Thursday, August 8, 2013

அகிலாண்ட கோடி அன்னை



மறிகடல்கள்  ஏழையும்  திகிரி  இரு   நான்கையும் மா கரியெட்டையும் 
மாநாகம்  ஆனதையும்  மாமேரு  என்பதையும்  மாகூர்மம்   ஆனதையும்   ஓர் 

பொறியரவு  தாங்கிவரும்  புவனம்  ஈரேழையும்  புத்தேளிர்   கூட்டத்தையும் பூமகளையும்  திகிரி  மாயவனையும்  அரையில்  புலியாடை உடையானையும் 

முறைமுறைகளாய் ஈன்ற முதியவர்களாய்ப் பழைமை முறைகள் தெரியாத நின்னை 
மூவுலகில்  உள்ளவர்கள்  வாளையென்றறியாமல் மொழிகின்ற   தேது   சொல்வாய்?

அறிவுநிறை  விழுமியர்தம்  ஆனந்த   வாரியே ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி ! அருள்வாமி !   அபிராமியே ! 
ஆடிப்பூரம் நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறுவார்கள்..

உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். 

ஆடிப்பூரம் நாளில் சித்தர்களும், யோகிகளும் தவத்தை துவக்குவார்கள்...

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். 

படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள் ஆடிப்பூரம். 

அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். 

தக்ஷிணாயனம் ஈசனது  வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். 

பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.
அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. 

ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். 

திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. 

முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.
ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. 

திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் ....!

திருவாரூர் கமலாம்பாள் ..

திருநாகை நீலாயதாக்ஷி அம்மன்...

திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று சந்தனக்காப்பு அலங்காரம்,  கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம்.

ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
அருள் சுரக்கும் விழிகளால்  வேண்டும் வரங்களை வழங்கி பல்வேறு பாக்கியங்களை அருளி இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தை வழங்கும் அலைமகளின் ஆலயம்
 (பாலையூர், கண்டனூர 630 104
சிவகங்கை மாவட்டம் )
”சந்திர பிறை பூங் கண்ணி! சற்று நீ திரும்பி பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்” என்று ஆதி சங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்ரத்தை ஏற்று அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை பொழிய விட்ட கருணையின் வடிவமான  தாயார்!







16 comments:

  1. அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகியான அன்னைக்கு என் அன்பு வந்தனங்கள்

    >>>>>

    ReplyDelete
  2. ஆடிப்பூரம் பற்றியும் அனைத்துக்கோயில்களிலும் அன்று நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் பற்றியும் அறியத்தந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. வழக்கம் போல படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    நன்கு உருண்டு திரண்டு மோத முழங்க ஓங்கி எழும்பி வளர்ந்துள்ள முளைப்பாலிகைப் படம் மிக நல்ல தேர்வு.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete

  4. அனைத்துப்படங்களும் பட விளக்கங்களும் அருமையோ அருமை

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    பஞ்ச பூதங்கள்
    பஞ்சாக்ஷரம்
    பஞ்சப்பிரகாரம்

    போல இன்னும் ஐந்தே ஐந்து பதிவுகளே பாக்கியுள்ளன ;)))))

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    வா ழ் த் து க ள் !

    ooooo 995 ooooo

    ReplyDelete
  5. வழக்கம் போல் அத்தனை படங்களும் அழகு...

    அம்மன், லட்சுமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    ReplyDelete
  6. அழகான படங்கள். அம்மன் அருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  7. அருள் அழகு சுந்தரி, ஆனந்தவல்லி
    அன்னை அபிராமியைத் துதிக்க
    அருண்டோடிடும் இன்னல்கள் யாவுமே!

    அருமையான பதிவும் பகிர்வும்!
    என் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  8. அம்சமான படங்களுடன் அருமையான படைப்பு!..அதிலும் அபிராமி திருப்பதிகத்தின் அழகான பாடல் மகுடம் போல் விளங்குகின்றது!..

    ReplyDelete
  9. ஆடிப்பூரம் தகவல்களும் படங்களும் அற்புதம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வழக்கம்போல் திரு உருவப்படங்களும்
    பதிவும் மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. ஆடிப் பூரத்தில் அம்மன் தரினம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சியாக இருந்தது.
    நன்றி.

    ReplyDelete
  12. ஆடிப்பூரம் - அம்மன் படங்கள் அத்தனையும் மிக மிகச் சிறப்பு. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. ஆடிப்பூரம் பற்றிய தகவல்களுக்கும் அழகிய படங்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. superb amman pictures especially the first on the top

    ReplyDelete
  15. Very very beautiful pics of amman, and wonderful explantion thank you very much madam...

    ReplyDelete