"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கை, வாழ்க்கையில் கடைப்பிடித்து -``தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்,
ஐ.க்யூ. எனப்படும் கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக உள்ளனர்''
அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம்,
கோடி ரூபாய்க்கு கூட ஈடாகாது:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - என்றார் வள்ளுவனார்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு,
இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ
என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
தந்தையர் நாடென்னும் பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
என்றார் பாரதி..
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்.
கருணை கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும்
வாழ்க்கைச் சக்கரத்தில் குழந்தைகள் வசதியாய் வாழ்வதற்காக,
ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை.
தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக,
உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே தந்தையர் தினத்தின் நோக்கம்.
பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது.
விந்தைகளை உருவாக்கும் தந்தையை மனம் நிறைய வணங்குவோம்..!
தந்தையர் தின பதிவு மிக மிக அருமை.
ReplyDeleteதந்தையர்க்கு சமர்ப்பணம்செய்திருக்கிறீர்கள்.
நன்றி.
நெகிழ்வுடன் நினைத்து வணங்குவோம்.
ReplyDeleteVery happy fathers day.
ReplyDeleteHappy to view the celebaration of fathers day. I think its a must to celebarate with.
viji
தந்தையர் தினம் பற்றிய தங்கள் பதிவு போற்றுதற்குரியது. பொருத்தமான படங்கள், தகவல்கள் உள்ளத்தை அள்ளுகிறது. தந்தையின் கைப்பிடித்து குழந்தை நடப்பதை அனைத்து தந்தைமார்களும் நிழற்படம் அல்லது காணொளி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவை பின்னோர் நாளில் மலரும் நினைவுகளாக மலரும். வாழ்க தந்தையர் தினம். வளர்க தந்தையர்.
ReplyDeleteநன்றி சகோ. தந்தையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteகற்றறிந்த சான்றோனாக்குதல் தந்தைக்கு அழகு! இவ்வகையில், கீர்த்தியுடன் வலம் வரும் தாங்கள் மறவாமல் தந்தையரின் நினைவுகூறுவது பாராட்டுக்குரியது. தங்களின் தந்தைக்கும், சகோதர சகோதரிகளின் தந்தைகளுக்கும் வாழ்த்துக்களும் கூறி, அனைவரின் தந்தையான இறைவனிடம் நீண்ட ஆயுளும், மனம் நிறைந்த வாழ்வு வாழ்ந்திட்ட இத்தியாக உள்ளங்களுக்கு ஆசியும் நல்கிட பிரார்த்திக்கிறேன்!
ReplyDeleteஅன்னையை மட்டுமே தெய்வமாக நினைக்காமல் அந்த அப்பாவையும் பெருமைப்படுத்தும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteதந்தையரின் சிறப்பை எடுத்துக்காட்டுகள் மூலம் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteதந்தை தாய்ப் பேண்
என்று தந்தைக்கும் அவ்வபோது முதலிடம் கொடுத்தவர்கள் தமிழர்கள் ஆயிற்றே.
நல்ல பதிவு மேடம்
கார்பொரேட் நிறுவனங்களின் வியாபார உத்தியில் விளைந்த தினங்கள் இவை. அன்னை, தந்தை, கணவன் மற்றும் மனைவியை ஒரு தினம் வைத்து கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து
ReplyDelete@ கோவை ஆவி
Deleteகார்பரேட் உலகின்
ரெட் கார்பெட்டில்
காலடி தடம் பதித்து,
கைப்பிடித்து நடை பழக்கி
வளர்த்த முதுமைத் தந்தைகளை
மறந்து போன மக்களுக்கு
அப்படியாவது ஒரு தினம்
பெற்ற பயனின் வரமாகட்டும் !
அருமையான படங்கள்...
ReplyDeleteதந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
அழகான படங்களுடன் அற்புதமான பதிவு.
ReplyDeleteதந்தையர் தின இனிய நல்வாழ்த்துகள்.
சென்ற ஆண்டு காட்டிய ஆடி அசையும் “டை” யைக்காணோம். ;)))))
பாராட்டுக்கள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
ooooo 942 ooooo
தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎந்தையும் தாயும் எப்பொழுதுமே உறவில்
ReplyDeleteசிந்தையில் தந்தையும் சிறக்கின்றான் - புந்தியில்
சொந்தமென வலைப்பூவில் சூழவரும் தந்தையரே
வந்தனை வைத்தேன் விரும்பி!.
அருமை சகோதரி உங்கள் பகிர்வு. மிக்க நன்றி!
அனைத்துத் தந்தையருக்கும் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
Beautiful pics . Happy father's day to all dads.
ReplyDeleteVetha. Elangathilakam.
தந்தையர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதாங்கள் நன்றாக இருக்கக் குடும்பம் தழைக்கும்.
உங்கள் இனிய பகிர்வுக்கு நன்றி.
தந்தையர் தின வாழ்த்துக்கள்! அருமையான பகிர்வு!
ReplyDeleteதந்தையை நினைவு கொள்ள வைக்கும் நல்ல பதிவு.
ReplyDeleteஎல்லா தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
ReplyDeleteஇந்த நாளில் நம் மக்கள் வணங்கி வாழ்த்தும்போது மகிழ்ச்சி உண்டாகிறது நிஜம்.
மேலிருந்து கீழ் ஐந்தாம் வரிசைக்குழந்தை அற்புதமாக உள்ளது. பேரனா பேத்தியா எனத்தெரியாததில் என் மண்டையே வெடுத்திடும் போல் உள்ளது.;(
ReplyDeleteகீழிருந்து மேல் நான்காவது படம் [அசையும் நாற்காலி] நல்லதொரு படத்தேர்வு. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
ReplyDeleteஆங்காங்கே கொடுத்துள்ள பாட்டுக்கள், செய்யுள்கள் எல்லாமே அருமை.
ReplyDelete//அப்பாவின் கை பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்குக்கூட ஈடாகாது//
அம்பாளின் பதிவு பிடித்துப்படிக்கும் அனுபவமும் எனக்கு அப்படியே தானாக்கும்.;)))))
தந்தையர் தின பதிவு அழகு!
ReplyDeleteஇனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் !!!!
ReplyDeleteதந்தையர்தின நல்வாழ்த்துகள்.
ReplyDelete