Monday, November 25, 2013

நலம் தரும் பைரவாஷ்டமி வழிபாடு


H A N U M A N

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய  லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார்.

அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். 

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், தகட்டூர் தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது.

நாகபட்டினம் மாவட்டம் தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். 
[Gal1][Gal1]
"யந்திரபுரி' என்ற பெயர் பெற்ற.  தலத்தின் தமிழ்ப்பெயர்.. "தகட்டூர்'. 

சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
[Gal1]
கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும்.

அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் திககிறார்..!

அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

பைரவ காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி 
என்று அழைக்கப்படுகிறது.

இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு 
தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். 

பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. 

பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் 
மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. 

 பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். 

அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். 
நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். 

நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. 

பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும், கால பைரவரால் வழிபடப்படுவதால், அஷ்டலட்சுமியின் அருளும் பெற, அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடுவது சிறப்பு.

 மகாகால பைரவருக்கு செம்பாக்கம் என வழங்கும் வட திருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் இராஜராஜ சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட தனிக்கோயிலும் அமைந்துள்ளது. 

 திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் திருப்போரூரிலிருந்து
 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு பெற்றது. தினமும் அஷ்ட பைரவர் வேள்வி, யாகம், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்..!

சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டு,  அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரப் பெருமானையும் வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.

ஆலங்குடி அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீசுவரர் திருக்கோயிலில் காலபைரவாஷ்டமி விழா  சிறப்பு..!

பைரவாஷ்டமியையொட்டி, கோயிலில் காக்கும் கடவுளாக போற்றப்படும் காலபைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்படுகிறது.  சந்தனக்காப்பு அலங்காரமும், பைரவ சகஸ்ரநாமமும் நடைபெறும்  சுவாமி வீதியுலா நடைபெறும்..



தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. 

சிலர் நாயை செல்லமாக வளர்ப்பார்கள். சிலர் நாயை துன்புறுத்துவார்கள்..!

இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. 

நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருக்கிறது..!

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.
பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம்

கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம்.

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள்,, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்.

எல்லா பரிகாரங்களுக்கும் நெய் தீபமும், மிளகு தீபமும் பொதுவானது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் தலத்தில் ஸ்ரீ கோட்டை பைரவர், கால பைரவ அம்சமாக இருந்து அருள்பாலிக்கிறார்.

சிவபெருமான் அவதாரம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற  கோட்டை பைரவரிடம் வேண்டுதல் செய்வோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்

திருமெய்யம் கோட்டை பைரவருக்கு சந்தனாதி தைலம் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் போன்றவற்றில் அபிவிருத்தி ஏற்படும்.

பைரவருக்கு கோடி அர்ச்சனையோ, லட்சார்ச்சனையோ செய்து வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை..!

 தேய்பிறை அஷ்டமி அன்று கோட்டை பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நாளில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நன்மைகள் நாடி வந்து சேரும்.
கார்த்திகை மாதம் நடைபெறும் பைரவாஷ்டமி விழா சிறப்பு வாய்ந்தது.

29 comments:

  1. பைரவாஷ்டமி வழிபாடு அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  2. பைரவர் வழிபாடு பற்றிய தகவல்களும் படங்களும் அருமை.....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  3. இனிய காலைப் பொழுதில் - அழகிய படங்களுடன் பைரவ தரிசனம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      இனிமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  4. சிறப்பான பகிர்வு அம்மா... விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி... இங்கு தாடிக்கொம்பு கோவிலிலும் மிகவும் விசேசம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      சிறப்பான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      தாடிக்கொம்பு சொர்ணாகர்ஷண பைரவர்
      மிகவும் வரப்பிரசாதி ..!

      Delete
  5. படங்களும், பகிர்வும் அருமை....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  6. கால பைரவாஷ்டமியும். கிருத்திகா ஸோமவாரமும் சேர்ந்து ஒன்றாக அமைந்துள்ள இன்று 25.11.2013 இந்தப்பதிவு வெளியிட்டுள்ளது, மிகவும் பொருத்தமே.

    நல்லதொரு திட்டமிடல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      பொருத்தமான் கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  7. அந்தக்காலத்தில் கோயிலைப்பூட்டி பைரவர் சந்நதியில் சாவியை வைத்துவிட்டுச் சென்று விடுவார்கள். அதைத் தொட்டவர்களின் வாழ்வு அத்தோடு முடிந்துவிடும்.

    நம் முன்னோர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கையுடனும், பொதுஜனங்கள் சத்திய தர்மத்தை அனுசரித்தும் வாழ்ந்த பொன்னான நாட்கள் அவை ;)

    >>>>>

    ReplyDelete
  8. யந்திரபுரி என்று அழைக்கப்பட்ட தகட்டூர் பற்றிய பல்வேறு தகவல்கள் நன்கு அறிய முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  9. பைரவ காயத்ரி மந்திரமும், அஷ்டமி வழிபாடு பற்றியும், கார்த்திகை மாத கால பைரவாஷ்டமியின் சிறப்புக்களும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. திருப்போரூர் ஸ்தலம் அமைந்துள்ள இடம், அதன் சிறப்பு பூஜைகள், ஆலங்குடி கோயில், மதுரை, கேரள வைக்கம், புதுக்கோட்டை திருமெய்யம் போன்ற கோயில்களில் உள்ள சிறப்பான சந்நதிகள், அங்கு சென்று பிரார்த்திப்பதால் கிடைக்கும் பலன்கள் என அனைத்தும் அருமை.

    >>>>>

    ReplyDelete
  11. கடைசியில் கண்ணாடி அணிந்து கம்ப்யூட்டர் பார்க்கும், செந்தாடி வேந்தர் ’வேதஞாளி பைரவர்’ சிரிக்க வைக்கிறார். ;)

    -o [ ? ? ? ? ? ? ] o-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      அனைத்து அருமையான கருத்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  12. புதுக்கோட்டை அருகிலுள்ள திருமெய்யம் என்று குறிப்பிட்டுள்ளீர்களே அது திருமயம்தானா அல்லது வேறு ஒரு ஊரா? கோவில் திறந்திருக்கும் நேரத்தைக் குறிப்பிட்டுள்ளது அங்கு செல்பவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். நன்றியும் பாராட்டுக்களும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது.

      மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர்எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

      '

      Delete
  13. ஆஹா! பைரவாஷ்டமி பற்றி எத்தனை எத்தனை முக்கிய விஷயங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      இனிமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  14. Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      இனிமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  15. பைரவ அஷ்டமி குறித்த விரிவான தகவல்களும் படங்களும் சிறப்பு! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  16. பைரவர் வழிபாடு பற்றி அறிந்தோம். எங்கள் வீட்டில் நாய் வளர்க்கும்போது ;பைரவருக்கு சாப்பாடு போட்டாச்சா; என்று கேட்பார் என் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      இனிமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      காவல் தெய்வமாயிற்றே பைரவர் ..!

      Delete
  17. நாயை வாகனமாகக் கொண்ட பைரவர் உணர்த்தும் உண்மைகளை அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete