குங்குமவல்லி அம்மன் வளையல் அலங்காரம் - உறையூர் -திருச்சி
மங்களங்கள் மனம் நிறைய அளிக்கும் அன்னை, தன்னை நாடுவோர், வேண்டிய வண்ணமே காரியசித்தி அடைய வைத்து மனம் குளிரவைத்து, உன்னத வாழ்வு அளிப்பவள்..
ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருளுவார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் உற்சவம் நிகழ்த்தப்படும்...
அதிவிஷேச அம்சங்கள் பொருந்திய ஆடிமாதத்தில் மஹோற்சவ விழா கொண்டாடி ஆடியிலே தேரினில் ஆரோகணித்து அருள் புரியும் அம்பிகையை "அவள் அருளாலே அவதாள் வணங்கி" பேரருளைப் பெறுகிறோம்..
அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும்
ஆடிப்பூர நாள் ஆகும்.
அகிலாண்ட நாயகி வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து,
நெஞ்சம் நிறைந்து, தம் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது,ஆனந்தத்தை வழங்கக்கூடியது,
வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.
அம்பிகை மகப்பேறு அருளுபவராகவும், விவாகமாகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய அருள்பவராகவும், தாலிப்பாக்கியம் நிலைக்க அருள்பவராகவும் இருப்பதனால் இது போன்ற விழாக்களை நம் முன்னோர் முன்னெடுத்தனர்.
உமையவளாகிய பராசக்தியை லோகமாதா கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள்.
இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஐதீகம்..
வளையல் அலங்காரத்தில் அருள்பாலிக்கும்அம்மன்.
மல்லிகை மலர்களுக்கும் கண்ணாடி வளையல்களுக்குமாக, ஆண்டுதோறும் திருநறையூருக்கு சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக வந்து பதிமூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும் சமயபுரத்தாளுக்கு, விழாவின்போது பக்தர்கள் மல்லிகை மலர்களையும் வளையல்களையும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றனர்...
திருவிழாவின்போது, திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கிய வேண்டுபவர்கள், குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள் எல்லோரும் ஆகாச மாரியம்மனைப் பிரார்த்தனை செய்து வளையல்கள் சாற்றுவார்கள்.
இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து இன மக்களும் திரண்டு வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை விழாக் காலத்தில் செலுத்தும் இந்தத் திருக்கோயில், கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நாச்சியார்கோவில் கல் கருடன் ஆலயத்தில் இருந்து சனிபகவான் குடும்பத்துடன் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது.
இங்கு சமயபுரத்தாள், திருவுருவம் இல்லாமல் எல்லையம்மனாக எழுந்தருளி அருள்புரிகிறாள்.
ஒரு முறை வளையல் வியாபாரிகள் சமயபுரத்துக்கு வந்து அம்மனை வழிபட்டார்கள்.
நடு இரவில் மண்டபத்தில் படுத்திருந்த வளையல் வியாபாரியான பெரியவர் கனவில், இளம்பெண்ணாக வந்த சமயபுரத்தாள் கைகளில் வண்ணமயமான கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து, அணிய முற்படும்போது, வளையல்கள் ஒடிந்துகொண்டே வந்தன.
அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து, கோயிலை நோக்கிச் சென்றாள்.
கோயில் குருக்கள் திருநீறு, குங்குமம் கொண்ட பூஜைத்தட்டுடன் அவர்முன் நிற்பதைக் கண்டு அதிசயித்தார் வளையல்காரர்...
விடியற்காலை ஆத்தா என் கனவில் வந்து, வளையல் வியாபாரியான பெரியவர் கொண்டுவந்திருந்த வளையல்களைப் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டு, என் கையை நீட்டும்போதெல்லாம் விளையாட்டாக வளையல்கள் உடைந்துபோகும்படி செய்துவிட்டேன்.
நான் உடைத்த வளையல்களுக்குக் கிரயமாக, என் சந்நிதானத்தில் என் காலடியில் வைத்திருக்கும் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்து விடுங்கள்.
நான்தான் வந்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள, அவருடன் வந்திருக்கும் வியாபாரிகள் உடலில் என் முத்திரையைப் பதித்துள்ளேன்.
