தக்ஷிணாமூர்த்தி சமாரம்பாம் சங்கராச்சார்யா மத்யமாம்!
அஸ்மத் ஆச்சர்ய பர்யந்தம் வந்தே குருபரம்பராம்!!
ஞான கணேஷா சரணம்! சரணம்!!
ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!!
ஞான சத்குரு சரணம்! சரணம்!!
ஞானாம்பிகயே சரணம்! சரணம்!!
ஞானானந்தகிரி சுவாமிகள்
(Swami Sri Gnanananda Giri) அவர்கள்
அத்வைத வேதாந்தியாகத் திகழ்ந்தவர்.!.
கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் பிறந்த ஞானானந்தரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும்.
இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுவாமிகள் சுப்பிரமணியனைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார்.
ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்று.
சிவரத்னகிரி அவருக்கு ஞானானந்தகிரி எனும் பெயரைச் சூட்டித்
தனக்குப்பின் பீடாதிபதியாகும் பொறுப்பை அளித்தார்.
சற்குரு ஞானானந்த சுவாமிகள் இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார்.
அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார்.
கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும்,
கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார்.
கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார்.
அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது என்பது சுவாமிகளின் அருள் வாக்காகும்.
திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில்
ஞானானந்தரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது.
ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும்
அருள் ஆலயமாய் விளங்கி வருகிறது.
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில்
தபோவனம் அமைந்துள்ளது.
விழுப்புரத்திலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன.
சென்னை மற்றும் திண்டிவனத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.
காலை 4-11 வரை, மாலை 5-8 வரை திறந்திருக்கும்.
அருகேயே உலகளந்த பெருமாள் ஆலயம் உள்ளது.
ரகோத்தம சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனமும் உள்ளது
ஞானானந்த கிரி சுவாமிகள் சில காலம் புதுச்சேயில் இருந்தபோது தனது குருவாக பாரதியார் நமது ஞானானந்த கிரி சுவாமிகளை ஏற்றுக்கொண்டார்.
சுவாமிகளின் மேல் மஹாகவி "குள்ளச்சாமி புகழ்" என்னும் கவிதைத் தொகுப்பை இயற்றி உள்ளார்....
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை
கஸ்தூரி மான் என்னும் ஒரு மான் இமயமலையில் உண்டு.
அது தன் நாபியில் இருந்தே வரும் சுகந்தத்தை எங்கிருந்தோ வருகிறது என்று பாவித்து அது எங்கிருந்து வருகிறது என்று தேடித் தேடி இறுதியில் கண்டுபிடிக்கமுடியாமல் மடிந்துவிடும்.
அதே போல் தான் நாமும் நம் இதயத்தில் இருக்கும் இறைவனை எங்கெங்கோ தேடி நம் வாழ்கையை இழக்கிறோம் !!!
என்கிறார் --சுவாமி ஞானானந்தா கிரி.
ஸ்ரீ சற்குரு பொற்பாதம் சரணம் ! சரணம்!!!
"தக்ஷிண ஹாலாஸ்யம்'' என்று சிறப்பித்து அழைக்கப்படும் தென்னாங்கூர் கிராமம் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள தலம்.
முன்பு ஆறு காடுகளுக்கு நடுவில் இருந்ததால் "ஷடாரண்ய க்ஷேத்திரம்'' என்று சிறப்புப்பெற்றது..!
புராண வரலாறுப்படி மலையத்வஜ பாண்டிய மன்னனுக்கு
மீனாட்சி அம்மன் மூன்று வயது குழந்தையாகக் கிடைக்கப் பெற்றது தென்னாங்கூர் தலத்தில்தான்.
எனவே ஸ்ரீமீனாட்சி அம்பாளின் ஜனன ஸ்தலம் என்ற சிறப்பும் இவ்வூருக்கு உண்டு.
தென்னாங்கூரில் அமைந்துள்ள ஸ்ரீரகுமாயி ஸமேத ஸ்ரீபாண்டுரங்கன் ஆலயம். தன்னுடைய குருநாதரான ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் குருஜிஸ்வாமி ஹரிதாஸ்கிரி.தோற்றுவித்தார்
தென்னாங்கூர் ஆ லயத்தில் எழுந்தருளும் பிரம்மாண்டமான மூர்த்திகளுக்கு பலவிதமான அலங்காரங்களும், உபசாரங்களும், உற்ஸவங்களும், நாமசங்கீர்த்தனங்களும் நாள்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது .
சோழ, பல்லவ அரசர் காலத்து கட்டிடக் கலையை ஒருங்கே கொண்டு அமைந்துள்ள ஆலயம்.
மேலும் புகழ் சேர்க்கும் வகையில் தற்போது பக்தர்களின் உதவியுடன் பாண்டுரங்கன் - ரகுமாயிக்கு ஸ்வர்ண ரதம்( ஞான ஜோதிர் சக்தி ரதம்) ஸத்குருநாதர் ஆராதனை வைபவத்தின்போது சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த ரதத்தில் அமைந்துள்ள நாரதர், தும்புரு, ஸ்ரீஸத்குரு நாதர், ஸ்ரீகுருஜி, நாமதேவர், துகாராம், ஞானேஸ்வர், சோகாமேளா போன்ற சாதுக்கள் மற்றும் ரதத்தின் மேல் பாகத்தில் பாண்டுரங்கன் - ரகுமாயி, தட்சிணாமூர்த்தி, யோக நரசிம்மர், மஹா விஷ்ணு ஆகியோரின் திருஉருவங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள்.
பாண்டுரங்கன் ஆலயத்தின் எதிரில் உள்ள ஸ்ரீமடவளாகத்தில் ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் ஆருத்ரா பௌர்ணமி ஆராதனை விழா பல்வேறு ஹோமங்களுடனும், பாதுகாபூஜை, லட்சார்ச்சனை, சங்கீதக் கச்சேரிகள், கதாகாலக்ஷேபங்கள், நாமசங்கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகளுடனும் நடைபெறுகிறது.
இந்த பதிவின் மூலம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தக்து. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமங்களகரமான குரு வாரத்தில் - ஸத்குரு ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் அருமைகளை அழகாக விவரித்தமைக்கு மிகவும் நன்றி..
ReplyDeleteஞானானந்தகிரி சுவாமிகள் பற்றிய சிறப்புகளுக்கு + அருள் மொழிகளுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் பதிவு நன்றாக உள்ளது.
ReplyDeleteசற்குரு ஸ்ரீ ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளுக்கு என் தந்தையார் மிக நெருங்கிய சீடராக அமைந்தார்.அப்பா சுவாமிகளை முதல் முதலாக சந்தித்த நிகழ்வை இந்த சுட்டியில் எழுதியுள்ளேன். அனபர்கள் படித்து இன்புறுக.
http://classroom2007.blogspot.in/2011_06_01_archive.html dt. 24 June 2011
"சீடனைத் தேடி வந்த சுவாமிகள்."
''நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே''; போன்ற அருள் மொழிகள் அனைத்தும் பின்பற்றப் பட வேண்டியவை. நன்றி
ReplyDeleteஞானாந்தகிரி சுவாமிகள் பற்றி அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஞானாந்தகிரி சுவாமிகள் தபோவனமும், தென்னாங்கூரும் போய் இருக்கிறோம்.
ReplyDeleteஞானந்தகிரி சுவாமிகளின் அமுதமொழி, பாரதியின் கவிதை பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள்.
போதேந்த்ராள் ஞானானந்தா இருவரும் நாமஸங்கீர்த்தனம் இன்று இவ்வளவு தூரம் முன்னேற மிகப்பெரிய வழிகாட்டிகள் ஸத்குரு ஞானானந்தரின் திருவடிக்ள் போற்றி. நல்லபதிவு நன்றி
ReplyDeleteஸத்குரு பற்றி பல்வேறு சிறப்பான தகவல்கள் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. படங்கள் எல்லாமே அருமையாகத் தந்துள்ளீர்கள். சந்தோஷம்.
ReplyDelete