Wednesday, June 19, 2013

ஜேஷ்டாபிஷேகம்














 ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது.

ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதருக்குத்  மிகச்சிறப்பாக நடைபெறும்திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது...

ஜேஷ்டாபிஷேகத்திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். 

ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோவில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும்  திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள்.
திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள்.

திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோவிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பின் பக்தர்களுக்கு அளிப்பார்கள்.ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் 


22 comments:

  1. Very Good Morning !

    எங்கிருந்தாலும் ...... வாழ்க ! ;)

    இன்றைய தங்களின் இந்தப்பதிவு மிகவும் அருமையோ அருமை.

    >>>>>

    ReplyDelete
  2. ஆஹா, ஜேஷ்டாபிஷேகமா !!!!!! சூப்பர் !!!!!!

    >>>>>

    ReplyDelete
  3. முதல் இரண்டு படங்கள் சும்மா ஜொலிக்கின்றன !

    பெருமாளுக்கு தங்கக்குடங்களில் தீர்த்தம் கொண்டுவர ஒத்துழைக்கும் அந்த யானை ..... அடடா என்ன அழகு !

    >>>>>

    ReplyDelete

  4. கடைசி நாலு படங்களும் ...... அப்பப்பா ..... காணக்கண்கோடி வேண்டும். எப்படித்தான் கவரேஜ் செய்து காட்டி அசத்த முடிகிறதோ? அதுவும் தினமும்.

    ரெங்கநாயகிக்கு ரெங்கநாயகியின் அருள் கொட்டிக்கிடக்கிறது. ;)

    >>>>>

    ReplyDelete

  5. கடைசி நாலு படங்களும் ...... அப்பப்பா ..... காணக்கண்கோடி வேண்டும். எப்படித்தான் கவரேஜ் செய்து காட்டி அசத்த முடிகிறதோ? அதுவும் தினமும்.

    ரெங்கநாயகிக்கு ........ ரெங்கநாயகியின் அருள் கொட்டிக்கிடக்கிறது. ;)

    >>>>>

    ReplyDelete
  6. கீழிருந்து ஆறாவது படம் .........

    எங்கேயோ ....... எப்போதோ பார்த்த ஞாபகம் ;)))))

    வேறெங்கே ? உங்கள் தளத்தின் தான்.

    மீண்டும் இன்று பார்த்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    அதுவும் தங்களின் இதழ் விரித்த தாமரைக்குள், தங்க விமானம் !

    நாமம் போட்ட யானை போடும் 'சலாம் மாலே கும்! '

    'மாலே கும் சலாம்!!' .......... தங்களுக்கே !!!

    Simply Superb! Excellent!!

    >>>>>>

    ReplyDelete
  7. //ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான பள்ளிகொண்ட ஸ்ரீ ரங்கநாதருக்குத் மிகச்சிறப்பாக நடைபெறும் திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது...//

    அற்புதமான தகவல் ....... தகவல் களஞ்சியத்திடமிருந்து.

    “கேட்டை” என்று தமிழில் சொல்லப்படும் நக்ஷத்திரம் தான் “ஜேஷ்டா” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.

    அதனால் தான் இது “ஜேஷ்டாபிஷேகம்” என அழைக்கப்படுகிறது.

    >>>>>>

    ReplyDelete

  8. //திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோவிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பின் பக்தர்களுக்கு அளிப்பார்கள்.

    ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் //

    அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசட்டும்.

    ’ஸ்ரீ ர ங் க நா ய கி’ ஸமேத 'ஸ்ரீ ரங்கநாதர்' அதற்கு அருள் புரியட்டும்.

    >>>>>>

    ReplyDelete
  9. அவசர அடியில் கொடுத்துச்சென்றுள்ள மிகச்சிறிய பதிவாகினும், அனைத்துப்படங்களும், மிகச்சிறிய விளக்கங்களும் மிகவும் பாராட்டத்தக்கவை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    “எங்கிருந்தாலும் வா ழ் க !”

    ooooo 9 4 5 ooooo

    ReplyDelete
  10. என்னே அற்புத படங்கள்... ஜேஷ்டாபிஷேகம் மனம் முழுவதும்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  11. அழகிய படங்கள்! சிறந்த விஷயங்கள்!
    அறிந்ததும் மகிழ்வே...
    பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. திருமஞ்சனம் குறித்த தகவல்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. அத்துனையும் அற்புதமான படங்கள்.ஆன்மீக விளக்கமும் நன்று

    ReplyDelete
  14. ஜேஷ்டாபிஷேக செய்திகள், படங்கள் எல்லாம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஜ்யேஷ்டாபிஷேகம் குறித்த தகவல்கள் அருமை. புகைப்படங்கள் பெரிய பெருமாளையும், நம்பெருமாளையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தின. ஜ்யேஷ்டாபிஷேகம் சேவிக்க முடியாத என் போன்றவர்களுக்கு உங்கள் பதிவு வரபிரசாதம். தங்க விமானத்திலிருக்கும் பரவாசுதேவனையும், ஸ்ரீரங்கம் ஊரையும், கோவில் கோபுரங்களையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒரு சேர சேவிக்க முடிந்தது சிறப்பு. நன்றி!

    ReplyDelete
  16. jeshtabishekam aani thirumanjanam.
    arputham.

    ippathaan inge kaalai paththu mani. ungal pathivu paarththu poorithu ponen.

    ellaam perumal varam thanthathu.

    romba romba thanks.

    subbu thatha.

    ReplyDelete
  17. இன்றைய படங்கள் அற்புதம்ங்க. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  18. superb pictures about sri rangam thanks for sharing info about jyestabisegam

    ReplyDelete
  19. என்ன ஒரு அழகான கோபுரம்.. பார்த்து பரவசம் ஆகிட்டேன்ன்...

    ReplyDelete
  20. I belong to Tiruchirappalli. You have given more informations , which I don't know myself. As usual all the photos are SUPER.

    ReplyDelete
  21. ஜேஷ்டாபிஷேகம் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.படங்களுடன் விளக்கம் அருமை. பக்தி மனம் கமழ்கிறது.

    ReplyDelete
  22. Aha ha ha.....
    No words to express. Sitting at home you made me see all this kolakalam. Thanks dear.
    Very very nice.
    viji

    ReplyDelete