ஸ்வர்ணாகர்சன பைரவ மந்திரம்
ஓம் ஜம் க்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம்
ஆபதோத்தாரனாய அஜாமிள பந்தனாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்சன பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷனாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ
"ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே ஆடி அருளும் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் பொற்கோயிலில் உள்ள சிற்றம்பலத்தினுள்ளே எழுந்தருளியுள்ள பைரவர் சொர்ண ஆகர்சன பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் ஸ்வர்ணாகர்சன பைரவர்
உற்சவத்திருமேனியாக உள்ள பைரவப் பெருமான் நின்றவாறு மேற்கரங்களில் பாசம், டமருகமும், கீழ்கரங்களில் சூலம், கபாலமும் மேல்நோக்கிய அக்னி கேசத்துடன் அவருடைய இடப்பாகத்தில் அடியார்களை நோக்கியவாறு உள்ள நாய் வாகனத்துடன் திருக்காட்சியளிக்கிறார்.
பைரவருக்கு இங்கே உச்சிக்காலத்தில் நெய், பால், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து நெய்யில் செய்யப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து அர்ச்சனை செய்விக்கிறார்கள்.
முற்காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சதர்கள் தங்களுக்கென்று எவரிடமும் பொன்னோ, பொருளோ பெறுவதில்லை.
அவர்கள் இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் செம்பினால் உருவாக்கிய தாமரை மலரைப் பைரவரின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு சென்றுவிடுவர்.
மறுநாள் காலை வந்து பார்க்க அந்த செப்புத் தாமரை சுவர்ணத்தாமரையாக அவர்களது பணிக்கான பலனுக்கேற்ப மாறி இருக்குமாம்.
பின்அதை விற்று அந்தப் பணத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களாம்.
ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது
மஞ்சள் பட்டு உடுத்தி,
மஞ்சள் பட்டு உடுத்தி,
விலையுயர்ந்த அணிமணிகளை அணிந்து,
நவரத்ன கிரீடம் சூடி,
செந்நிற மேனியராய்,
அன்றலர்ந்த தாமரை போல் புன்னகை பூக்கும் திருமுகத்துடன்,
பொன்னிற முடியில் சந்திரனைச் சூடி,
சுந்தரரூபனாக கரங்களில் தாமரை,
பொன்மணிகள் பதித்த கங்கம்,
அமுதக்கும்பம்,
அபய, வரத முத்திரைகளுடன் பொன் பொழியும் குடந்தனை கரத்தில தாங்கி மறுகரத்தால் தம்மைத் தழுவும் ஆதிசக்தியான சர்வ சக்தி வாய்ந்த புன்முறுவல் பூத்த முகத்தினனாய்
பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் தழுவியவர் என்று விளிக்கிறது.
சிவசக்தி வடிவில் உள்ள ஸ்ரீ சொர்ணாகர்சன பைரவரை உள்ளன்போடு வணங்கி வர சகல செளபாக்கியங்களும் தானாய் இல்லம் வந்து சேரும்
சொர்ணாகர்சன பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, பெளர்ணமி, பிரதோஷகாலம், திங்கட்கிழமை சந்தியாகாலம், திருவாதிரை நட்சத்திர நாள் உகந்த நாட்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும்
சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும்.
இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27)மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர்
நம் நலம், வளம் காக்கும் பைரவ வழிபாடு
சொர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம்.
சொர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர்
என்று பொருளாகும்.
பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர்.
.
அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு. மீண்டும் வருவேன், நடராஜா!
ReplyDeleteகடைசிபடத்தில் நல்லதொரு வசீகரம் உள்ளது.
ReplyDeleteமஞ்சள் + ச்ந்தனக்கலவையில் தேகம், மஞ்சள் கலர் சேர்ந்த புஷ்ப மாலை, மஞ்சளில் எலுமிச்சம் பழங்கள், திருவாசியிலும் மஞ்சளில் அலங்காரம்.
ஒரே, மஞ்சள் முகமே வருக... தான்.
கடைசிக்கு முந்திய படத்தில் ....
ReplyDeleteஆஹா, நம் வடை ... வடை மாலை.
நல்லா உப்பலான கொழுத்த வடை -
அனுமனைப்போல பைரவனுக்கும் இது இஷ்டம் போலுள்ளது.
அதுசரி, வடையை பிடிக்காதவர் யார் தான் உண்டு?
ஸ்வர்ணாகர்சன பைரவ மந்திரமான..
ReplyDeleteஓம் ஜம் க்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம் .....
சொல்லும் போதே ஒருவித த்ரில்லிங்காகவல்லவா உள்ளது?
முதல் படத்தில் காட்டியுள்ள பார்வதி பரமேஸ்வரர் ஒரு புது மாதிரியாக உள்ளது, தனிச்சிறப்பாக உள்ளது.
மிகச்சிறப்பான பதிவு அஷ்டமி நாளில் அழகிய சொர்ணாகர்ஷண பைரவர் தரிசனம்! நன்றி!
ReplyDeleteஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது எனச்சொல்லியுள்ளவை எல்லாமே அப்படியே அவரை பாதாதி கேஸம் நேரில் தரிஸித்து மகிழ்வது போல உள்ளது.
ReplyDeleteஅதுவும்
பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் தழுவியவர்
பின்னே என்ன கவலை அவருக்கு! ;)))))
//சொர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர்,
ReplyDeleteஅதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.//
ஆஹா! பொருளானது எனக்கும்.
சந்தோஷம்.
பொற்குவியல் வரவேண்டியது மட்டுமே பாக்கி. ;)
வண்ணப்படங்களுடன் நடராஜ பெருமானின் பெருமைகளையும் பாடலையும் அழகாக தொடுத்துள்ளீர்கள் அக்கா...
ReplyDeleteநான் பத்து வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜ பெருமானின் ஆலயம் சென்று தரிசித்தேன் ... மீண்டும் நடராஜனை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.... வழ்த்துக்கள்+நன்றி.....
Very interesting and divine post.
ReplyDeleteஸ்வர்ணம் என்றால் தங்கம்
ReplyDeleteஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு
பைரவர் என்றால் [நாய் போன்ற] காவல் தெய்வம்.
தங்கம் போன்ற இந்தப்பதிவைக் கண்டு மகிழ,
ஏதோ ஓர் ஈர்ப்பில்
காவல்.... போல மோப்பம் பிடித்துக் காத்திருந்தேன் காலைய்லிருந்து ... நானும்.
இன்னும் மூன்றே மூன்று தான் பாக்கியுள்ளது [எல்லாவற்றிற்குமே!]
சிறப்பான 597 ஆம் பதிவுக்கு என் இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
arul has left a new comment on your post "ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்":
ReplyDeletesuperb //
Thank you sir..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஸ்வர்ணம் என்றால் தங்கம்
ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு
பைரவர் என்றால் [நாய் போன்ற] காவல் தெய்வம்.
தங்கம் போன்ற இந்தப்பதிவைக் கண்டு மகிழ,
ஏதோ ஓர் ஈர்ப்பில்
காவல்.... போல மோப்பம் பிடித்துக் காத்திருந்தேன் காலைய்லிருந்து ... நானும்.
இன்னும் மூன்றே மூன்று தான் பாக்கியுள்ளது [எல்லாவற்றிற்குமே!]
சிறப்பான 597 ஆம் பதிவுக்கு என் இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள். //
அழகான இனிய வாழ்த்துரைகளுக்கும் .
சிறப்பான உற்சாகமூட்டும் கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
VijiParthiban said...
ReplyDeleteவண்ணப்படங்களுடன் நடராஜ பெருமானின் பெருமைகளையும் பாடலையும் அழகாக தொடுத்துள்ளீர்கள் அக்கா...
நான் பத்து வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜ பெருமானின் ஆலயம் சென்று தரிசித்தேன் ... மீண்டும் நடராஜனை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.... வழ்த்துக்கள்+நன்றி.....//
மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !
Usha Srikumar said...
ReplyDeleteVery interesting and divine post./
உற்சாகமான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !
இன்று மாலை பைரவரை வண்ங்கி வந்தேன் ஆலயம் சென்று.
ReplyDeleteஉங்கள் பதிவிலும் தரிசனம் செய்து விட்டேன்.
அருள் சேர்க்கும் பைரவர் தாள் போற்றி.
நன்றி.
பைரவர் பற்றி தெரியும். உங்கள் பதிவின் மூலம் ஸ்வர்ண ஆகர்ஷ்ன பைரவர் பற்றி விளக்கப் படங்களுடன் அறிந்து கொண்டேன். திரு .VGK (வை. கோபாலகிருஷ்ணன்) அவர்கள் கருத்துரையில் கொடுத்த ” ஸ்வர்ணம் என்றால் தங்கம், ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு, பைரவர் என்றால் (நாய் போன்ற) காவல் தெய்வம் “ என்று பல விளக்கங்கள் தந்துள்ளார். உங்கள் பதிவுகளுக்கு அவர் தரும் கருத்துரைகள் என்னைப் போன்றவர்களுக்கு கோனார் நோட்ஸ் போல உதவியாக உள்ளது. நன்றி!
ReplyDeleteஅற்புதமான படங்கள். நேற்று தான் தாடிக்கொம்பு சென்று வணங்கி விட்டு வந்தேன். இன்று உங்கள் பதிவில் அருமையான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDelete// தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteதிரு.VGK (வை. கோபாலகிருஷ்ணன்) அவர்கள் கருத்துரையில் கொடுத்த ” ஸ்வர்ணம் என்றால் தங்கம், ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு, பைரவர் என்றால் (நாய் போன்ற) காவல் தெய்வம் “ என்று பல விளக்கங்கள் தந்துள்ளார்.
உங்கள் பதிவுகளுக்கு அவர் தரும் கருத்துரைகள் என்னைப் போன்றவர்களுக்கு கோனார் நோட்ஸ் போல உதவியாக உள்ளது.//
ஐயா, நாம் படிக்கும் காலத்தில் நம் திருச்சியில் கோனார் நோட்ஸ் என்று கடைகளில் விற்பார்கள்.
சில் பணக்கார மாணவர்கள் அவற்றை வாங்கி, தேர்வுக்கு ஒரு வாரம் முன்பு மட்டும், படிப்பார்கள்.
திருச்சியில் வாழ்ந்த திரு. ஐயம்பெருமாள் கோனார் என்பரால் அது அப்போது வெளியிடப்பட்டது என எனக்கு ஞாபகம்.
இந்தக் கோனார் நோட்ஸ் திருச்சியைத் தவிர இதர ஊர்களிலும் பிரபலமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.
ஏனென்றால் இந்தப்பதிவர் சேலம் மாவட்டத்தில் பிறந்து, கல்வி மாவட்டமாகிய நாமக்கல் மாவட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று, பிறகு கோவை மாவட்டத்தில் வாழ்க்கைப் பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன்.
அவர்களுக்கு இந்த கோனார் நோட்ஸ் என்றால் என்னவென்று தெரியுமோ தெரியாதோ என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும் ஒன்று! அவர்களுக்குத் தெரியாத விஷயமே எதுவும் கிடையாது. அவர்கள் ஒரு தகவல் களஞ்சியமே! அதனால் இது பற்றியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
என்னை இவர்களின் பதிவுக்கு ஒரு கோனார் நோட்ஸ் என்று தாங்கள் சிறப்பித்துக் கூறியுள்ளதற்கு என் இனிய நன்றிகள், ஐயா!
vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//இந்தக் கோனார் நோட்ஸ் திருச்சியைத் தவிர இதர ஊர்களிலும் பிரபலமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.
ஏனென்றால் இந்தப்பதிவர் சேலம் மாவட்டத்தில் பிறந்து, கல்வி மாவட்டமாகிய நாமக்கல் மாவட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று, பிறகு கோவை மாவட்டத்தில் வாழ்க்கைப் பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன்.
அவர்களுக்கு இந்த கோனார் நோட்ஸ் என்றால் என்னவென்று தெரியுமோ தெரியாதோ என்று எனக்குத் தெரியவில்லை. //
எல்லாப்பள்ளிகளிலும் கோனார் நோட்ஸ் உண்டு..
வகுப்புக்கு எடுத்துவரத் தடை செய்துவிடுவார்கள் ஆசிரியர்கள்..
எங்கள் தமிழ் ஆசிரியர் கோனார் நோட்ஸ் படித்தால் அந்த நடை வந்துவிடும்..எனவே சொந்தமாக எழுத என்னை ஊக்குவித்து அந்த தேர்வுத்தாள்களை மற்ற பிரிவு மாணவர்களும் படித்துப் பார்க்கும்படி அனுப்பிவைப்பார்..
கோனார் தமிழ் உரை நோட்ஸ் புத்த்கத்தைப் படிக்கவே தடுமாறும் பல மாணவர்கள் எங்கள் வகுப்பில் உண்டு..
அவர்களையெல்லாம் மனப்பாடம் செய்தாவது எழுதி தேர்வு பெற மன்றாடுவார் தமிழ் ஆசிரியர்..
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
//இந்தக் கோனார் நோட்ஸ் திருச்சியைத் தவிர இதர ஊர்களிலும் பிரபலமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.
ஏனென்றால் இந்தப்பதிவர் சேலம் மாவட்டத்தில் பிறந்து, கல்வி மாவட்டமாகிய நாமக்கல் மாவட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று, பிறகு கோவை மாவட்டத்தில் வாழ்க்கைப் பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன்.
அவர்களுக்கு இந்த கோனார் நோட்ஸ் என்றால் என்னவென்று தெரியுமோ தெரியாதோ என்று எனக்குத் தெரியவில்லை. //
===========================
//எல்லாப்பள்ளிகளிலும் கோனார் நோட்ஸ் உண்டு.. //
அப்படியா! தகவலுக்கு மிக்க நன்றி.
===============
//வகுப்புக்கு எடுத்துவரத் தடை செய்துவிடுவார்கள் ஆசிரியர்கள்..//
ஆமாம். எங்கள் ஆசிரியரும் அப்படியே தான்.
================
//எங்கள் தமிழ் ஆசிரியர் கோனார் நோட்ஸ் படித்தால் அந்த நடை வந்துவிடும்..எனவே சொந்தமாக எழுத என்னை ஊக்குவித்து அந்த தேர்வுத்தாள்களை மற்ற பிரிவு மாணவர்களும் படித்துப் பார்க்கும்படி அனுப்பிவைப்பார்..//
ஆஹா! கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
கட்டிச்சமத்தின் தேர்வுத் தாளைக் கண்டு களிக்க முடியாதவனாக வேறு ஏதோவொரு ஊரில் வேறு ஏதோவொரு பள்ளியில் படித்து என் வாழ்நாளே வீணாகிப் போனதே என நினைக்க வருத்தமாகவும், அழுகையாகவும் வருகிறது எனக்கு ;(((((
இருப்பினும் தினமும் கட்டிச்சமத்தின் பதிவுகளையாவது படிப்பதில் ஏதோ ஒரு சந்தோஷம் ஏற்படுகிறதே! அதுவரை ஏதோ கொஞ்சூண்டு புண்ணியம் செய்துள்ளேன் போலிருக்கு.
================
//கோனார் தமிழ் உரை நோட்ஸ் புத்த்கத்தைப் படிக்கவே தடுமாறும் பல மாணவர்கள் எங்கள் வகுப்பில் உண்டு..//
அது போன்ற பிரகஸ்பதிகள் எங்குமே உண்டு தான்.
=================
//அவர்களையெல்லாம் மனப்பாடம் செய்தாவது எழுதி தேர்வு பெற மன்றாடுவார் தமிழ் ஆசிரியர்..//
எல்லோருமே உங்களைப்போலவே அதி புத்திசாலியாக இருந்து விட்டால், பிறகு உங்களுக்கு எப்படி பாராட்டுக்கள் கிடைக்கும்.
என்னைப் போன்ற நிறைய மக்குகள் இருப்பதால் தான் உங்களைப் போன்றோருக்குப் பெருமை.
=======================
தகவல்களுக்கு [களஞ்சியத்திற்கு] என் இனிய நன்றிகள். vgk
Thanx for your wonderfull post about suvarna bhairav swami..very educational about the bhirav swami.
ReplyDeletewith regards
uma
அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு
ReplyDelete3608+9+1=3618 ;)))))
ReplyDeleteதங்களின் பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கோனார் நோட்ஸ் போல எனச்சொல்லிப் பாராடியுள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயாவின் கருத்துக்கள் + அதற்கு நான் அளித்துள்ள பதில்கள் + அது சம்பந்தமாக தாங்கள் சொல்லியுள்ள பதில் விளக்கம் எல்லாமே மீண்டும் படிக்க மிகவும் மகிழ்வளிக்கின்றன.
தங்களின் இரண்டு பதில்களுக்கும் என் நன்றிகள்.