குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வர:
குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா: தஸ்மை ஸ்ரீ குரவே நம:
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பலாய்,
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்,
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத் தொடக்கை வெல்வாம்.
ஞானக் கடவுள் தட்சிணாமூர்த்திக்குத் தேனி ''முல்லைநகர்'' அருகே உள்ள வேதபுரியில் அமைந்துள்ள தனிக் கோயிலில் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி ஒன்பதடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. 5 கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள்
கோயில் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், சுவாமிக்கு சக்தி அதிகம்.
கருவறை விமானத்தில் நமசிவாய மந்திரத்தை குறிக்கும் வகையில் ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது.
சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம்.கற்பூரம் ஏற்றுவதும் தடை செய்யப் பட்டுள்ளது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க
சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.
மூலவருக்கு 16வித உபச்சாரங்களுடன் சாயரட்ஷை பூஜை,
சகஸ்ர நாம பூஜை . சிறப்பு அபிஷேக, ஆராதனை தீபாராதனையும் இடம்பெறும்.
பிரதோஷ நாட்களில் மாலை 4.30 முதல் இரவு 8.30 வரை நந்திக்கும், சிவனுக்கும் பல்வேறு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடக்கும்.:
காலை நேரத்தில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம்.
கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை
பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.
கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும் என கூறுகிறார்கள்.
பக்தர்கள் தரிசனம் செய்யும் மகா மண்டபத்தின் நீளம் 108 அடி,
அகலம் 54 அடியாக விசாலமாக அமைந்திருக்கிறது.....
அகலம் 54 அடியாக விசாலமாக அமைந்திருக்கிறது.....
மண்டபத்தின் எப்பகுதியில் இருந்தும் சுவாமியை நன்றாக தரிசிக்கும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூலவரையும், விமானத்தையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
கோயிலின் நுழைவு வாசலிலிருந்து கூட மூலவரை நன்றாக தரிசிக்க முடியும்.
வேத பாடசாலை உள்ள்து,
கோவிலை வலம் வருவது சிறப்பு வழிபாட்டு முறையாகத்திகழ்கிறது..
கோவிலை வலம் வருவதற்க்கு தனியாக பாதை அமைக்கபட்டுள்ளது,
சனகர் ,சனந்தனர் ,சனாதனர், சனத்குமாரர் என்னும் நான்கு ,முனிவர்கள் பிரார்த்தனைக்காக சிவப்பரம்பொருள் தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்.
தரிசித்து மகிழ்ந்தோம்
ReplyDeleteபடங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
நல்ல தகவல் மற்றும் படங்கள் அனைத்துமே அருமை!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.....
இத்தனைக் கடவுளில் யாராவது ஒரு கடவுள் எனக்கும் உதவுவாங்களா?மனக்குறையை தீர்பாங்களா?மனிதநேயம் காப்பாங்களா?.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
ReplyDeleteஅற்புதமான முதல் படம் உட்பட அனைத்தும் அருமை... தகவல்கள் பலருக்கும் உதவும்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான படங்கள், தகவல்கள்.... நன்றி அம்மா...
ReplyDeleteVery very excellent and informative post, congrats. Thanks for sharing,
ReplyDeleteOoooo 953 ooooO
இக் கோயிலினை அமைத்து நிர்வகித்து வருபவர் தவத்திரு ஓம்காரனந்தஜி சுவாமிகள்.தற்போது இந்த மகான் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்திற்கும் பீடாதிபதியாக உள்ளார்கள். வேதம் முறைப்படி கற்ற சுவாமிகளின் கீதை உரை
ReplyDeleteமற்றும் வேதாந்த பாடங்கள் கேட்கும் காதுகள் புண்ணியம் செய்தவை.
வியாழன் காலை பிரஜ்ஞா தட்சணாமூர்த்தியின் தரிசனம். கோயில் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.முதல் படம் கண்ணைக் கவர்கிறது. படங்கள்,தகவல்கள் எல்லாமே அருமை. வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeleteபார்க்கும்போது மனதிற்கு அத்தனை இதமாக இருக்கின்றது.
ReplyDeleteஅமைந்திருக்கும் சூழலும், நிறைந்த அமைதியும் அழகும் எம்மை அங்கே ஈர்பதை உணருகின்றேன்.
அருமையான பதிவும் பகிர்வும் சகோதரி!.
என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு!
great post excellent pictures
ReplyDeleteஅருமையான பகிர்வு! ஆலயத்தின் சிறப்பினை விதிகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்! தரிசனத்திற்கு செல்ல வசதியாக இருக்கும்! நன்றி!
ReplyDeleteஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சிறப்புடன்... தங்கள் உலாவில் நாங்களும் மகிழ்வான தரிசனம் பெறுகிறோம்.
ReplyDeleteஅழகான படங்கள்... அருமையான பகிர்வு...
ReplyDeleteஎல்லாரையும் கடவுள் தான் காக்கணும்...
Aha. Very Good.
ReplyDeleteBy sitting at home I visited over the temple. Thanks dear.
viji