பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
ஆண்டுதோறும் தமக்காய் சுழன்று உழைக்கும் மாட்டுக்கு, பொங்கல் வைத்து வழிபடும் மனிதாபிமானம்,நிறைந்து, மண்ணிற்கு அடுத்தபடியாக, மாடுகள் மீது விவசாயிகள் பாசம் கொண்டவர்கள்..
, இயற்கை மீது, தெய்வம் மீது, நம்பிக்கை அதிகம். கொண்டு
தங்கள் உயிரினும் மேலான கன்றுகளை, கடவுளுக்கு தானம் செய்யும் பழக்கம், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் கோயிலுக்கு, நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு என்ற, மற்றொரு பெயர் உண்டு.
கோயிலுக்கு பெயர் இருந்தாலும், சுவாமி சிலை இல்லை.
ஆச்சரியமாக அங்குள்ள மாடுகள் தான், சுவாமிகள்;
அவற்றைத்தான் பக்தர்கள் வணங்குகின்றனர்.
200 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில்இருந்து இங்கு வந்த ஒரு பிரிவினர், இக்கோயில் வழிபாட்டை, வழக்கப்படுத்தினர்.
அவர்கள் வீட்டில், தை முதல் நாளில் ஈன்றெடுக்கும் கன்றுகளை, கோயிலுக்கு தானம் செய்வது வழக்கம்.
ஒரு பிரிவினர் மட்டுமே தொடர்ந்த இப்பழக்கத்தை, நாளடைவில் அனைவரும் பின்பற்றத் தொடங்கினர். அந்தக் கன்றுகள், மாடுகளாய் மாறும் போது தெய்வமாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தானம் செய்யும் கன்றுகள், தெய்வமாய் அவதாரம் எடுப்பதால், அதை அளிப்பவரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
மாட்டுப் பொங்கல், இங்கு கோலாகலமாய் நடக்கும். அன்று, பட்டத்துமாடு அலங்கரிக்க பட்டு, பொங்கல் விழா கொண்டாடப்படும்.
கோயிலில் விடப்படும் கன்றுகளில் இருந்து தான்,
பட்டத்துமாடு தேர்வு நடக்கிறது.
"தை' முதல் நாளில், கன்றுகள் பிறந்த கன்றுகள்தான் கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாடுகள் !
இங்குள்ள மக்களுக்கு தெய்வம் மீது எவ்வளவு பக்தி இருக்கிறதோ, அதே அளவு, பக்தர்களின் நம்பிக்கை மீது, தெய்வத்திற்கும் கனிவு இருக்கிறது. அதனால்தான், தை முதல் நாளில், இங்குள்ள பெரும்பாலான பசுக்கள், கன்று ஈன்று வருகின்றன.
மாடுகளுக்கு பொங்கல் வைத்து பெருமை சேர்க்கும் வழக்கத்திலிருந்து ஒரு படி மேலே போய், மாடுகளையே தெய்வமாக்கி வழிபட்டு வரும் மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம்.
தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான படங்கள்... சிறப்பான பகிர்வுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மட்டுப்பொங்கல் பற்றிய மிக அருமையான பதிவு.
ReplyDeleteபடங்கள் எல்லாமே அழகோ அழகு !
>>>>>
கடைசியில் காட்டப்பட்டுள்ள மாட்டுத்தலைகள் கோலம் ஜோர் ! ஜோர் !!
ReplyDeleteஅதைவிட ......
>>>>>
கீழிருந்து மூன்றாவது கோலத்தில் .........
ReplyDeleteதாய்ப்பசுவும், ’கன்னுகுட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’யும் பார்த்து பரவஸமானேன்.
கோலமிட்டவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
>>>>>
முதல் படத்தில் உள்ள என் தலையாட்டித் தங்கத்திற்கு அன்பு வாழ்த்துகள்.
ReplyDeleteமொத்தத்தில் மிக நல்ல பதிவு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
o o o o
மாடுகளை தெய்வங்களாக மதித்துக்கொண்டாடும் விவரம் அறிந்து மகிழ்ச்சி உழவுத்தொழிலைப் போற்றிய திருவள்ளுவர்தினமும் கூடியே வரும் சிறப்பு நன்றி
ReplyDeleteஎன் முதல் கமெண்ட்டில் .........
ReplyDelete‘மட்டுப்பொங்கல்’ எனத்தவறாக விழுந்து விட்டது. அது ’மாட்டுப்பொங்கல்’ என்று இருக்க வேண்டும்.
மாட்டின் கால் மறைந்து போய் உள்ளது.
எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன். ;(
அதை தாங்கள் தகுந்த வைத்தியம் பார்த்து, சரியாக தகுந்த இடத்தில்
[ தங்கள் செளகர்யம்போல் - யதா செளகர்யம் ] எங்கு காலைப்போடணுமோ அங்கு காலைப்போட்டுக் கொள்ளவும். ;)))))
எனதினிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நம் நாட்டில் மாடுகளை தெய்வமாக கொண்டாடுகிறோம். ஆனால் மற்ற நாடுகளில் அதை வெட்டி கூறுப்போட்டு அசைவ உணவாக உண்கிறார்கள். என்ன சொல்வது
ReplyDeleteசாமி மாடுகள் ,"தை முதல்நாளில் பிறந்த கன்றுகள்தான்"!! அறிந்திராத புதியதகவல்கள். படங்கள் அருமை. வாழ்த்துக்கள்,நன்றி.
ReplyDeleteநோய்கள் நீங்கி எல்லோரும் நலம் பெறட்டும்.
ReplyDeleteமாட்டுப் பொங்கல் படங்கள் , கோலம் எல்லாம் அருமை.
கம்பம் நந்தகோபன் கோவில் செய்திகள் மிகவும் புதிது. இது வரை இந்த மாதிரி கோவில் இருப்பது நான் அறியாதது. நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
சிறப்பான மாட்டுப் பொங்கல் அழகிய படங்களுடன் ! வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteகோகுலத்தில் கண்ணன் போல, கம்பத்திலும் அவன் நந்தகோபாலனாக இருக்கும் கோயில் பற்றிய செய்திகளோடு, மாட்டுப் பொங்கல் பற்றிய சிறப்பு பகிர்வு! சகோதரிக்கு எனது நன்றி! மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteகம்பம் கோயில் புதுமையாக இருக்கிறது. சிலை வழிபாட்டை விட இது சிறந்ததே.
ReplyDeleteஉங்களது எந்தப் பதிவானாலும் ஏதாவது தெரியாத செய்தியை உள்ளடக்கி இருக்கும். நன்றி பாராட்டுக்கள்.
ReplyDelete