
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும் ,
தெளிவும் ,தைரியமும் அளிக்கும் மாமருந்தாக திகழ்கிறது..
கதிரவனைக் காணக் கைவிளக்கு தேவையா?
நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதாவது உடலும் உள்ளமும் துவளும் போதெல்லாம் வாயுபுத்திரன்
அனுமன் புஷ்டியை அளித்துக் காப்பான்.

சங்கடங்கள், ஆபத்துகள் நிறைந்த நேரங்களில் மனம் நிலைகுலையாது செயலாற்றும் நிர்பயத்துவம் என்ற பயமின்மை தரும் மகிமை அனுமனை வணங்கினால் கிடைக்கும் .

ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம்.
.jpg)
புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறும் நிலை மாற்றி நமக்கு வெற்றித்திருமகளின் கருணை பொழியும் பார்வையைப் பெற்றுத்தருவான் ராமதூதன் அனுமான் ...
அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும்,
நிச்சயம் கிடைக்கும்.
நிச்சயம் கிடைக்கும்.

யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.
பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் பீமனுக்கும் பெரிய பலவான் வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம்.

அநுமனை வணங்கினால் நாளும் கோளும் நம்மை வாட்டாது.
சோகமும் துரோகமும் நம்மை அண்டாது..
அஞ்சனா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ம சாரிணம்,
துஷ்டக்ரஹ வினாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹம்மஹே

அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம்.

முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி.
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்,
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும், தொழுவோம்.
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும், தொழுவோம்.

நல்ல அழகான பதிவு.
ReplyDeleteவழக்கம்போல நல்ல சூப்பரான படங்கள்.
சுவையான விஷயங்கள்.
நாளை வெளியாக இருக்கும் தங்களின் வெற்றிகரமான
600 ஆவது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
நாளை .....
இந்த வேளை .... பார்த்து
ஓடி வா ..... நிலா!
அனைத்து படங்களும் அருமை ... ஸ்ரீ ஹனுமானைப் பற்றி செய்திகளும் அற்புதம்.... வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteபடங்களை விட்டு கண்ணை எடுக்கவே முடியல்லே. தகவல்களும் சுவாரசியம்
ReplyDeleteபடங்களும் தகவல்களும் சுவாரசியம்....
ReplyDeleteஐந்தாவது புகைப்படமான... எப்போதும் அவர் அமரும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. வலிமை பொருந்திய தேகத்திற்கு உதாரணம் அனுமன் தான் :)
ReplyDeleteவழக்கம் போல் தகவல்கள் அருமை.!
ரசித்து உருகினேன்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை. அனுமனுடைய வால் எப்பவும் மேல்நோக்கி இருக்கும்படியான படங்கள்தானாம் வீட்டில் வைத்து வணங்க வெண்டும் எனக் கேள்விப்பட்டேன்.
ReplyDeleteமாருதியை போற்றி வணங்குவோம்.
ReplyDeleteராம...ராம ... ராம்.
This comment has been removed by the author.
ReplyDelete//காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும் தொழுவோம்//
ReplyDeleteமிகவும் ஈர்த்தது இந்த வரிகள்.
ஸ்லோகங்களுடன் கூடிய படங்கள் அற்புதம்.பகிர்விற்கு நன்றி
மஹிமை மிக்க மஹா பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteபதிவு அருமை !! நண்பர்களே எப்பொழுதெல்லாம் ராமதூதனை காண்கிறீர்களோ !அப்பொழுதெல்லாம் சொல்லுங்கள் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !! ஆஞ்சநேயருக்கு பிடித்த இந்த மந்திரத்தைக் கூறும்போது மனம் இலகுவாகி வேண்டும் வரங்களை பூர்த்தி செய்து விடுகிறார் !!
ReplyDeletegood pics v informatve keep wrtng fr us
ReplyDelete”அஷே ஷானாத் மஷி ஜகத: ஹம் ஷ்ரயந்தி முகுந்தம்
ReplyDeleteலஷ்மி பத்மா ஜலஜீத நயா விஷ்ணு பத்னீந்தீரேதி!
யந்நாமாநி ஸ்ருதி பரிபணாந் மாவந்த் தயந்தோ
நாவந்த் தந்தே துரிதபவன இப்ரேரிதே ஜன்ம சக்ரே!!
இலக்குமி! இந்திரா! லஷிரஸாகரசம் பனவ
விஷ்ணு பத்னீ பத்மாவே”
மங்களம் பெருகட்டும்! வாழ்த்துக்கள் இனிய பகிர்விற்கு!
ஓம் ராம்!
3620+1+1=3622
ReplyDelete