கொடி வணக்கமது செய்வோம்-நாட்டின்குறைகள் நீங்கியினி உய்வோம்
முடி வணங்கிஅதைப் போற்றி-அதன் மூன்று நிறக்குறிகள் சாற்றி.
துறவின் வர்ணமந்தக் காவி-உலகின் துக்கப் பூட்டினுக்குச் சாவி
சிறையும் வீடுமதற் கொன்றே-என்னும் சேதி ஓதுவதற் கென்றே
துய்ய வெள்ளை நிறக் காட்சி-உண்மை துலங்கு மென்பதற்குச் சாட்சி
மையமாக நிற்கும் மர்மம்-சத்யம் மதங்கள் யாவினுக்கும் தர்மம்.
பச்சையான ஒரு தோற்றம்-நமக்குப் பக்தி வேண்டுமெனச் சாற்றும்
இச்சையான பொருள் கூடப்-பக்தி இருக்க வேணுமதை நாட.
ஆகஸ்ட் 15, 1947 சுதந்திர இந்தியாவின் பிறந்த நாள்.
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம்.
சுதந்திரத்திருநாள் பாரதத்தின் பழைய யுகத்தின் முடிவிற்கும்,
புது யுகத்தின் துவக்கத்திற்குமான அடையாளமாகும்.
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
நமது தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது.,
24 ஆரங்களுடன் கூடிய நீல வண்ணமுடையது.
சத்தியம், தர்மம், சட்டம் ஒழுங்கு, உண்மை போன்றவற்றை கடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று உணர்த்துகிறது.
சுதந்திரபோராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து மரியாதையும் செலுத்தும்
ஒரு உத்தமத் திரு நாள்.
சுதந்திரத்திருநாளில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் நமது நாட்டின் ஒற்றுமையையும் வளத்தையும் பறைசாற்றும் வகையில் நடத்தும் அணிவகுப்பில் ராணுவ ஊர்திகள், ஏவுகணைகள் அணிவகுத்து வரும் காட்சி உள்ளத்தில் தேசப்பற்றைப் பெருக்கெடுக்க செய்யும்.
இந்திய தேசிய உணர்வின் சின்னமாகவும், மானுடத்தின் ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழும் ஸ்ரீ அரவிந்தர், பூரண சுதந்திரம் என்பதை முதலில் உச்சரித்து இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டியவர்.
இந்தியாவின் சுதந்திரம் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதனை தனது ஆன்மீக ஆற்றலால் கண்டுகொண்டு இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற ஆன்மீக பணியை மேற்கொண்டவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குள தென்கிழக்கு மூலை மண்டபத்தில், தற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை, எதிர்கால தலைமுறையினர் அறியும் வகையில், ஒரு கல்தூணில், அசோக சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
"நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார்.
இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடிவதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வரும் எழுச்சியால், இளமை இந்தியா:"வேகமாக வளர்ந்து வருகிறது,
பெருமைமிகு பதிவு சகோதரியாரே. சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஉணர்வு பூர்வமான அருமையான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு மனமாஅர்ந்த நன்றி
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய சுதந்திரம் என்றும் வாழ்க!.. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஎல்லாம் இன்பமயம்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteசுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திர தில நல்வாழ்த்துகள்....
ReplyDeleteசுதந்திர தினநல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களும் பதிவும் வழக்கம் போல அருமை.
உணர்ச்சிமிக்க படைப்பு. பாராட்டுக்கள்.
வண்ண வண்ணப் படங்கள் கருத்தைக் கவர்ந்தன.
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்!
பல வண்ணப் படங்கள், பட்டொளி வீசிப் பறக்கும் பாரத தேசீயக் கொடியின் படஙகள் என அசத்தி இருக்கிறீர்கள். இதில் அழகிய கருத்துக் களையும் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete