Thursday, November 29, 2012

ஓம் அருணாசலேஸ்வராய நம:





ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தரிசிக்கும்போது  சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்டு அருளிய பொக்கிஷம் திருவெம்பாவை.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி,
சிவலோகன், 
தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்,
அத்தன்,
ஆனந்தன் அமுதன்,
விண்ணுக்கு ஒரு மருந்து,
வேத விழுப்பொருள்,
சிவன்,
முன்னைப் பழம்,
தீயாடும் கூத்தன் 
என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.

அன்பருக்கு மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”
என்று 
போற்றப்படும் திருத்தலம் திருவண்ணாமலை எனப்படும் அருணாசலம்

  பார்வதி தேவி விளையாட்டாய் சிவகின் கண்களை பொத்தியதனால் உலகம் இருண்டது. 

ஈசனின் வல, இடக் கண்களான சந்திர, சூரியர்கள் களையிழந்தனர். 

நெற்றிக் கண்ணாகிய அக்னியும் அன்னையின் கைவிரல் பட்டுக் குளிர்ந்து போனதனால் வேள்விகள் தடைப்பட்டன. யாகங்களும், பூஜைகளும் இல்லாமல் போயின. 

உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கியதால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது. 

சினம் கொண்ட ஈசனின் கட்டளைப்படிஅன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று, சாப நிவர்த்தியான தலம் தான் அண்ணாமலை. 

சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். 

அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது 

”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

Adi Annamalai Temple 






11 comments:

  1. வணக்கம் அம்மா...

    அருமையான விளக்கங்களுடன் சிறப்பான, அழகான படங்கள்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. கார்த்திகை தீபப் பெருநாளுக்கு
    விளக்கம் அறிந்துகொண்டேன்
    சகோதரி...
    வழக்கம் போல படங்கள்
    மனதில் நிலைகுத்தி நிற்கின்றன....

    ReplyDelete
  3. அருணாசலேஸ்வரர் தரிசனம் கிடைக்கப்பெற்றோம் நன்றி

    ReplyDelete
  4. தீபத்திருநாள் செய்திகள் எல்லாம் அற்புதம். தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாட படுவது மகிழ்ச்சியான செய்தி.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு . உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. படங்கள் மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....


    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் அருமை. எல்லா படங்களுமே பிரமாதம்.

    ReplyDelete
  7. இந்த மாதம் கிரிவலம் செல்ல இயலாத மனக்குறை தங்கள் பதிவுகளால் தீர்ந்தது. மிகவும் நன்றி அம்மா.

    ReplyDelete
  8. படங்கள் அழகு மேடம்.....ஒம் சிவாய நமஹ!!

    ReplyDelete
  9. ஓம் அருணாசலேஸ்வராய நம:

    எல்லாப்படங்களும் விளக்கங்களும் அழகோ அழகு.

    கீழிருந்து எட்டாம் படத்தில் புடவை + வேஷ்டியுடன், ஏராளமான புஷ்ப அலங்காரங்களுடன் ... ஜோர் ஜோர்.

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஓம் அருணாசலேஸ்வராய நம:

    எல்லாப்படங்களும் விளக்கங்களும் அழகோ அழகு.

    கீழிருந்து எட்டாம் படத்தில் புடவை + வேஷ்டியுடன், ஏராளமான புஷ்ப அலங்காரங்களுடன் ... ஜோர் ஜோர்.

    வணக்கம் ஐயா..

    ஜோரான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete