பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு.
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
என்று பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், சங்கு, சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடிய பெருந்தகை தன்னை யசோதையாகவும், பெருமாளை கண்ணனாகவும் பாவித்து பாசுரங்கள் பாடிய விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார்.
பெரியாழ்வார்ஆனி மாதம், சுகல பக்ஷம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய சுவாதி நட்சத்திரத்தில், , வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராக, கருடனின் அமசமாகஅவதாரம் செய்தார்.
தாய்ப்பாசத்தோடும், தன்னலமில்லாத அன்போடும், அவன் நலனை மட்டுமே எப்பொழுதும் இறைவனிடம் வேண்டும் இயல்புடையவர்.
மனம், சொல், சிந்தனை அனைத்திலுமே குழந்தையாய் எம் பிரானை நினைத்து, மிகுந்த அக்கறையோடு இருந்ததால் அவர் மற்ற ஆழ்வார்களை விட உயர்ந்தவராய் கருதப்படுகிறார்.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ர சாயிக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த பெரியாழ்வார். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்க்கும் பேறு பெற்றவர்...
பட்டர் பிரான் தன் வழக்கமான மலர்க் கைங்கரிய சேவையைச் செய்ய ஒரு நாள் நந்தவனத்திற்கு சென்று மலர்க் கொய்து கொண்டிருக்கையில், ஒரு துளசிச் செடியின் அடியில் சீதாதேவியின் அம்சமாக, பூதேவியின் புதல்வியாக அந்த குழந்தையைக் கண்டெடுத்தார்.
தன் தாயுமான ஆழ்வார் தனியே தவிப்பதைப் பொறுக்காத இறைவன், தன் துணைவியை அனுப்பி இறைவியை வளர்க்கும் பொறுப்பை அடியவருக்கு அளித்தருளினார்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
சூடித் தந்த சுடர்க் கொடியான'கோதை
" யார் முழு முதற் கடவுள்" ? என்ற வாதத்தில் பெரியாழ்வாரும் கலந்து கொண்டு, வேதப்பகுதியை எடுத்துக்காட்டி கூடல் மாநகரில் பலசமய சான்றோர்கள் கூடிய அந்த சபையில் தனது வாதத் திறமையால் அனைவரையும் தோற்க்கடித்து"விஷ்ணுவே முழுமுதற் கடவுள், வைணவ சமயமே மிகச்சிறந்த சமயம்" என்பதை நிருபித்தார். மன்னன் அறிவித்த பொற்கிழியையும் தானாக அவரது காலில் விழுந்தது .
வெற்றி பெற்ற பெரியாழ்வாரை மன்னன் தனது பட்டத்து யாணை மேலே ஏற்றி நகர் வலம் வரச்செய்தான் அரசன்..
பொற்கிழியுடன் தன் அன்பன் வலம் வரும் அழகை காண்பதற்காக ஆராவாமுதமான திருமால், ஸ்ரீ தேவியுடன் கருடாரூடராக அருட்காட்சிதந்த பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்க்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டுவிடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்தி பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு பாடிப் பரவினார் பெரியாழ்வார்..
superb
ReplyDeleteஆஹா... அற்புதமான படங்கள்... அருமையான விளக்கங்கள் ! நன்றி சகோதரி !
ReplyDeleteஎம் பெருமானைப் பற்றிய பதிவென்றாலே எமக்கு ஆனந்தம்! எம் சகோதரியின் பதிவுகளென்றாலே இனம் புரியாத ஆனந்தத்தாண்டவமாடுகிறது மனது. அனைவரது உள்ளங்களுக்கு பக்திக் களிப்பையும், ஆனந்தத்தையும் தந்து உள்ளத்தினை கொள்ளைகொள்கிற சகோதரிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
ReplyDeleteஆரா அமுதே நாராயணா ... தீரா வினைகளை தீர்க்க திருமகள் துணையுடன் வா கண்ணா !தத்ரூபமான படங்களுடன் அருமையான பகிர்வு..
ReplyDeleteபடங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteஆரா அமுதமும், அருள் தேனும் கலந்து குழைத்துத் தந்துள்ள மிகவும் ருசியானதோர் பதிவு.
ReplyDeleteபடங்கள் யாவும் அழகோ அழகு.
அருமை....
ReplyDeleteஅற்புதமான ஆண்டாள். விஷ்ணுவேதான் முழுமுதற் கடவுள். அருமையான படங்கள்.
ReplyDeleteவாவ்!அருமையிலும் அருமை.யானை வாகன ஃபோட்டோ அற்புதம்.
ReplyDeleteமீண்டும் பெரியாழ்வாரை அழைத்து இந்த ப்லாக்குக்கும் கண்ணேறு படாமல் இருக்க பாடச் சொல்லலாம்போலிருக்கிறது.
வெண்புழுதி மேல் பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறுபுகர் படவியர்த்து*
ஒண்போதலர் கமலச் சிறுக்காலுறைத்து ஒன்றும் நோவாமே*
தண்போது கொண்டதவிசின் மீதே தளர்நடைநடவானோ.
திரிவிக்கிரமனுக்கே தளர்நடைப் பாடலை அருளிய ஆழ்வாராயிற்றே!என்ன ஒரு தாய்மை!!
பகிர்தலுக்கு நன்றி
பெருமாளின் அழகிய வண்ண படங்களுடன் அருமையான நல்ல பகிர்வுக்கு நன்றி அக்கா...
ReplyDeleteகோதைநாச்சியாரின் படம் மிக நேர்த்தி.
ReplyDeleteஒளிரும் சூரியனுக்கு போட்டியாக , காதில் ஜிமிக்கி மற்றும் அணிகலன்கள்
ஒளிர்வது அருமை.
ஆராஅமுதன் படமும் அழகு.
வலைச்சரத்தில் இன்றும். வாழ்த்துகள்.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html
ReplyDeleteநான் யாரையும் அழைக்காமலேயே அவர்களாகவே 40 பேர்கள் வந்தாச்சு.
கடைசியாக ஹாரத்தி சுற்றவாவது வாருங்கள், என தங்களை மட்டுமே ஹாரத்தி சுற்றி வரவேற்கிறேன்.
அதுவும் ஏதோ என் மன நிறைவுக்காக மட்டுமே.
திருநறையூர் நம்பியும் வஞ்சுளவல்லி தரிசனமும் அற்புதம்
ReplyDeleteஅருமையான பகிர்வு..
ReplyDelete3558+3+1=3562
ReplyDelete