நீங்கள் பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதமான குங்குமத்தையும். திருநீற்றையும் அவர்கள் உடலில் பூசி விடுங்கள். எல்லாம் சரியாகி விடும் என்று உத்தரவு வந்தது. என்று சொன்ன குருக்கள், பொற்காசுகளைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.
அம்மை போட்டவர்களின் உடலில் திருநீறும் குங்குமமும் தெளிக்க, அம்மை முத்துக்கள் எல்லாம் மறைந்து, உடல்நலம் பெற்று எழுந்தார்கள்.
எல்லோரும் கோயிலுக்கு அருகில் ஓடும் ஆற்றில் நீராடிவிட்டு, குருக்களுடன் கோயிலுக்குச் சென்று அம்மனை மனமுருக தரிசனம் செய்தார்கள்.
அப்போது, ஆகாயத்தில் எல்லோருக்கும் காட்சி கொடுத்து அருளாசி வழங்கினாள் சமயபுரத்தாள்.
ஆகாசமாரியம்மன் என கொண்டாடப்பட்டாள் அன்னை..
வளையலால் அலங்காரம் செய்யப்பட்ட படங்கள் அருமை.. நன்றி சகோதரி !
ReplyDeleteஅம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்வது பற்றி நான் இப்பொழுதான் தெரிந்துகொண்டேன்... முதல் அம்மன் படத்திலே நான் மெய்மறந்து போய்விட்டேன் .... வளையல் அலங்காரத்தின் சிறப்பு பற்றியும் விளக்கியதற்கு மிக்க நன்றி ...
ReplyDeleteஅனைத்து அம்மன் படங்களும் அருமை... அக்கா நீங்கள் இந்த பதிவை எழுதியதற்கு மறுபடியும் என்னுடைய நன்றிகள் அக்கா....
மிகவும் அழகான பதிவு.
ReplyDeleteமீண்டும் ஒவ்வொன்றாக ரஸித்து விட்டு வருவேன்.
முதல் படத்தில் திருச்சி உறையூர் குங்கமவல்லி அம்மன் வளையல் என்ற வலையில் .. அல்ல .. அல்ல .. மலையில் மூழ்கி ஜொலிப்பது அழகோ அழகாக உள்ளது.
ReplyDeleteஇன்று என் உறவினர் ஒருவர் வீட்டில் அஷ்டபதி திவ்ய நாம பஜனை நடந்தது. நாளை அவர்கள் வீட்டிலேயே ஆடிப்பூரத்திற்காக ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவ்மும் நடைபெற உள்ளது.
ஸ்பெஷலாக என்னை அழைதததுடன், நான் என் கையினால் வரைந்த ஹனுமன் படத்தின் ஓர் பிரதியை அவர்களுக்கே அவர்களுக்காக என கொண்டு வந்து தரவேண்டும் எனவும் அன்புக்கட்டளை பிறப்பித்து விட்டார்கள்.
அவர்களின் அன்புக்கோரிக்கையையும் நிறைவேற்றிக்கொடுத்து விட்டு, திவ்யமாக திவ்யநாம பஜனைகளையும், ஸ்ரவனம் செய்து விட்டு, பிரஸாதம் சாப்பிட்டு விட்டு, இப்போது தான் வீடு திரும்பினேன்.
இங்குள்ள அம்மனைக் கண்டதும் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் என் மனம் துள்ளிக்குதிக்கிறது. ;)))))
சகோதரி மிகவும் ஆச்சரியமான தகவல்கள்!!!! இப்படி சாமி படங்கள் வளையலால் அலங்கரித்து நான் என்றுமே கணடதுமில்லை. புதுமை!!. ஒரு வேளை இந்தியாவில் இது சர்வ சாதரணமோ தெரியாது. எது எப்படியாயினும் மிக நன்றி. பாராட்டுகள்.
ReplyDeleteநல்வாழ்த்து.
அன்புடன்
வேதா. இலங்காதிலகம்.
திருச்சியில் பல வருடங்கள் தங்கி இருந்தாலும், இந்த வளையல் வைபோகம் தெரியாமல் இருந்திருக்கிறேன். தகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகாட்டியுள்ள அத்தனை வளையல்களும், வலையல் அலங்காரங்களும் மிக மிக RICH ஆக கண்ணைப்பறிப்பதாகக் காட்டி மகிழ்வித்துள்ளீர்கள்.
ReplyDeleteதங்களைப்போல இதுபோல மிகச்சிறப்பாக படம் காட்ட யாராலும் முடியாது.
எப்படித்தான் அழகழகான படங்களாகத் தேர்ந்தெடுத்துத் தருகிறீர்களோ? மிகவும் வியப்பாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளன. ;)))))
சமயபுரம் கோயில் கோபுரத்துடன் கூடிய அம்மனுக்கும், தனி கோபுரத்துக்கும் இடையே காட்டப்பட்டுள்ள பாம்பு போன்ற நெளிக்கோலம் சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteஎன்னவொரு மினுமினுப்பு ... அப்படியே சும்மா இரைட்டைக்கலர் இழைகளில் ஜொலிக்குது.
நடுநடுவே ஜொலிக்கும் கற்கள் அழகுக்கு அழகூட்டுவதாக உள்ளது.
அதை மீண்டும் மீண்டும் பார்த்துப் பார்த்து நான் பரவஸப் பட்டுப் போகிறேன்.
அமர்க்களமான கோலம். ;)))))
சமயபுரம் கோயில் படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஆகாசமாரியம்மன் கதையின் விளக்கங்கள் அதைவிட அருமை.
//அம்மை போட்டவர்களின் உடலில் திருநீறும் குங்குமமும் தெளிக்க, அம்மை முத்துக்கள் எல்லாம் மறைந்து, உடல்நலம் பெற்று எழுந்தார்கள்.//
படிக்கும்போதே மெய்சிலிர்த்துப் போகிறது.
மஹமாயீ, தாயே, நீயே என்றும் எனக்குத் துணையம்மா!
அருள்புரிந்து அனைவரையும் காத்தருள்வாய் தாயே!!
நாளைக்கு என் உறவினர் வீட்டில் நடைபெற உள்ள ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம் முடிந்த் கையோடு .....
ReplyDeleteஉறையூர் குங்குமவல்லி +
பீமநகர் செடல் மாரியம்மன் +
தென்னூர் சாரதாம்பாள்
ஆகிய மூவரையும் நாளை ஆடிப்பூரத்தன்று தரிஸித்து விட்டு வரவேண்டும் என்ற ஆசையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது தங்களின் இந்தப்பதிவு. ;)))))
நிச்சயமாக முயற்சிப்பேன்.
தரிஸிப்பேன்.
அழகிய பதிவுகள் மூலம் தூண்டுதல் கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
"வளம் வழங்கும் வளையல் அலங்காரம்"
ReplyDeleteஎன்ற தங்களின் இந்தப் பதிவினில்
முழுவதும் அழகு நிறைந்துள்ளது.
கவர்ச்சிகரமான வர்ணங்கள் உள்ளன.
விளக்கங்கள் ஒவ்வொன்றிலும் நீளம், அகலம், ஆழம், நம்பிக்கை, என முழுப் பரிமாணங்களையும் மிக நன்றாகவே உணரமுடிகிறது.
ஒவ்வொரு வளையல்களிலும் தங்களின் கடும் உழைப்பையும், உண்மையையும், சிரத்தையையும், தெய்வீகத் தன்மையையும், மென்மையையும், மேன்மையையும்
என்னால் நன்கு காண முடிகிறது.
எனக்கு என்ன சொல்லி தங்களைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
நிறைய வண்ண வண்ண வளையல்களை மிக அற்புதமாகக் காட்டி அனைவரையும் சுண்டி இழுத்து விட்டீர்கள், இன்று.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
மகிழ்வுடன் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு [பதிவினில் எத்தனை வளையல்கள் காட்டப்பட்டுள்ளனவோ அத்தனை] நன்றிகள்.
பிரியமுள்ள
vgk
இந்த அழகான அம்மன் வளையல்கள் பற்றிய பதிவினைக் கொடுத்துள்ள, தங்களின் இரு கரங்களுக்கும், தங்கத்திலும், வைரத்திலுமாக எவ்வளவு டஜன் வளையல்களை, [வளைகாப்புக்கு அடுக்குவது போல] அடுக்கினாலும், அது போதவே போதாது.
ReplyDeleteஇதுபோன்ற மிக அருமையானதொரு பதிவினைத் தந்துள்ள, தங்களின் பொற்கரங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்.
தாங்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று பல்லாண்டு வாழவும், தொடர்ந்து இதுபோன்ற மிகச்சிறப்பான பதிவுகள் தந்து அனைவரையும் மகிழ்விக்கவும்
வேண்டுமாய், அந்த வளையல் அணிந்த அனைத்து அம்மன்களிடமும் வேண்டி வணங்குகிறோம்.
வாழ்க! வளர்க!! அன்பான ஆசிகள்.
vgk
அனைவரும் தவறவிடாமல் தரிசிக்க வேண்டிய ஆலையம் சமயபுரம்! தகவல்கள் வழக்கம்போல் பிரமிப்பு! படங்கள் வெகு அழகு!
ReplyDeleteவளையல் அலங்காரங்கள் கண்ணைப்பறிக்குது. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅழகான அம்மன் படங்களுடன் ஆடிப்பூர தரிசனம் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஅருள் பெற்றேன்.
ReplyDeleteஆடி பூரத்திற்கு எங்கள் ஊரிலும் வளையல் அலங்காரம் செய்து வணங்குவோம். வளையல் சட்டைத்துணி, மஞ்சள் குங்குமம் , மற்றும் பிரசாதங்கள் வைத்து வணங்கி ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.
ReplyDeleteஅம்மனின் வளையல் அலங்கார படங்கள் எல்லாம் மிக அருமை.
ஆடி பூரத்திற்கு எங்கள் ஊரிலும் வளையல் அலங்காரம் செய்து வணங்குவோம். வளையல் சட்டைத்துணி, மஞ்சள் குங்குமம் , மற்றும் பிரசாதங்கள் வைத்து வணங்கி ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.
ReplyDeleteஅம்மனின் வளையல் அலங்கார படங்கள் எல்லாம் மிக அருமை.
எங்கள் ஊரிலும் ஆடிபூரத்திற்கு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வணங்கி இருக்கிறோம்.
ReplyDeleteஒவ்வொருவரும் ஆடி பூரத்திற்கு அம்மனுக்கு , வளையல், சட்டைத்துணி, மஞ்சள், குங்குமம், மற்றும் பிரசாதங்கள் வைத்து வழிபட்டு மற்றவர்களுக்கு அதை கொடுத்து மகிழ்வார்கள்.
அம்மனின் வளையல் அலங்கார படங்கள் எல்லாம் அழகு.
அம்மனின் வளையல் அலங்காரப் படங்களை ஒருசேர பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. சமயபுரம் மாரியம்மன் பற்றி கூடுதல் தகவல்கள்.
ReplyDeleteவண்ண வண்ண அழகான வளையல் அலங்காரத்தில் அம்மனின் ஆடி பூர தரிசனம் மனதிற்கு ஆனந்தத்தை தருகின்றது.அனைத்து படங்களும் கண் கொள்ளாக்காட்சி.
ReplyDeleteதங்களின் இந்தப்பதிவினால் இன்று, நேரில் சென்று உறையூர் குங்குமவல்லி அம்மனைக் கண்குளிர தரிஸித்து விட்டு வந்தோம்.
ReplyDeleteவளையல் குவியலுடன் அம்மன் தரிஸனம் வெகு ஜோர்.
தங்களையும் நினைத்துக்கொண்டு, தங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு, நமஸ்கரித்து வரும் பாக்யம் பெற்றோம்.
பகல் 11.30 மணி. கோயில் பூட்டும் நேரம். நல்ல வேளையாக நன்கு தரிஸிக்க முடிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
vgk
அடேயப்பா வளையலைகொண்டு இத்தனை அலங்காரமா? அருமை
ReplyDeleteஅம்மனுக்கு வளையல் அலங்காரம் அற்புதமாய் கருத்தை நிறைத்தது.. பாராட்டுக்கள்..
ReplyDelete3679+9+1=3689
ReplyDelete