ஆவணி மாதம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் ஆலயத்தில், ஆவணி மூலப் பெருவிழா பன்னிரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெறும்.விழாவின்போது ஆவணிமூல வீதிகள் நான்கிலும் இறைவன் வலம் வருவார்.
சொக்கநாதப் பெருமான் நிகழ்த்திய 64 அருஞ்செயல்களை விவரிப்பதுதான் திருவிளையாடல் புராணட்த்தில் சில திருவிளையாடல்களை ஆவணி மூலத் திருவிழா நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது.
முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா
பன்னிரண்டாம் நாள் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும்.
கரிக்குருவிக்கு உபதேசம் செய்த லீலை.
வினைப் பயனால் கரிக்குருவியாகப் பிறந்த சிவபக்தன் குருவியிடம், ""நீ சோம சுந்தரரை வணங்கித் தவம் செய்'' என்று சொன்னதன்படியே கரிக்குருவி தவம் செய்ய, சோமசுந்தரர் காட்சி தந்து மிருத்யுஞ்சய மந்திர உபதேசம் செய்து குருவிக்கு முக்தியும் அளித்தார்.
நாரைக்கு முக்திகொடுத்த திருவிளையாடல்.
நாரை வசித்த குளக்கரையில், முனிவர்கள் மதுரைப் புராணமும் திருவிளையாடல் புராணமும் பாராயணம் செய்தனர். அந்தப் பாராயணத்தைக் கேட்ட நாரை சிவ நாமம் ஜெபித்து முக்தியடைந்தது.
மாணிக்க வியாபாரியாக சிவன் அவதாரமெடுத்து மாணிக்கம் விற்ற லீலை. .சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதியுலா வருவார்கள்.
தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை.
மன்னன் சண்பகப் பாண்டியன் தன் மனைவியின் கூந்தலுக்கு உள்ள மணம் இயற்கையா, செயற்கையா என ஐயம் கொண்டான். அதை விளக்க தருமியை சிவன் அனுப்ப, தருமியின் கருத்து தவறானது என்றார் நக்கீரர். சபைக்கு இறைவனே வந்து வாதிட்டபோதும் நக்கீரர், "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வாதிட்டார். நக்கீரரின் திறமையை உலகறியச் செய்த சிவன், தன் அடியவனான தருமிக்கும் பொற்கிழி கிடைக்கச் செய்தார்.
கடும் வறுமையிலும் தவறாமல் மகேஸ்வர பூஜை நடத்திவந்த அடியார்க்கு நல்லான்- தருமசீலை தம்பதிக்கு, எடுக்க எடுக்க குறையாத உணவுப்பொருட்கள் கிடைக்கும் உலவாகக் கோட்டை அருளிய லீலை.
அங்கம் வெட்டிய லீலை.
ஒரு குருவிடம் வாள்பயிற்சி பெற்ற சித்தன் என்பவன் தன் குருவுக்குப் போட்டியாக வித்யாகூடம் அமைத்தான். அத்துடன் குருவின் மனைவிக்கு துரோகம் செய்தான். அப்பெண் சோமசுந்தரரை வேண்டி முறையிட, சிவன் குருவின் உருவத்தில் வந்து சீடனுடன் வாட் போர் புரிந்து அவன் அங்கங்களை வெட்டினார்.
வளையல் விற்ற திருவிளையாடல்.
தாருகாவனத்து முனிவர்களின் கர்வம் அடக்க பிட்சாடனராக வலம்வந்தார் ஈசன். அவரின் பின்னால் முனிவர்களின் மனைவிகள் சென்றனர். முனிவர்களின் சாபத்தால் அப்பெண்கள் மதுரையில் வந்து பிறந்தனர்.
ஈசன் வளையல் வியாபாரியாக வந்து, வளையல்கள் அணிவிக்க அப்பெண்களின் கைகளைத் தொட அவர்கள் சாபம் நீங்கினர்.
ஏழாம் நாளிரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அத்துடன் இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும் பூஜைகள் நிகழ்த்தப்படும்.
நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல்.
அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர், மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளால் திருப்பெருந்துறையில் சிவனுக்கு ஒரு கோவில் எழுப்பினார். அதுதான் ஆவுடையார் கோவில்.
அதனால் மன்னன், மாணிக்கவாசகரைச் சிறையிலிட்டான்.
அவரைக் காக்கும் பொருட்டு சொக்கேசர் நரிகளைப் பரிகளாக்கி அனுப்பி வைத்தார். ஆவணி மூலத்தன்று அது நிகழ்ந்தது.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை.
பிட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது ...!.
