நமக்கு ஆத்மபலத்தைத் தரும் சூரியன் ஆவணி மாதத்தில் சூரியனுக்கு பலமான சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். .
ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், நிகழ்ந்ததாகச் சொல்வர்.
சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது
ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், நிகழ்ந்ததாகச் சொல்வர்.
சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது
சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடைய ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆவணி மாதம் மழைக்காலம். எனவே பாம்புகள் நடமாட்டத்தால் விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆவணியில் பாம்பு வழிபாடு மேற்கொண்டனர். நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்வித்தனர். ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், ஆவணி மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளை சிறப்பு வழிபாட்டுக்குரிய காலமாக கொண்டனர்
தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறும் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
, "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.
ஆவணி மாதம் மழைக்காலம். எனவே பாம்புகள் நடமாட்டத்தால் விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆவணியில் பாம்பு வழிபாடு மேற்கொண்டனர். நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்வித்தனர். ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், ஆவணி மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளை சிறப்பு வழிபாட்டுக்குரிய காலமாக கொண்டனர்
தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறும் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
, "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.
அகத்தியர் ராம பிரானுக்கு அருளிய ஆதித்ய ஹிருதயம் என்ற அற்புதமான மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள்.
எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.
ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.
முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.
எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.
ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.
முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.
"ஆதித்ய ஹ்ருதயம்
அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக
தியானம்
ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி
ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் தைவதைச்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:
ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.
ராம ராம மஹாபாகோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி
மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா... ராமா... போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும்
மிகுந்த புண்ணியத்தை அளிக்கக்கூடியதும்
வெற்றியைத் தரக்கூடியதும்
அளவற்ற உடல் வலிமையை தரக்கூடியதும்
உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற
ஸ்தோத்திரத்தை நீ அனுதினமும் ஜபிக்க வேண்டும்.
இந்த ஸ்தோத்திரம், சூரியனுடைய இதயத்தில் வசிக்கும்
பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்
எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய
மந்திரங்களுக்கு மேலான மந்திரம் இது.
எல்லா பாவங்களையும் போக்கவல்லது.
மனக்கவலை, உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது.
ஆயுளை விருத்தி செய்யும். எல்லா மந்திரங்களை விடவும்
சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.
ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்
ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும் தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும் ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயே உலகை ரட்சிப்பவர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன் கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்த சூரியனே.
ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:
சூரியனே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும் பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும் குபேரனாகவும் காலமாகவும் யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.
சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்த மருந்துகளாகவும் மனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும், பிராணனாகவும் பருவ காலங்களை உருவாக்குபவராகவும் ஒளி பரப்புபவராகவும் திகழ்கிறார்.
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண - ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர:
சூரியன் அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர். கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில் சஞ்சரிப்பவர். மழையால் உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர். பொன்னிறமானவர். தங்க மயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர். பகலை சிருஷ்டித்தவர்.
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்
பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ள குதிரையை உடையவர். பிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர்.
சுகம் அளிப்பவர். உலகையே ஸம்ஹாரம் செய்பவர்.
உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே உருவானவர்.
ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன:
சூரியன் தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் .
காம, க்ரோத, லோப குணங்களைப் போக்குபவர்.
எரிச்சலைக் கொடுப்பவர். ஒளி மிகுந்தவர்.
எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத் தன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர். அதிதியின் புத்திரன்.
ஆகாசம் முழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.
வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம:
இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர்.
ரிக், யஜுர், ஸாம வேதங்களுடையப் பொழிவான உபநிஷத்துகளால் கொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர்.
நல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர்.
தட்சிணாயனத்தில் விந்திய மலை வழியாக சஞ்சரிப்பவர்.
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:
இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர். நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில் அனைவருக்கும் தாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும் உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச் செல்பவர். தேஜஸ் மிகுந்தவர். எல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும் காரணமானவர்.
நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே
இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே நமஸ்காரம்
நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:
கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம்.
மேற்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே,
பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.
ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:
என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே, பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம். ஆயிரக்கணக்கான கிரணங்களைக் கொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே, உலகிலேயே முதலில் உண்டானவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.
ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:
பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே, சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும் கொடுக்கப்படும் ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே,
நமஸ்காரம்.
தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:
இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே, அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியை மறப்பவரை வீழ்த்துபவரே, நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.
தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே
உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப் போக்குபவரே, பிரகாசம் மிகுந்த வரே, உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.
நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:
மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார்.
மீண்டும் உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார்.
இவரே பாதுகாக்கிறார். இவரே தவிக்கவும் வைக்கிறார்.
தன் கிரணங்களால் மழை பொழிய வைக்கிறார்.
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம்
பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன் விழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம் வளர்க்கும் அக்கினியாகவும் அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.
வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:
வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும் உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாக
சூரியனே விளங்குகிறார்.
ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ:
ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம் நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள் எப்போது ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம் தோன்றினாலும் சரி, அப்போது மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும்,
எந்தத் துன்பமும் நெருங்க முடியாது, ராகவா!
பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி
ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே அதிபதியும் ஆன இந்த சூரியனை வழிபடுவாயாக.
இந்த ஸ்தோத்திரத் தை மூன்று முறை ஜபித்தாயானால்,
இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்
மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி, அகத்தியர் ராமனை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.
ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்
அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமர் அப்போதே தன் சோர்வு முற்றிலும் நீங்கியவரானார். மிகுந்த சந்தோஷத்துடன், புது உற்சாகத்துடன் ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினார்...
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்
மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப் பார்த்து ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும், புதுப்பிக்கப்பட்ட
தன்னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத்
மகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து பரமானந்தத்தை அடைந்தார்.
திடமான மனோபலத்துடன் ராவணனுக்கு எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனத்திண்மையாகக் கொண்டார்.
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி
அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி,
‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அறிய முடியாத சிலபுதிய விடயங்களை உங்கள் பதிவில் இருந்து அறியமுடிந்தது படங்கள் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆவணி ஞாயிறு அருமை
ReplyDeleteஆவணி ஞாயிறு சிறப்புக்கள் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆவணி ஞாயிறன்று, ஞாயிறு பற்றிய அருமையான விளக்கத்தைத் தந்தமைக்கு நன்றி! வழக்கம்போல் அருமையான புகைப்படங்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஆதித்ய ஹ்ருதயத்தை அர்த்தத்துடன் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!..
ReplyDeletethanks for sharing info on importance of avani sunday
ReplyDelete
ReplyDeleteஆதித்ய ஹ்ருதயம் என் மனைவி தொடர்ந்து படிப்பவள். உங்கள் இடுகையின் மூலம் நானும் ஒருமுறை அதனை தமிழில் அர்த்தம் தெரிந்து படித்தேன். பகிர்வுக்கு நன்றி.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கு ஏற்ற பொருத்தமான நல்ல பதிவாகக் கொடுத்து அசத்தியுள்ளதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களை அழகாக எடுத்துச்சொல்லி, அதற்கான பொருளையும் நன்கு ஆங்காங்கே விளக்கியுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
படங்கள் எல்லாமே வழக்கம் போல அருமை.
எங்கிருந்தாலும் வாழ்க!
உலகை தன் ஒளியைத் தந்து காக்கும் ஆதித்தயனான சூரியனைப் பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDelete'ஆயிரம் கரங்கள் நீட்டி....' பாடல் நினைவுக்கு வருகிறது.
பகிர்வுக்கு நன்றி!
சூரியநமஸ்காரம், சூரியனுக்கு விரதம் இருந்தால் நோய்நொடி போகும் என்று ஞாயிறு விரதம் இருக்கிறேன் என் அம்மாவின் ஆலோசனைப்படி.
ReplyDeleteஇன்று உங்கள் தளத்தில் எங்கள் வீடுகளில் ஆவணி ஞாயிறு சூரியனுக்கு பொங்கல் வைத்து வணங்குவோம்.
சூரியனை ஆவணி மாதம் சிறப்பாக வணங்குவதுப்பற்றியும், ஆயிரம் பலன்களை அள்ளி தருபவரைப்பற்றி விளக்கமாய் சொன்னதற்கும், அழகிய படங்கள் பகிர்வுக்கும் நன்றி.
ஆடி வெள்ளி முடிந்து ஆவணி ஞாயிறா...
ReplyDeleteபடங்களுடன் பகிர்வும் அருமை.
ஆவணி ஞாயிறை நினைவுபடுத்தினீங்க.. மறந்தே போய்விட்டேன். அடுத்தது புரட்டாதி சரி.
ReplyDeleteஅழகிய பதிவு.
ஆவணியின் சிறப்பை அள்ளி வழங்கும் பதிவு!
ReplyDelete