Monday, January 27, 2014

கடல் போல் செல்வம் அருளும் கல்கத்தாவில் கருணைக்கடல்



தாரகாசுரன்சரிந்து வீழ ... வேருடன்பறிந்து சாதி பூதரம் குலுங்க ... 
முதுமீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த ... 

அன்று தாரை வேல்தொ டுங்கடம்ப ...  மததாரை 
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் ... பொருந்து மானை யாளு ... 

நின்ற குன்ற மறமானும் ... ஆசை கூரு நண்ப என்று ... 
மாம யூர கந்த என்றும் ... ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ ...
 ( ஸ்ரீ அருணகிரிநாதரின்திருப்புகழ் )

கல்கத்தாவில் ஹூக்ளி நதியில் ஆண்டுக்கொரு நாள் அலையெழுச்சியால் நீர்மட்டம் பல அடிகள் உயரும். கரைக்கு மேலே உயர்ந்து ஸ்டாரண்டு சாலைக்கு வந்துவிடும்.

கடலின் இயக்கங்களில் முக்கியமானது சந்திர, சூரியர்களின் ஈர்ப்பு சக்தியால் நாள்தோறும் கடல் பொங்கி நீர்மட்டம் உயர்வதும், பிறகு கடல் பின் வாங்கி நீர் மட்டம் குறைவதுமாகும். 

பெரிய நதிகளின் முகத்துவாரத்தில் நீர்மட்டம் உயரும்போது 
நீண்ட தூரத்திற்கு ஆற்றின் நீர்மட்டமும் உயரும். 
கடலின் இந்த ஏற்ற இறக்க இயக்கத்தை அறிந்த நம் முன்னோர்கள் அலைகள் வந்து புரளும் கடற்கரையருகிலும், சில இடங்களில் கடலின் மீதும் கூட வழிபாட்டுத் தலங்களை அமைத்தனர். 

அவற்றுள் ஒன்று கடலுக்குள் கோயில் குஜராத்திலுள்ள ஸ்தம்பேஸ்வர மகாதேவர் ஆலயம்.

சிவ பெருமானின் ஐந்தொழில்களில் ஒன்றான கரத்தல் (மறைத்தல்) என்பதைத் தூலமாகப் பக்தர்களுக்குக் காட்டுகிறது கடலுக்குள் கோயில் ..!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உள்வாங்கும் வரை இந்த கோயில் இருந்தது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 

கடல் உள்வாங்கியதை அடுத்தே இந்த கோயில் இருப்பது தெரிய வந்தது.
கவி-கம்போய் என்ற சிற்றூரில் அரபிக் கடலின் மேலே பரூச் மாவட்டத்தில் உள்ளது இந்த ஆலயம். கோயில் அமைந்திருப்பது பெருநகரான பரோடாவிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவு.
தாரகாசுரன் சிறந்த சிவ பக்தன். அவன் நீண்ட காலம் சிவனை நோக்கி தவம் புரிந்தான். அவனது தவத்துக்கு ஈசனும் இரங்கினார். வரமளித்தார். 

சிவனிடம் வரத்தைப் பெற்ற தாரகாசுரனுக்கு ஆணவம் அதிகரித்தது. தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். 

தேவர்கள், பிரம்மா, விஷ்ணுவிடம் முறையிட, சிவனைப் பணிந்து தேவர்களின் துயர் நீக்குமாறு அவர்கள் வேண்டினர். 

ஆனால் தாரகாசுரனுக்கு கொடுத்த வரனை திரும்பப் பெற முடியாதென சிவன் பதிலளித்தார். 

அப்போது தேவர்கள் “தாரகாசுரனுக்கு சிவகுமாரனால்தான் மரணம் என்ற சாபம் இருக்கிறது’ என்றனர். 

அதன்படி முருகன், தாரகாசுரனை வதம் செய்தார். 

இதனால் மூவுலகமும் மகிழ்ந்தது. ஆனால் சிறந்த சிவபக்தனான அசுரனை கொன்ற தோஷம் நீங்குவதற்காக கந்தவேள் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அவற்றுள் ஒன்றே ஸ்தம்பேஸ்வரர்.
இத்தலத்தின் தீர்த்தம் மஹீசாகர் எனப்படுகிறது. 

மஹி,சாபர்மதி, பக்கால், சந்திரபாகா, மெஸ்வோ, ஹதமதி உள்ளிட்ட ஏழு நதிகளும் இங்கே சங்கமமாகின்றன. 

கங்கை, கடலில் கலக்கும் கங்கா சாகரில் பலமுறை குளிப்பதன் பலன் மஹீசாகரில் ஒருமுறை குளித்தாலே கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

ஸ்தம்பேஸ்வரர்!: ஸ்தம்பேஸ்வர லிங்கம் நான்கடி உயரம். விட்டம் இரண்டடி. இந்த லிங்கத்திற்கு 24 மணி நேரத்தில் இரு முறை ஏழு நதிகளும் அபிஷேகம் செய்வது சிறப்பு. 

பூஜை நேரத்தில் கடல் வற்றி லிங்கம் முழுமையாக வெளிப்படும் அதிசயமும் நிகழ்கிறது. 
அப்போது கடல் மட்டம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

லிங்க மூர்த்தியை அருகில் சென்று தரிசிக்க கரையிலிருந்து பாலம் உள்ளது. 
காட்மண்ட் பசுபதிநாத் கோயில் பாணியில் கோபுரம் அமைந்துள்ளது. 

ஆண்டின் சில நாட்களில் கோபுரத்தின் உயரத்திற்கு கடல் பொங்குகிறது. 

இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை தரிசிக்க, சிராவண அமாவாசை, சிவராத்திரி, சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோயிலுக்கு எதிரே உள்ள ஆசிரமம் ஒன்றில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகளும், இலவச உணவும் வழங்கப்படுகின்றன.
இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதால் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது கவி-கம்போய்.

எல்லையற்ற வானமும், அகன்ற நீலக்கடலும், ஸ்தம்பேஸ்வர லிங்க வடிவில் பரம்பொருளும் கூடிய இத்தலத்தை பக்தர்கள் தரிசித்து பிறவிப் பயன் பெறலாம். கடலின் மேல் எழுந்தருளும் கருணையாளனை வழிபட்டால் இல்லத்தில் கடல் போல் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.


12 comments:

  1. கவி-கம்போய் பற்றிய அறியாத தகவல்களுக்கு நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அத்தனையும் அருமையான விடயங்கள், ஸ்தம்பேஸ்வர லிங்கத்தில் பரம்பொருளும் கூடிய இத்தலத்தை வழிபட செல்வம் பெருகும் என்பதும். இவை எல்லாம் அறியாத விடயங்கள். ரொம்ப நன்றி..
    வழமை போல் அழகான படங்களும் விபரங்களும் .
    தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. அழகான படங்கள். அருமை. இயற்கையின் அற்புதங்களுள் ஒன்றான
    கவி - கம்போய் திருத்தலத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்த பதிவு.
    மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  4. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் கவி- கம்போய்
    தரிசனம் பெற்றோம். மகிழ்ச்சி.
    கடலின் மேல் எழுந்தருளிய கருணாகரன் அனைவருக்கும் அருள்பாலிக்கட்டும்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எல்லாமே அறியாத தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  6. கடலுக்குள் கோவிலா!
    கவிகம்போய் பற்றி அறிந்து கொண்டேன்.நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  7. சிவனின் Animation படங்கள் முதல் இரண்டும் காணக்காண இனிமை!

    ReplyDelete
  8. சிவ சிவ , அரிய பொக்கிஷம். நன்றி

    ReplyDelete
  9. கடலுக்குள் இறைதலம். அறியாத தகவல் அருமை.
    படமும் அழகு.
    மிக்க நன்றி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. அருமையான தகவல்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  11. கடலுக்குள் கோவில். கேள்விபடாத ஒன்று. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.
    சிவனின் படங்கள் மிகவும் அருமை.

    ReplyDelete
  12. கடலுக்குள் கோயில் ... ஆச்சர்யமான தகவல்கள்.

    சிவபெருமானின் அனிமேஷன் படங்கள் யாவும் அற்புதமாக உள்ளன.

    கீழிருந்து இரண்டாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;)

    ReplyDelete