Monday, November 26, 2012

சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே







அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”
என்று துதித்து  கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

” கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.
மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.

கார்த்திகை தீபத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.   

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். 

அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.


எல்லா மதத்தினரும் தீபவழிபாட்டைக் கொண்டாடுகின்றனர்..


வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.
அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது  முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது.


13 comments:

  1. காலை எழுந்தவுடன் ஜோதி தரிசனம்!

    ReplyDelete
  2. நடுவில் இருக்கும் படத்தின் அலங்காரம் breathtaking! நல்ல படம்.

    ReplyDelete
  3. தொடர்ந்து வரும் பதிவுகள் கார்த்திகையின் பெருமையை ரொம்பவும் சிறப்பாக சொல்கிறது..தொடருங்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  4. படங்களும் தீபத்திற்கான விளக்கமும் அருமை அம்மா...

    நன்றி...

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு. நல்ல படங்கள்.

    ReplyDelete
  6. ஆற்றில் தீபங்கள் சுடர் விட்டு கொண்டு அசைவது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    ReplyDelete
  7. படங்களின் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. சரியான சமயத்தில் பொருத்தமான பகிர்வு&படங்கள். நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  9. கங்கைக்குத் தீபம் காட்டுதல் கூறப் பட்டது. பாடல் காட்சிகளும் சினிமாவில் சேர்த்துள்ளனர்.
    நன்று. இனிய கார்த்திகைத் தீப வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. ஜோதியே1!
    சுடரே!!
    சூழ் ஒளி விளக்கே!!!

    தலைப்பும் தகவல்களும் அருமை.

    மேலிருந்து கீழாக 5 + 6 இரண்டு படங்களும் மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஜோதியே1!
    சுடரே!!
    சூழ் ஒளி விளக்கே!!!

    தலைப்பும் தகவல்களும் அருமை.

    மேலிருந்து கீழாக 5 + 6 இரண்டு படங்களும் மிகவும் பிடித்துள்ளது.//

    வணக்கம் ஐயா..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஜோதியே1!
    சுடரே!!
    சூழ் ஒளி விளக்கே!!!

    தலைப்பும் தகவல்களும் அருமை.

    மேலிருந்து கீழாக 5 + 6 இரண்டு படங்களும் மிகவும் பிடித்துள்ளது.//

    வணக்கம் ஐயா..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete