகிரகங்கள் தம்பதியருடன் அருள்பாலிப்பது சிறப்பு.
விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தெற்கு ,கிழக்கு திசைகளிலிருந்து 18 படிகள் கீழே இறங்கி செல்லும் அமைப்பிருப்பதால் குண்டுக்குள் கோயில் என்று அழைக்கின்றனர்.
கோயிலிருந்தே கல்பாத்தி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியிருப்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
காசியில் பாதி கல்பாத்தி என்ற புகழ் பெற்றது... .
சிவபார்வதி, கணபதி, நடராஜர், சிவகாம சுந்தரி, பிரதோஷமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளியுள்ளனர்.
மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ரதோற்ஸவம் இங்கும் நடக்கிறது.
சிவபார்வதி, கணபதி, நடராஜர், சிவகாம சுந்தரி, பிரதோஷமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளியுள்ளனர்.
மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ரதோற்ஸவம் இங்கும் நடக்கிறது.

காசி போல ஆறுகால் பூஜை உண்டு..
நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக சிற்பிகளால் கவினுற வடித்துக்கொடுக்கப்பட தேர் மிகுந்த சிறப்பு வாய்ந்தது..
ஐப்பசி மாதம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் தேர் திருவிழா சுற்றியுள்ள 18 கிராமங்களையும் தேர் சுற்றிவந்து கார்த்திகை மாதத்தில் நிலைக்கு வருகிறது..

மனித சக்தியை மட்டுமே நம்பி தேர் இழுப்பதில்லை.
யானைகள் தேரை முட்டித்தள்ள மனிதர்கள் இலகுவாக
இழுக்க சிரமம் குறைவு..
.jpg)
தேரோட்டம். இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் இருக்கின்றன. எத்தகைய இரைச்சலிலும் மிரளாமல் கருமமே கண்ணாயினராக தேர் தள்ளுகின்றன யானைகள்



















Kalpathi River



GOVINDARAJAPURAM-THE ABODE OF KANCHI VARADARAJA PERUMAL IN KERALA
ஆஹா! மீண்டும் தேர்!
ReplyDeleteஇன்றும் தேர்!!
ஜோர் ஜோர்.
உங்களின் பதிவுக்கு மேல் நீ...ள..மா...க
ReplyDeleteஉள்ளது அந்தத் தேரினில் கட்டியுள்ள வாழைத்தார், அதுவும் வாழைப்பூவுடன்!
சபாஷ் சூப்பர் போட்டோ செலெக்ஷன்.
;)))))))))))))))))))))))))))))))))
தேர் சக்கரத்தை யானைகள் முட்டித்தள்ளுவது போன்ற இரு படங்களும் அழகோ அழகாகக் காட்டப்பட்டுள்ளன.
ReplyDeleteஅதன் துதிக்கைக்கு சிராய்ப்பு ஏதும் ஏற்படாமல் இருக்கவா அந்த பேண்டேஜ் போட்டதுபோல ஒரு யானையைத் தனியாக காட்டியுள்ளீர்கள்.
நல்ல ஏற்பாடுகள் தான்.
கீழிருந்து 8 ஆவது படத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரும், அதன் அருகே ஏராளமான ஹாட்டீன் வடிவ [அன்பு] பலூன்களும் நல்ல கவர்ச்சியாக உள்ளது.
ReplyDeleteஅதுபோல கீழிருந்து 9 ஆவது படத்தில் உள்ள தேர்ச்சக்கரம் போன்ற கலர் கலரான அந்த அமைப்பு பளிச்சென்று கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது.
ஒரு தேரின் வெளிப்புறத்தில் எலுமிச்சை மாலை அணிந்த இரு குதிரை வீரர்கள்,
ReplyDeleteஒரு தேரில் குரங்குக்குல்லா அணிந்த குட்டியூண்டு ஹனுமன்,
ஒரு தேரில் நீண்ட வாழைத்தார் இரு பக்கங்களிலும், நடுவில் ஏராளமான வாழைப்பழச்சீப்புகள், இளநீர் குலைகள், 2 சிகப்பு+2 வெள்ளைக்குதிரைகள்,
மற்றொரு தேரில் கிண்டாமணிப் பகுதி என எப்படித்தான் போட்டோ கவரேஜ் செய்து, கஷ்டப்பட்டு எங்களுக்காக பதிவிட்டு, அசத்துகிறீர்களோ!!
வியப்போ வியப்பாக உள்ளதே!
3 வெள்ளை கோபுரங்கள் உள்ள தேர்கள் அதுவே சின்னதாகவும், பெரியதாகவும் இருமுறை காட்டப்பட்டுள்ளதே, அது என்ன தங்ககலர் மூடிபோட்ட ப்ளாஸ்டிக் டப்பாக்களை அடுக்கி செய்யப்பட்டதோ?
ReplyDeleteவரவர படங்கள் ஜாஸ்தியாகி விளக்கங்கள் குறைந்து விட்டன்வே!
கல்பாத்தித்தேர்களைப் பார்த்தது, சூடான சுவையாக சாஃப்ட்டான சப்பாத்திகளை காரசாரமான புத்தம்புதிதாகப் போட்ட நார்த்தங்காய் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டது போல பேரானந்தமாக உள்ளது.
ReplyDeleteஎவ்வளவு சப்பாத்தி ஸாரி எவ்வளவு கல்பாத்தித் தேர்களை வரிசையாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.
நான் இப்போ வெளியே கிளம்பணும். பிறகு முடிந்தால் மீண்டும் வருவேனாக்கும்! ஜாக்கிரதை!!
தேரின் அழகும்
ReplyDeleteஅதை தள்ளும் யானையின் லாவகமும்
தேரின் அலங்காரமும்
அழகோ அழகு..
ஹையா! என் பிரியமான பதிவர் இதுவரை 498 மார்க்கு எடுத்துட்டாங்க!
ReplyDeleteஇன்னும் இரண்டே இரண்டு மார்க் தான் பாக்கி. அதையும் பெற்றுவிட துடிப்புடன் ஏதேதோ யோசித்து எழுதிக்கொண்டே இருக்காங்க. இன்னிக்கோ நாளைக்கோ 500 out of 500 நிச்சயமா வாங்கிடுவாங்க!
டேய், யார் அங்கே!
போய் அர்ஜெண்டா ஹாரத்தி கரைச்சுட்டு வா!
கம்ப்யூட்டருக்கு முன்னாலேயே திருஷ்டி சுத்திடுவோம்.
;))))))
உள்ளம் கொள்ளை போனதே!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)
தேர் அழகு கொஞ்சுகிறது.
ReplyDeleteகல்பாத்தி கோவிலின் விவரங்கள் எனக்கு புதிது.தகவல்களுக்கு நன்றி.
யானைகளுக்கு தேர் சக்கரம் தள்ள துணி போல் கட்டி இருந்தாலும் இத்தனை கூட்டத்துக்கு நடுவே தேர் தள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது.
இவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்......ய
வாழைத்தாரை நான் இதுவரை பார்த்ததே இல்லை.
கல்பாத்தி ஆறு..... கடவுள் கேரளாவில் நிறைய அருளை அள்ளி வழங்கி இருக்கிறார். :-))
தேரோட்டம்லாம் பாத்தே வருஷக்கணக்காகுது. இங்க தேர் அலங்காரம் கண்ணையும் மனசயும் நிறைக்குது படங்கள் எல்லாம், பகிர்வு எல்லாமே நல்லா இருக்கு
ReplyDeletebalasubramaniam G.M
ReplyDelete11:28 AM (2 hours ago)
to me
திருமதி இராஜராஜேஸ்வரிக்கு, நீங்கள் கொடுத்த லிங் மூலம் பதிவைக் கண்டேன். மிக்க நன்றி.அதில் பின்னூட்டப் பெட்டி இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிந்தராஜபுரம் எங்கள் பூர்விக கிராமம். அங்கு நான் சிறு வயதில் சில காலம் தங்கி இருந்ததை பதிவாக இட்டிருக்கிறேன். சென்ற வரிடம் கல்பாத்தி தேரின்போது தேருக்கு முட்டுக் கொடுப்பவர் விபத்தில் இறந்ததாக செய்தி இருந்தது. மீண்டும் நன்றியுடன்.../
நன்றி ஐயா..
கல்பாத்தி தேரை கண் குளிர கண்டோம். இந்த மாதிரி பெரிய வாழைத் தாரை இதுவரை பார்த்ததே இல்லை.
ReplyDeleteயானை மற்றும் தேர் - சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுடன் ரசிக்கும் விடயம்.
ReplyDeleteI remember my childhood day,wherein i very happily mingled the crowd of Kalpathi ther along with my father.
ReplyDeleteI remember the crowd and nothing there in my mind now.
Very pretty post.
டேய், யார் அங்கே!
போய் அர்ஜெண்டா ஹாரத்தி கரைச்சுட்டு வா!
கம்ப்யூட்டருக்கு முன்னாலேயே திருஷ்டி சுத்திடுவோம்.
amamam.
viji
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
84. வசுதேவசுதனே கோவிந்தா
ReplyDelete2737+9+1=2747
ReplyDelete