ஆவணி மூலத்தன்று கொடுத்த குதிரைகள் விடிந்ததும் நரிகளாக மாறி ஓடின. மன்னன் கோபமடைந்தான்.
திருவாதவூரரை (மாணிக்கவாச கரை) வைகை ஆற்று மணலில் நிறுத்தி தண்டித்தாதனால் இறைவன் வைகையில் வெள்ளம் பெருகச் செய்தார். வெள்ளத்தால் உடைந்த கரையை அடைக்க வீட் டுக்கு ஒருவர் வரவேண்டுமென பாண்டிய மன்னன் உத்தரவிட்டான்.
பிள்ளைகள் யாருமில்லாத மூதாட்டி வந்தி என்பவள் சார்பாக சிவபெருமானே ஒரு கூலியாள்போல மண் சுமக்கச் சென்றார்.
சரியாக வேலை செய்யாமல் வேடிக்கை செய்துகொண்டிருந்த அந்தக் கூலியாளை மன்னன் பிரம்பாலடிக்க, அந்த அடி அனைவர்மீதும் விழுந்தது. மன்னன் இது இறைவன் செயலென உணர்ந்தான்.
சிவன் அனைவருக்கும் காட்சி தந்து மாணிக்கவாசகர் பெருமையை உணர்த்திய திருவிளையாடல் இது.
விறகு விற்ற லீலை.
பாணபத்ரர் என்ற பக்தருக்கு அருளவும், கர்வம் கொண்ட பாகவதருக்கு பாடம் புகட்டவும் இறைவன் விறகு வெட்டியாக வந்து திருருவிளையாடல் புரிந்தார்.
பதினொன்றாம் நாளன்று சட்டத் தேர் பவனி நடைபெறும்.
தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெறும்.
பன்னிரண்டு நாட்களும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெறும்.
ஆயிரமாயிர மாய்த் திரண்டுவந்து ஈசனின் திருவிளையாடல்களைப் பார்த்து மகிழ்ந்து, அருள் மழையில் நனைந்து ஆனந்தமடைவார்கள்....!
மதுரை மீனாட்சி அம்மன் கனக தண்டியல்(அம்மன் சயன திருக்கோலம்)
திருவிளையாடல் புராணமே படித்து முடித்த உணர்வைக் கொடுத்தது உங்கள் பதிவு.
ReplyDeleteமதுரை ஆவணி மாதத் திருவிழாவைக் கண் முன் கொண்டு நிறுத்தியதற்கு மிக்க நன்றி
மிக நன்றி இராஜராஜேஸ்வரி. இறைவனின் வரைபடம் அழகோ அழகு.
ReplyDeleteஅத்தனை திருவிளயாடல்களையும் நேரில் கண்டது நாங்கள் செய்த புண்ணியம். நன்றிமா.
அழகிய படங்களுடன் அருமையான பதிவு..
ReplyDeleteதிருவிளையாடல்களை சுருக்கமாக எழுதி பல புகைப் படங்களுடன் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஇறைவனின் திருவிளையாடல்களை அழகிய படங்களுடன் அழகாக பகிர்ந்திருக்கிறிர்கள் அக்கா...
ReplyDeleteஅனைத்துத் திருவிளையாடல்களும் நேரில் தரிசித்தது போல
ReplyDeleteஇருப்பது வெகு சிறப்பு. இது நடிகர் திலகத்தின் திரைப்படத்தையும்
நினைவூட்டுவதாகவும் உள்ளது .
பகிர்விற்கு நன்றி !
இன்றைய ‘திருவிளையாடல் திருவிழா’ என்ற தங்களின் பதிவு பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteபடங்களும் விளக்கங்களும் வெகு அருமை.
நிறைவாக இறுதியில் காட்டியுள்ள வெள்ளி அன்னபக்ஷி வாகனத்தில் அமர்ந்துள்ள அம்பாள் படமே என்னை இன்று மிகவும் கவர்ந்தது.
அந்தப் படத்தேர்வுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
அன்பான நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு என் நன்றியோ நன்றிகள்.
அம்பாளுக்கு அடியேனின் அன்பு வந்தனங்கள்.
இந்த திருவிழாவிற்குப் போக முடியாதவர்களுக்கு உங்களது இந்தப் பதிவு விருந்து. ஒவ்வொரு திருவிளையாடலும் மிகச் சிறப்பான அலங்காரத்துடன் காட்டப்பட்டிருப்பது அருமை. இறைவன் முகத்தில் என்னவொரு மந்தகாசம்!
ReplyDeleteஅருமையான பதிவுக்கு நன்றி ராஜி மேடம்
ReplyDeleteஈசனின் திருவிளையாடல் விழாவை கண்டு களித்து ஈசனின் அருள் பெற்றோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி.