





நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:
சர்வ மங்களங்களையும் அளிக்கும் திருமகள் திருவடி பதிக்கும் தினமாக பூஜிக்கப்படும் வரலட்சுமி விரத தினம்.
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி.
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி.




அம்பிகையை ஆத்மார்த்தமாக தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து
ஆடம்பரம் ஏதுமில்லாது அன்புடன் அன்னை மகாலட்சுமியை வரலட்சுமி வடிவாக வரவேற்று பூஜிப்பதுதான் வரலட்சுமி நோன்பின் நோக்கம்.


புரந்தரதாசர் இயற்றிய அற்புதமான புனிதத் துதியை அகம் ஒன்றிப் பாடி வரலட்சுமியை வரவேற்க தித்திக்கும் வாழ்வளிப்பாள் திருமகள்

பல்லவி - ஸ்ரீராகம்
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா நம்மம்ம நீ ஸௌபாக்யாதா லக்ஷ்மி பாரம்மா
சௌபாக்ய லக்ஷ்மியே வருவாய்.
நல்ல பாக்யங்களை அருளுபவளே உனக்கு நல்வரவு.
கனக வ்ருஷ்டி கரவுத பாரே மன காமனெய ஸித்தி ஸிதோரே
தினகர கோடி தேஜவு ஹொளெயுத ஜனகராயன குமாரி பாரே...
எங்கள் ஆசைகளையெல்லாம் சித்திக்கச் செய்ய கனக மழையைப் பொழியும் வகையில் கோடி சூர்ய பிரகாசமான ஒளியுடன் வருவாயாக. ஜனகராஜனின் குமாரியான எம் தாயே, வருக வருகவே!
சங்கேயில்லாத பாக்யவ கொட்டு கங்கண கைய்ய திருகுத பாரே
குங்குமாங்கிதே! பங்கஜ லோசனே! வெங்கட்ரமணன பட்டத ராணி
கஷ்டமே வராதபடியான குறைவில்லாத பாக்யத்தைக் கொடு;
கங்கணம் போட்ட கையால் அபயமளித்து வாம்மா.
குங்குமக்காரியே! தாமரைக் கண்ணாளே! (குங்குமத்தை நிகர்த்த சிவப்பு நிற தாமரை போன்ற கண்களை உடையவளே) வெங்கடரமணனின் பட்டத்து ராணியே வாம்மா.
(வரலட்சுமியை வீட்டினுள் வரவேற்றுச் சொல்வது)
அத்தித் தொலவித பக்தா மனயெஸி நித்ய மஹோத்ஸவ நித்ய ஸுமங்கள
ஸத்யவு தோருதஸ மனதலி சித்ததிஹொளயுவ புத்ததி பொம்பே.
எங்கள் வீட்டில் எப்பொழுதும் வந்து நிலைத்து நின்று நித்ய மகோத்சவமாக நடக்க வருகவே! சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சாதுக்களின் மனதில் எப்பொழுதும் சித்தி கிடைக்க அருள்பவள் நீயே.
ஸக்கர துப்பவ காலிவிஹரிஸு ஸுக்ர வாரத பூஜய வேளகே
அக்கரெயுள்ள அளகிரிராயன சொக்கு புரந்தல விடலனப்ரியே.
புரந்தர விட்டலனின் பிரியமான பாக்யத்தை அருளும் சௌபாக்யலக்ஷ்மியே வாம்மா.
வெள்ளிக்கிழமைகளில் செய்யும் பூஜையின்போது சர்க்கரை, நெய் ஆகியவற்றைக் கொண்டு நான் செய்யும் நைவேத்யத்தை ஏற்று அருள்க. உன் வரவு நல்வரவு ஆகுக. சௌபாக்யம் அருள என் அம்மாவே வாம்மா!
வரலட்சுமியை வரவேற்று வீடு வரும் மகாலட்சுமியை மனதாரப் பணிந்து பாக்யங்களைப் பெற சொல்லவேண்டிய துதி

ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸ்துதி
ஆதிலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி |
யசோதேஹி தனம் தேஹி ஸர்வ காமாம் ச தேஹிமே||
பரப்ரம்ம சொரூபமான ஆதிலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். புகழ், தனம் ஆகியவற்றைக் கொடு. என் நியாயமான தேவைகளை நிறைவேற்று.

ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே அஸ்து புத்ர பௌத்ர ப்ரதாயினி|
புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||
பிள்ளைகள், பேரன்களை அளிக்கும் சந்தான லக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். என் சந்ததியருக்கு வாரிசை கொடு. செல்வத்தைக் கொண்டு நிறைவேறும் ஆசைகளை ஈடேற அருள்வாய்.

வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ம வித்யா ஸ்வரூபிணி|
வித்யாம் தேஹி கலாம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||
பிரம்ம வித்யா சொரூபிணியான வித்யா லக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். வித்தைகளைக் கொடு. கலைகளைக் கொடு. எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.

தனலக்ஷ்மி நமஸ்தே அஸ்து. ஸர்வ தாரித்ரிய நாசினி|
தனம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||
ஏழ்மையை அழிக்கும் தனலட்சுமியே தனத்தைக் கொடு.
திருவைக்கொடு. எல்லா விருப்பங்களுக்கும் பூர்த்தியைக் கொடு.

தான்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வாபரண பூஷிதே|
தான்யம் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||
சர்வாபரண பூஷிதையான தான்யலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். தான்யத்தைக் கொடு. தனத்தைக் கொடு. இஷ்டங்களை நிறைவேற்று.
மேதாலக்ஷ்மி நமஸ்தே அஸ்து கலிகல்மஷ நாசினி |
ப்ரஜ்ஞாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
வினைப்பயனைத் தீர்க்கும் மேதாலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். எனக்கு ஞானத்தைக் கொடு. லக்ஷ்மிகரத்தைக் கொடு. ஆசைகளை நிறைவேற்று.


கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூ பிணி |
அச்வாம்ச்ச கோகுலம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
எல்லா தேவர்களின் அம்சங்களும் உள்ளவனே, உனக்கு நமஸ்காரம். ஆநிரை, குதிரைகள், அபீஷ்டங்களைக் கொடு.

வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி|
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
பராசக்தி சொரூபமான வீரலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம்.
எனக்கு வீர்யத்தைக் கொடு. பலத்தைக் கொடு.
பலிக்கக்கூடிய இஷ்டங்களைக் கொடு.
ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வ கார்ய ஜயப்ரதே |
ஜயம் தேஹி சுபம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தரும் ஜயலக்ஷ்மியே,
உனக்கு நமஸ்காரம். வெற்றியைக் கொடு. சுபத்தைக் கொடு.
சர்வா பீஷ்டத்தையும் கொடு.
பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌ மாங்கல்ய விவர்தினி |
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
சௌமாங்கல்யத்தை அருளும் பாக்ய லக்ஷ்மியே, உனக்கு நமஸ்காரம். பாக்யத்தைக் கொடு. திருவருளைக் கொடு.
எல்லா இஷ்டங் களையும் நிறைவேற்று.

கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்ஸ்தலஸ்திதே |
கீர்த்திம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
பகவான் மகாவிஷ்ணுவின் திருமார்பில் வசிக்கும் கீர்த்திலட்சுமியே, உனக்கு நமஸ்காரம். நீங்காப் புகழ் பெற உன் திருவருளைக் கொடு. சர்வாபீஷ்டத்தைக் கொடு.

ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வரோக நிவாரணி |
ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
எல்லா நோய்களையும் தீர்க்கக்கூடிய ஆரோக்யலட்சுமியே, உனக்கு நமஸ்காரம். நீண்ட ஆயுளையும் லட்சுமிகரத்தையும் கொடு. சர்வா பீஷ்டமும் நிறைவேற அருள் செய்.

ஸித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வ ஸித்திப்ரதாயினி |
ஸித்திம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||
எல்லா சித்திகளையும் அளிக்கும் சித்த லட்சுமியே உனக்கு நமஸ்காரம். சித்தியைக் கொடு. திருவருளைக் கொடு.
எனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.


சௌந்தர்ய லக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே |
ரூபம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
சர்வாலங்காரங்களுடன் விளங்கும் சௌந்தர்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். நல்ல வடிவம் கொடு. லட்சுமிகரத்தைக் கொடு.
சர்வா பீஷ்டமும் நிறைவேற அருள்செய்.

ஸாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து பக்தி முக்தி ப்ரதாயினி|
மோக்ஷம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||
பக்தி முக்தி என்று இரண்டையும் அளிக்க வல்ல சாம்ராஜ்ய லட்சுமியே, மோக்ஷத்தைக் கொடு. திருவருளைக்கொடு.
எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.

மங்களே மங்களாதார மாங்கல்ய மங்களப்ரதே |
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா ||
மாங்கல்யத்தை அருளக்கூடிய மங்களேஸ் வரியே மங்களத்தைப்பெற, மங்கள மயமான மாங்கல்யத்தை எனக்குக் கொடு.
.jpg)
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே |
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே ||
எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே, கே்ஷமத்தைக் கொடுப்பவளே, எல்லாவற் றையும் சாதிக்கக் கூடியவளே, த்ரயம்பகே, நாராயணியே, உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே உனக்கு நமஸ்காரம்.

சுபம் பவது கல்யாணி! ஆயுராரோக்ய ஸம்பதாம் |
மம சத்ரு விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே ||
அன்னை கல்யாணியே, சுபம் நடக்கட்டும். ஆயுள், ஆரோக்யம், சம்பத்துக்காகவும், என் எதிரிகளின் நாசத்துக்காகவும் தீப ஜோதியான உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.


சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்மஸுபூஜிதாம்
பத்ம பத்ராய நயநாம் வராபயகரோஜ்வலாம்
ஊர்த்வத் வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ரகாம்
பத்மாஸனே ஸுகாஸீனாம் பஜேஹம் ஸர்வமங்களாம்.
(வித்யாலக்ஷ்மி த்யானம்)
நான்கு கைகளை உடைய நாயகியே, பேரழகு பொலியும் திருமேனியைக் கொண்டவளே, வலக்கரங்களில் அபய ஹஸ்தமும் தாமரை மலரையும் ஏந்தியருள்பவளே, இடது கரங்களில் வரத ஹஸ்தமும் தாமரை மலரையும் கொண்டவளே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய சதுர்வித புருஷார்த்தங்களையும் தன்னை வணங்குவோர்க்கு அருளி, கல்வி, செல்வ வளம் செழிக்க அருள்பவளே, நமஸ்காரம்.
(இந்தத் துதியை வரலட்சுமி விரத தினத்தன்று ஆரம்பித்து ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் கல்வி, செல்வ வளம் செழிக்கும்.)


ரசித்தேன்.
ReplyDeleteவரலக்ஷ்மியின் அலங்காரம் முக்கியமாக பின் அலங்காரம்,மற்றும் உங்கள் கைவண்ணத்தில் பிராகாசிக்கும் கோலமும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.
ReplyDeleteஅந்த ஆரோக்கிய லக்ஷ்மி உங்களுக்கு நீண்ட ஆயுளைதர வேண்டுகிறேன்
ReplyDeleteஎரியும் விளக்குகளிலேயே ஆர்ம்பித்து அசத்தி இருக்கிறீர்கள். முழுதும் படித்துவிட்டு எழுதுகிறேன்
ReplyDeleteரசனையும் அழகுமாய் அருமையான பதிவு!
ReplyDeleteதாமதமான வாழ்த்துக்கள் என்றாலும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களை மணம் நிறைந்த மலர்கள் ஆயிரமாய் உங்களின் ஆயிரமாவது பதிவிற்கு, அன்புடன் அளிக்கிறேன்!! பெற்றுக்கொள்ளுங்கள்!!
அப்பப்பா நிறையப் படங்கள் . இதில் ஓரு படம் மட்டும் என்னால் காண முடிவில்லை.
ReplyDeleteஅனிய வாழ்த்து நல்ல விளக்கப் பதிவிற்கு
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தேவியின் வித விதமான அலங்கார படங்கள் அத்தனையும் அழகு.
ReplyDeleteஎனக்கும் வரம் தருவாய் அம்மா... அழகிய லக்ஸ்மி படங்கள்..
ReplyDeleteஅலங்காரங்கள் அழகு. பின்னழகும் ரசிக்கும்படி.
ReplyDeleteபாக்யாத லக்ஷ்மி பாரம்மா!
ReplyDeleteநன்னாளில் அருமையான பதிவு
வரலக்ஷ்மி தாயாரை எங்கள் இல்லங்களிலும் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள்! சர்வ மங்களத்தையும் கொடுக்கட்டும் தேவி!
ReplyDeleteநிறைவான பதிவு.. மங்கலகரமாக இலங்குகின்றது.. எல்லாருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவருள் பொங்கிப் பெருகுவதாக!..
ReplyDeleteமஹாலக்ஷ்மியின் மகத்தான பேரருள்
ReplyDeleteஅனைவருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்!
வரலட்சுமி விரதம் பற்றிய சிறந்த பதிவு.
ReplyDeleteஆடி வெள்ளிக்கிழமையும், வரலக்ஷ்மி விரதமுமான இன்றைக்கு ஏற்ற நல்ல பதிவு. மிகச்சிறப்பான படங்களுடனும் விளக்கங்களுடனும் உள்ளது.
ReplyDeleteமேலிருந்து கீழே 10வது வரிசையில் உள்ள அம்மன் க்யூட்டோ க்யூட். [வித்யா லக்ஷ்மி நமஸ்தேஸ்து என்ற ஸ்லோகத்திற்கு மேல் உள்ள படம்] எனக்கு அது தான் இன்றைய படங்களில் மிகவும் பிடித்துள்ளது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
சர்வமங்களத்தையும் கொடுத்துடிட்டீர்கள்...நன்றி அம்மா!!
ReplyDeleteவரலட்சுமி விரதம் பற்றி தெரிந்து கொள்ள படங்களுடன் அழகாக கொடுத்திருக்கிறீர்கள் அக்கா....
ReplyDelete