Wednesday, August 14, 2013

சௌபாக்கியம் அருளும் கோவிந்த ரூபிணி






கோபாலசுந்தரி காயத்ரி

ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத். -

பாற்கடலில், கற்பக விருட்சத்தின் நடுவில் மணி மண்டபத்தில் ஒய்யாரமாக குழலூதியபடி, தன் கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கரும்பு  வில், புஷ்ப பாணம் போன்றவற்றை ஏந்தி பக்தர்களுக்கு அருள்புரியும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று வணங்கப்படும் கோபாலசுந்தரியை நமஸ்கரிக்கிறேன். 
 தாமரைக் கண்ணனும், சர்வாலங்காரங்களுடன் திகழ்பவனும் த்ரிபங்கி நிலையில் லலிதையோடு பேரழகாய் அருட்கோலம்  காட்டுபவனும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கோபாலனாம் கிருஷ்ணனை வணங்குகிறேன்.  
கோபாலசுந்தரி மந்திரங்கள் மிகவும்  அற்புதமானவை.
நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் பெருஞ்செல்வம் கிட்டும்.
கண்ணனின் திருவருளும் லலிதா பரமேஸ்வரியின் பேரருளும் கிட்டும். - 
ஆதிசங்கரர் எழுதிய அம்பிகை துதிகளில் மந்திரநூலாகத் திகழும்
நூறு ஸ்லோகங்களைக் கொண்ட சவுந்தர்யலஹரிக்குரிய 
ஆனந்தகிரி என்பவர் எழுதிய விளக்கவுரைக்கு "கோபால சுந்தரி' என்று பெயர். 

சவுந்தர்யலஹரி அம்பிகையை மட்டுமில்லாமல், அன்னையின் சகோதரரான விஷ்ணுவையும் போற்றுவதாக விளக்கம் தருகிறார். 

அண்ணனின் பெயரான கோபால், தங்கையின் பெயரான சுந்தரி இரண்டையும் இணைத்து "கோபாலசுந்தரி' என்று தன் உரைநூலுக்கு பெயரும் வைத்திருக்கிறார். 

சகோதர சகோதரியின் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக உரைநூல் அமைந்துள்ளது. 
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் அன்னை கோபாலசுந்தரியின் 
திருவடிவத்தில் கண்ணனே லலிதா திரிபுரசுந்தரியாகவும் 
லலிதா திரிபுரசுந்தரிய கண்ணனாகவும் அருட்கோலம் காட்டியருள்கின்றனர்
தேவியின் தியானத்தில் திருப்பாற்கடலிலுள்ள கற்பகவனத்தில் நவரத்தின மண்டபத்தின் நடுவில் ஸ்ரீபீடத்தில் எழுந்தருளி சங்கு, சக்கரம், புல்லாங்குழல், கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம் போன்றவற்றை ஏந்தி பிரம்மாதி தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவளுமான கோபாலசுந்தரியைப் போற்றுவோமாக 
எனக் கூறப்பட்டுள்ளது. - 
பூர்வஜென்மத்தில் செய்த சிறந்த புண்ணியத்தின் பயனாகவே இந்த ஜன்மாவில் கோபாலசுந்தரியை உபாசிக்கும் பாக்கியம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

மூவுலகங்களிலுமுள்ள மந்திரங்கள் அனைத்திற்கும் ஸ்ரீவித்யா தலைமை மந்திரமாக போற்றப்படுகிறது. 
த்ரிலோக வந்தினாம் ஸர்வ மந்த்ராணாம் ஸ்வாமினி என்று மந்த்ரமஹோததி எனும் நூலும்
ஸ்ரீவித்யா மந்த்ரநாயிகா எனவும் போற்றப்படும்  ஸ்ரீவித்யையை மட்டும் பாத்திரம் அறிந்தே தரப்படும் உயரிய தீட்சை ஆகும் ..

கண்ணனை கேசவன் என்றும் அழைப்பர். ‘க’ என்றால் அயன், ‘ஈச’ என்றால் அரன். அயனையும் அரனையும் தன்னுள் கொண்டவன் கேசவன். 
அயனுக்குத் தன் நாபியில் இடம் தந்து, அரனுக்குத் தன் வலப்பாகத்தில் பாதி இடம் தந்திருப்பதால் நாராயணனாம் கண்ணனை சங்கரநாராயணன் என்று  வழிபடுகின்றனர். 

சங்கரனும் சங்கரிக்குத் தன் இடப்பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரனானான். 
அர்த்த நாரீஸ்வரனாம் அரன், அரியில் பாதியாக  இணைந்து சங்கரநாராயணன் ஆகும்போது பராசக்தியாம் லலிதையும் கண்ணனோடு பாதியாய் இணைந்து கோபாலசுந்தரியாக வழிபடப்படுகிறாள். - 

உமாமகேஸ்வரனை வணங்கினால் நாராயணனை வணங்குவதே ஆகும். 

சங்கர நாராயணனாக இருப்பதால் அரியைப் பூஜித்தால் அரனை பூஜிப்பதாகவே ஆகும். 
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் அருளும் கண்ணன், கோபாலசுந்தரி தேவியின் வடிவமாகவே போற்றப்படுகிறார். 

உற்சவ ராஜகோபாலனின் திருவடியின் கீழ் ஸ்ரீசக்ரப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

த்ரிபங்க நிலையில் லலிதையைப் போன்றே அருட்கோலம் கொண்டுள்ளவர் இந்த மூர்த்தி. 

நாணயத்தின் ஒரு பக்கமான தலை நமக்குத் தெரிந்தால், அதன் மறுபக்கத்தில் பூ இருக்கவே செய்யும். ஆனால், தலை தெரியும்போது பூ நம் கண் ணில் படுவதில்லை அதைப்போல கண்ணனை வழிபடும்போது லலிதையும், லலிதையை வழிபடும் போது கண்ணனும் மறைந்துள்ளனர்.

 பூரண   ஞானமுடையவர்கள் இவ்விருவரையும் ஒன்றாகவே பாவித்து வழிபடுவர். -

தேவியே திருமாலுக்கு அளித்த முக்கியத்துவம் உணரப்படுகிறது. 

சக்தி வழிபாடே கிருஷ்ண உபாசனை. கோபாலசுந்தரியாகப் பிரகாசிப்பதால் தெய்வங்களில் வேறுபாடும், குறையும் காணக் கூடாது என்பதே மறைபொருளாகும். 

தான் எடுக்கும் ஒவ்வொரு திருவடிவத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு பலனை தன் உபாசகர்களுக்கு அருள்கிறாள் தேவி. 

அலுவலகத்திலுள்ளபோது நிர்வாகமும் உடையும் வேறு. வீட்டிலுள்ள போது நிர்வாகமும் உடுப்பும் வேறு. அங்கு தொழிலாளி. இங்கு குடும்பத் தலைவன். இடத்திற்கும் பெயருக்கும் ஏற்ப பெயர்களில்தான் வித்தியாசம். வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே ஞானம் என்பதை தேவியின் இத்திருவுருவம் உணர்த்துகிறது. - 

அடியார்களின் காமங்கள் எனும் விருப்பங்களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும், யாவரும் விரும்பும் அதிசுந்தரத் திருமேனி கொண்டதாலும் கோபாலனாம் கோபாலசுந்தரி, காமீ காந்தா  எனப் போற்றப்படுகிறாள்.

திருமாலுக்குப் பற்பல நாமங்கள். விருப்பம் எதுவாயினும் உண்மையாக எளிதில் நிறைவேறுவதால் அவன் ஸத்யகாமன். -

ஆண் பிள்ளையை சிறுமியாக வேடமிட்டு ரசிப்பது போல்  கோபாலனே கோபால சுந்தரியாக உருவெடுத்த பேரழகினை உபாசித்து ஆனந்தம் அடையலாம்.

நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் இந்த  கோபாலசுந்தரியை ஸம்மோஹனகிருஷ்ணன் எனும் திருப்பெயரில் தரிசித்து அருள் பெறலாம். -
சிவசக்தி ஐக்கிய வடிவான அர்த்தநாரீஸ்வர வடிவம் அடியார்களுக்கு அருள்வது போல் கண்ணனும் லலிதையும் கோபாலசுந்தரியாக அடியவர்க்கு  அருள்கின்றனர். 

கண்ணனும் தேவியும் ஒன்றே என்பதை ‘கோப்த்ரீண்யை நமஹ’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமமும் போற்றுகிறது. 

 கோபாலனும் சுந்தரியும் இணைந்த திருக்கோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.
மழலை வரம் வேண்டுவோர்க்கு தப்பாமல் அந்த வரம் பூர்த்தியாகும்.
கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.
அனைத்து சம்பத்துக்களையும் அளிக்கும். சகல சித்திகளும் கைவரும். தேவியை உபாசித்தார்களானால், குபேர வாழ்வு பெறலாம். 

பூரண அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து கருணை மழை பொழியும் கண்களோடும் ரத்ன  கிரீடமும் மயில்பீலியும் தரித்து அருளும் கோபால சுந்தரி, வணங்குவோர் தீவினைகளை அகற்றிஆத்மஞானமும் அருள்பவள். 
ஷட்கோண யந்திரத்தில் ஓங்காரமாகவும் ஒய்யாரமாகவும் நின்று குழலூதி உலகைக் காக்கும் கோபாலசுந்தரியைப் பணிந்து சகல நலன்களையும்  பெறுவோம். 





[HariHaran.jpg]

18 comments:

  1. திருவுருவப் படங்களைத் தரிசித்தும்
    பதிவைனைப் படித்தும் மனம் மகிழ்வு மிகக் கொண்டோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. கோபால சுந்தரியைப் பணிவோம் சகல நன்மைகளும் பெறுவோம். நன்றி

    ReplyDelete
  3. இளங்காலைப் பொழுதில் மங்கலகரமான தகவல்களுடன் அருமையான பதிவு!..மனம் நிறைகின்றது!..

    ReplyDelete
  4. இன்று கோவிந்த ரூபிணியை தரிசிக்க வைத்ததர்க்கு நன்றி ராஜி மேடம்

    ReplyDelete
  5. அத்தனைப் படங்களிலும் ஜொலிக்கும் அருளாண்மை போற்றும்படி இருக்கிறது.நமஸ்காரம் இராஜராஜேஸ்வரி. ஈஸ்வரதத்துவம், அம்பிகை திருமால் சகோதரத்துவம் எல்லாம் இணைந்து ஒரு மனநிறைவான பதிவாகிவிட்டது. மிக மிக நன்றிமா.

    ReplyDelete
  6. செல்லக்குட்டிப்போல இப்படி ஒரு சௌந்தர்ய க்ருஷ்ணனை நான் பார்த்ததே இல்லை எங்கும்... எத்தனை சௌந்தர்யம்.. எத்தனை அழகு.. நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. முதல் படமே மனதை கொள்ளைக்கொண்டு விட்டது இராஜிம்மா...

    அதன்பின் நீங்கள் பகிர்ந்த படங்களும் சரி விளக்கங்களும் சரி ஆச்சர்யத்தின் உச்சத்தில் நான்...

    முதன் முறை கேள்விப்படுகிறேன் கோபாலசுந்தரி..

    சிவனை வழிப்பட்டால் நாராயணனையும் தரிசித்த பாக்கியம்..

    சௌந்தர்யலஹரி எழுதியவரே இதன் விளக்கத்தை எழுதி இதற்கு கோபாலசுந்தரி என்று பெயரிட்டார்..

    அதாவது அம்பிகையின் சகோதரனான விஷ்ணுவைப்பற்றியும் ஸ்லோகத்தில் வருவதால்... அற்புதம்.. அதி அற்புதம்...

    அர்த்தநாரீஸ்வரர் அம்பிக்கைக்கு தன்னில் பாதி கொடுத்ததால்...
    நாராயணனுக்கும் சரி பாதி தந்திருக்கும் சிவன்....

    மன்னார்குடியில் தரிசிக்கலாம் இவரை...

    ஸம்மோஹன க்ருஷ்ணன் பற்றிய படமும் பகிர்வும் ஏற்கனவே ஒரு முறை ரிஷபன் சார் சொன்னபோதும் ஆச்சர்யப்பட்டேன்..

    இப்ப உங்களின் இந்த பகிர்வு படித்ததும்.. கண்டிப்பாக இந்த ஆலயத்திற்கு சென்று தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறதுப்பா...

    அற்புதமான பகிர்வு..

    எப்போதும் போல் ஆலயத்திற்கு வந்து தரிசித்துச்சென்ற மனநிறைவு ஏற்படுகிறதுப்பா...

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..

    ReplyDelete
  7. கோவிந்த ரூபிணி அறியாத தகவல். புதிதான படங்கள். அத்தனையும் புதியவை. அருமை!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  8. கோபாலனுடன் சுந்தரியும் இணைந்த திருக்கோலம் முதல் முறையாக தரிசனம் செய்கிறேன்..படங்களும் தகவல்களும் அரிதானவை. பகிர்விற்கு மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  9. மன்னார்குடி ராஜகோபாலனை கோவிந்த ரூபிணியாக உருவமைத்து அழகிய படங்களுடன் எங்களுக்கு விருந்தாகக் கொடுத்திருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  10. கோபால சுந்தரி என்ற பெயரே அழகாக உள்ளது.

    கோபாலன் என்னும் ஸ்ரீகிருஷ்ணனும் அழகு, சுந்தரி என்றாலே அழகி என்று பொருள். இவை இரண்டும் சேர்ந்ததும் அழகுக்கு அழகு சேர்க்கும் ஆச்சர்யமான செளந்தர்யமான பெயராக உள்ளது.

    கோவிந்த ரூபிணி என்ற தலைப்பு அதைவிட அழகாகக்கொடுத்துள்ளீர்கள். அதுவும் செளபாக்யம் அருள்பவள் என்று வேறு ........ சூப்பர்.

    தந்துள்ள விளக்கங்களைப் பலமுறை படித்து மகிழ்ந்தேன்.

    இதைவிட அழகாகப் புரியும்படியாக எளிமையாக யாராலும் விளக்கவே முடியாதுங்க.

    ஆண்குழந்தைகளுக்கு பெண் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ஆண் வேடமும் போடுவது போல என தாங்கள் சொல்லி இருப்பது தான் சுவையாக சுருக்கமாக கேட்கவும் சந்தோஷமாக உள்ளது.

    மன்னார்குடிக்கோயிலுக்கு நேரில் ஒரே ஒருமுறை சென்று வந்துள்ளேன்.

    முழு விபரம் தங்களின் இந்தப்பதிவினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

    நான் சொல்ல வந்த பல விஷயங்களை என் அன்புத்தங்கை மஞ்சு கொஞ்சிக்கொஞ்சி அவங்களுக்கே உரித்தன முறையில் சொல்லிவிட்டாங்க. அதுவே போதும்.

    வழக்கம் போல படங்கள் எல்லாமே அழகோ அழகாக உள்ளன,.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  11. கோவிந்த ரூபினி'யின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... மிக்க நன்றி பகிர்விற்கு...

    ReplyDelete
  12. இனிய பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கோபலசுந்தரி என்ற பெயர் அருமை.கோவிந்த ரூபினியின் அருள் கிடைக்க பெற்றோம்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. 1000மாவது பதிவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நல்லதொரு தகவல்கள் ப்டங்களுடன்
    த்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. achooooooooooo
    En chellakutty kannanedam errunthu kankalai thruppave manasu varalai Rajeswari....
    Very very nice post.
    viji

    ReplyDelete