


அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.
`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்'
என்னும் அனுமனுக்கான காயத்ரி மந்திரத்தையும்
சொல்லி வழிபடலாம்.

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்த ஆஞ்சநேயரை வணங்கி அனுமன் ஜயந்தியாக கொண்டாடுகிறோம்..!

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து
வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி
அந்த ஜெயந்தியை கொண்டாடுவதால் சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.

அனுமனுக்கு மிகவும் பிடித்த ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம்.
வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம்.
வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன்.
அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.
ராமாவதாரம் முடிந்து அனைவரையும் வைகுண்டத்திற்கு அனுப்பி தானும் கிளம்பினார் ராமர்.
ஆனால், ராமநாமம் ஒலிக்காத வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பாமல் பூலோகத்திலேயே இருந்து ராமநாமத்தை ஜபிப்பது என்று தீர்மானித்தார் அனுமன்.
ராமபிரானும், ""ராமாயணமும், ராமநாமமும் இவ்வுலகில் இருக்கும்வரை என்றென்றும் நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக! என்று வாழ்த்தி வைகுண்டம் கிளம்பினார்.
ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.
பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று சிவந்து கனிந்த பழம் போல் ஜகஜோதியாக தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.
மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.

வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில்
வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.

வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.
வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து
கிரஹண காலத்தை ஏற்படுத்துவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.
சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த பந்தயத்தில்
அனுமன் சென்ற வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாத ராகு பகவான்
அனுமனிடம் தோற்றுப் போனார். ..!!
எனவே தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.அ

தன் உடல் போல் (பாம்பு போல்) அந்த் உணவுப் பண்டம் வளைந்து இருக்க வேண்டும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.
அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து
அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது ஐதீகம்.


அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.
வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்
ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.


அஞ்சனை மைந்தன், ஸ்ரீராமபிரானின் தூதனான ஸ்ரீஆஞ்சநேயர் அர்ச்சாரூபியாய் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கும் மாங்குளம்' என்று அழைக்கப்படும் மாங்குளத்துக்கரையில் அமைந்துள்ள திருக்கோயிலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.
ஸ்ரீவியாஸராஜ மஹான் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில்பிரதிஷ்டை செய்த வரலாற்றுச் சிறப்புடையது..!
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி திருமுக மண்டல தரிசனம் தருகிறார்.
வலது கரத்தில் அபய ஹஸ்தம் இடது திருக்கரத்தில் சௌகந்திகா என்ற மலரைத் தாங்கியுள்ளார்.
இடுப்பில் சிறிய கத்தி உள்ளது. திருப்பாதங்கள் இரண்டும் தென்திசையை (இலங்கையை) நோக்கி அமைந்துள்ளன. வாலின் நுனியில் அழகிய சிறிய மணி அமைந்துள்ளது சிறப்பு.
இவரைத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வெற்றிலை மாலை சாற்றி, அணையா விளக்கில் நெய் செலுத்தி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
ஒன்பதாவது வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று மாலை நேரத்தில் வடைமாலை சாற்றி, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட திருமணத் தடை நீங்கும்.
வலது கரத்தில் அபய ஹஸ்தம் இடது திருக்கரத்தில் சௌகந்திகா என்ற மலரைத் தாங்கியுள்ளார்.
இடுப்பில் சிறிய கத்தி உள்ளது. திருப்பாதங்கள் இரண்டும் தென்திசையை (இலங்கையை) நோக்கி அமைந்துள்ளன. வாலின் நுனியில் அழகிய சிறிய மணி அமைந்துள்ளது சிறப்பு.
இவரைத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வெற்றிலை மாலை சாற்றி, அணையா விளக்கில் நெய் செலுத்தி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
ஒன்பதாவது வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று மாலை நேரத்தில் வடைமாலை சாற்றி, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட திருமணத் தடை நீங்கும்.
ஆலயத்தில் வேணுகோபால ஸ்வாமி தனி சந்நிதியில் அருள்புரிகிறார்.
மிகச் சிறிய மூர்த்தியாய், குழலூதும் பாலகனாக, பின்புறம் பசுமாட்டுடன் அருட்காட்சி தருகிறார்.
மிகச் சிறிய மூர்த்தியாய், குழலூதும் பாலகனாக, பின்புறம் பசுமாட்டுடன் அருட்காட்சி தருகிறார்.
தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீஸுதர்ஸன நரஸிம்மர் ஸமேத ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட மன நோய் தீரும்.

சுதர்னருக்குப் பின்புறம் நரசிம்மர் அருள் புரிகிறார்.


சுதர்னருக்குப் பின்புறம் நரசிம்மர் அருள் புரிகிறார்.



கன்னி மூலையில், ஸ்ரீவிநாயகப் பெருமான் மஹாவிஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரத்துடன் அருள்புரிவது சிறப்பு. கணபதிக்கு அருகில் ராகு - கேது இருவரும் தனித்துக் காட்சியளிக்கின்றனர்.















ஹனுமன் ஜெயந்தி அருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஆஹா அருமை அருமை...!படங்களும் சிறப்பே...! இது வரை இதெல்லாம் நான் கேள்விப் பட்டதே இல்லை. சக்தி வாய்ந்தவர் என்பது தெரியும் ஆனால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்க வில்லை. மிக்க நன்றி
ReplyDeleteஆஞ்சநேயரை வழிபட்டு வரம் பெறுவோம்.
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்......!
புத்திர்பலம் யசோதைரியம் நிர்பயத்வமரோகதா
ReplyDeleteஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத்ஸ்மரணாத்பவேத்
விதம் விதமான அலங்காரங்களில் ஆஞ்சநேயர் கொள்ளை அழகு...
ReplyDeleteராம ராம ராம ராம ராம ராம ராம்.!
ReplyDeleteராம ராம ராம சீதா ராம் ராம ராம்.
ஜெய ஜெய ராம் சீதா ராம்
ஜெய ஜெய ராம் சீதா ராம்.
ராம நாமம் சொல்லும் இடத்தில் ஹனுமன் வரவு இருக்கும்.
எல்லோருக்கும் அனுமன் நல்ம் பல் தரட்டும்.
அழகிய படங்கள் அருமையான விளக்கம்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
asaathyam sadhaka swamin asadhya thava kim vadha.
ReplyDeletesubbu thatha
அனுமாரின் படங்கள் அருமை. அதுவும் வடைமாலை சாத்தின படங்கள் மிக அருமை. அனுமன் சூரியனைப் பிடிக்கும் கதையை,நான் என் குழந்தைகளுக்காக இணையத்தளத்தில் கார்ட்டூன் கதைகளாக இருந்ததை பதிவிறக்கம் செய்து,அவர்களுக்கு காமித்து இருக்கிறேன். வடைமாலை சாத்துவதின் பொருளை தெரிந்து கொள்ளமுடிந்தது தங்களின் இந்த பதிவு. மிகவும் நன்றி.
ReplyDeleteBeautiful photos with lots of information. i will be thankful if you let me know where this Mangulam is ?
ReplyDeleteஒவ்வொரு படத்தையும் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... அனைத்தும் அதிஅற்புதம் அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அஞ்சனை மைந்தன் அருளது கிட்டவே
ReplyDeleteதுஞ்சியே ஓடும் துயர்!
ஹனுமான் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!
வாழ்த்துக்கள் சகோதரி!
அழகானப் படங்களுடன், புதிதான தகவல்கள்...
ReplyDeleteஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ராம்...
இன்று குருவாரம் - வியாழக்கிழமை - ஸ்ரீ ஹனுமனைப்பற்றிய அழகான பதிவினைக் கொடுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமேலும் இன்று மார்கழி மாத உத்திராட நக்ஷத்திரம். ஆவணி சித்திரை பிள்ளையார் சதுர்த்திபோல அதில் ஓர் மிகப்பெரிய விசேஷமும் அடங்கியுள்ளது. ;)))))
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html
>>>>>
அத்தனைப்படங்களும் விளக்கங்களும் மிகச் சிறப்பாக உள்ளன.
ReplyDeleteஎன் நெஞ்சினில் எப்போதும் நிறைந்துள்ள ஒருசில குறிப்பிட்ட படங்களை வெளியிடுள்ளது மேலும் மனதுக்கு சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உள்ளது.
>>>>>
நேற்றே ஹனுமத் ஜயந்திக்காக இந்தப்பதிவினை நான் எதிர்பார்த்தேன். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஒருநாள் ஒத்திப் போட்டதும் நல்லது தான்.
ReplyDeleteபெரும்பாலான கோயில்களில் நேற்று மிக அமர்க்களமாக ஹனுமத் ஜயந்தியைக் கொண்டாடி உள்ளனர். பத்திரிகை செய்திகளிலும் படங்களுடன் வந்துள்ளது.
>>>>>
இங்குள்ள திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் மிகவும் பிரஸித்தம். மூர்த்தி மிகச்சிறியது தான் என்றாலும் அதன் கீர்த்தி மிகவும் பெரியது.
ReplyDeleteஒரு லக்ஷத்து எட்டு வடைகளை மாலைகளாகக் கோர்த்து இந்தக்கோயிலில் நேற்று அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
>>>>>
அடியேனின் இப்போதைய தொடரின் நிறைவுப் பகுதியாகிய பகுதி-108லும், ’ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவது ஏன்?’ என்ற ஒரு பக்தரின் கேள்விக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லும் விளக்கங்கள் தான் இடம்பெற உள்ளன.
ReplyDeleteஅதிலும், தாங்கள் இங்கு சொல்லியுள்ள பல விஷயங்கள் தான் சுவையானதோர் கதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா திருவாயால் அமுதமாக, அமுதமழையாக வெளிப்பட்டுள்ளன. ;)
அந்தப்பதிவு அநேகமாக 11.01.2014 சனிக்கிழமை வெளியாகக்கூடும்.
28.05.2013 அன்று பிள்ளையாரில் ஆரம்பித்த தொடர் ஹனுமனில் நிறைவடைய உள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.
>>>>>
ஸ்ரீவியாஸராஜ மஹானால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மாங்குளம் அர்ச்சாரூபியான ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பற்றிய செய்திகளை புதிதாக இன்று அறிய முடிந்தது.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
o o o o o o
வணக்கம் வாழ்கவளமுடன்...
Deleteவிஷேசமான கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைவான நன்றிகள்..
அனுமன் ஜெயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலயத்தில் அருமையான தரிசனம் கிடைத்தது ..!
ஹனுமத் ஜயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலத்தில் அருமையான தரிசனம் கிடைத்ததா !!!!!
Deleteஇதைக்கேட்கவே மிகவும் சந்தோஷம். ;) தகவலுக்கு நன்றிகள்.
[This Revised Comment may please be published instead of the previous one with some spelling mistakes]
Deleteஹனுமத் ஜயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலயத்தில் தங்களுக்கு அருமையான தரிசனம் கிடைத்ததா !!!!!
இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;) தகவலுக்கு நன்றிகள்.
நாங்கள் அதற்கு மறுநாள் விடியற்காலம் ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயிலுக்குச்சென்று சென்று, வழக்கம் போல ஸ்பெஷல் வழிபாடு செய்து வந்தோம்.
காவிரியில் ஜலம் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு நிரம்பி ஓடுகிறது. அதைப் பார்க்கவே மனதுக்கு மகிழ்ச்சி வெள்ளமாக இருந்தது. ;)
[2012ல் வெறும் மணல் மட்டுமே இருந்தது. ஜலம் இல்லை.]
ஹனுமன் ஜெயந்தி குறித்து அறியத் தந்தீர்கள்...படங்கள் அருமை...
ReplyDeleteஹனுமந்த் ஜெயந்தி தகவல்கள் அருமை. அதைவிட சிறப்பு விதம்விதமான அலங்காரத்தில் ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteஹனுமத் ஜெயந்தி சிறப்புப் பகிர்வும் படங்களும் மிக அருமை....
ReplyDeleteHad you been to Bangalore? Hanuman Temple in Banasawadi is quiet Famous. Hanuma Jayanthi at this Temple is big and important event, but this was celebrated quite earlier! why the discrebency?
ReplyDelete