திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கார்த்திகைப் பௌர்ணமி
சிவ வழிபாட்டுக்கு உகந்த திருநாளாகத்திகழ்கிறது..!
சிவ வழிபாட்டுக்கு உகந்த திருநாளாகத்திகழ்கிறது..!
படைப்புக் கடவுளான பிரம்மதேவனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்குமிடையே "நானே உயர்ந்தவன்' என்ற பூசல் வந்தபோது, சிவபெருமான் நெடுஞ்ஜோதியாகத் தோன்றி அவர்களின் ஆணவ நிலையகற்றி உண்மையைக் காட்டியருளினார்.
பின்னர் மலையாக மாறிய சம்பவம் கார்த்திகைப் பௌர்ணமியில்தான் நிகழ்ந்தது.
முக்தியடைவது பற்றி ஒரு சிவத்துதி உண்டு.
"தில்லையில் காண- காசியில் இறக்க-சிறக்கும்
ஆரூர்தனில் பிறக்க-எல்லையில் பெருமை
அருணையை நினைக்கஎய்தலாம் முக்தியென்று நடித்தீர்.'
திருவாரூரில் பிறந்தால் முக்தி கிட்டும்;
ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமில்லை.
ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமில்லை.
காசியில் இறந்தால் முக்தி; அதுவும் எல்லாருக்கும் இயலாத ஒன்றே.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி; அது முயன்றால் அடையக்கூடியதுதான் என்றாலும், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு எளிதாகாதே.
ஆனால் "அருணாசல' என்று நினைத்தாலே முக்தியாம்.
ஏழை- பணக்காரன், உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என யார் வேண்டுமானா லும் எங்கிருந்தும் நினைக்கலாம். அதுதான் அருணாசல தல மகிமை!
"நமசிவாய' என்பது சிவ பஞ்சாட்சரம். "அருணாசல' என்பதும் சிவ பஞ்சாட்சரமே. ஒருமுறை "அருணாசல' என்று சொன்னால் ஒரு கோடி "அருணாசல' நாமம் சொன்னதற்குச் சமம்.
அருணாசல மலையை சிவசக்தி மலை ..!
அம்பிகை காஞ்சியில் காமாட்சியாய் எழுந்தருளி, மண்ணால் லிங்கம் அமைத்து வழிபட்டு சிவனுடன் ஒன்றிணையும் வரம் வேண்டினாள்.
சிவனோ, "அண்ணாமலையில் உன் தவம் தொடரட்டும்' என்றார். அதன்படி தேவி தவம்புரிந்து, ஈசனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரியானாள். ஆணும் பெண்ணும் சரிநிகரானவர்கள் என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய தலம் அண்ணாமலை.
நவராத்திரி தேவியான துர்க்கா மகிஷாசுரனை அழிக்கப் பிறந்தவள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரது சக்திகள் ஒன்றிணைந்து உருவான இவள் அண்ணாமலையை வழிபட்டு மேலும் பலம் பெற்றாளாம். மகிஷாசுரமர்தினி கோவிலையும் திருவண்ணாமலையில் தரிசிக்கலாம்.
அருணை என்றால் செம்மை. எனவே இது செந்நிறமலை. செம்மையான மலை. ஞானமலை. ஞானத் தபோதனர்களை- சித்தர்களை தன்பால் ஈர்க்கும் மலை இது.
மாணிக்கவாசகர் "திருவெம்பாவை' என்னும் தெய்வத்திரு நூலை திருவண்ணாமலையில் தான் படைத்தார்.
சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
திருவண்ணாமலை வள்ளால கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர்விட முயன்றார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் அவரை தடுத்தாட் கொண்டார்.
முருகனை மையமாகக் கொண்டு அறுசமயக் கடவுள்களையும் ஒன்றிணைத்து "திருப்புகழ்' பாடினார் அருணகிரியார்.
"திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பதுபோல, "திருப்புகழைப் பாடார் ஒரு புகழும் அடையார்' என்பர்.
இங்குள்ள பாதாள லிங்கம் கரிகால்சோழன் காலத்தில் நிறுவப்பட்டதென்பர். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைத்த பணியின் போது பாதாள லிங்கத்தை அகற்றாமல் காத்தவர் ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.
கார்த்திகைத் தீப ஒளி துலங்க ஓர் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteதோழி மிக்க நன்றி பகிர்வுக்கு .
படங்களும் பகிர்வும் அருமை. திருக்கார்த்திகை வாழ்த்துகள்!
ReplyDeleteஅருணாசல மகிமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஅருணாச்சல மகிமையோடு, திருப்புகழ் பாடிய அருணகிரியின் பெருமையையும் ஒன்றாக சொல்லி இருக்கிறீர்கள். வீட்டு
ReplyDeleteவாசலில் ஏற்றப்பட்டுள்ள அகல் விளக்குகளை எண்ணிப் பார்த்தேன். சுற்றுச் சுவர் போல – 11 விளக்குகள், உள்ளே செல்லும் நுழைவாயிலில் – 5 , உள்ளே நடுவினில் வட்ட வடிவமாய் – 11 . ஆக மொத்தம் அந்த படத்தில் மொத்தம் 27 விளக்குகள். அந்த கணக்கிற்கும் ஏதேனும் ஒரு கணக்கு இருக்கும்.
தங்களுக்கு கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
படங்களுடன் சிறப்பான பகிர்வு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....
ReplyDeleteதீபங்களால் ஜொலிக்கும் இந்தப் பதிவு மிகவும் அழகாக உள்ளது.
ReplyDelete>>>>>
நெல் பொரி + அவல்பொரி உருண்டைகள் மிகவும் ருசியோ ருசியாக உள்ளன.
ReplyDeleteஇருப்பினும் தித்திப்புப் போதவில்லை. இன்னும் கொஞ்சம் வெல்லப்பாகு சேர்த்திருக்கலாம்.
>>>>>
மேற்படி உருண்டைகளின் நடுவே போடப்பட்டுள்ள மிக அழகான குட்டியூண்டு கோலம் தான் [நாகப்பாம்புடன் சிவன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDelete>>>>>
கீழிருந்து இரண்டாவது மற்றும் ஐந்தாவது வரிசைப்படங்கள் ஜோர் ஜோர்.
ReplyDelete>>>>>
அருணாசல மஹிமையைப்பற்றி அனைத்தும் அறிய முடிந்தது.
ReplyDeleteஅருணாசலேஸ்வரரை மனதால் நினைத்தாலே முக்தி பெறலாம்
“ஸ்மரணாத் அருணாசலம்” என என் தந்தையும், தன் கடைசி நாட்களில் அடிக்கடி சொல்லுவார்.
>>>>>
அதன் பிறகு வரும் இறுதி வரியானது “அதாவா புத்ர சந்நிதெள” என்பது.
ReplyDeleteஅதாவது அந்த அருணாசலத்தையும் இறுதி மூச்சினில் நினைக்கத்தவறும் போது, தான் பெற்ற பிள்ளை தன் அருகே இருக்கும் பாக்யமாவது கிடைக்க வேண்டும் என்பது பொருள்.
-o [ 6 ] o-
”அ த வா
Deleteபு த் ர
ச ந் நி தெள”
என்று நான் எழுதியிருக்க வேண்டும்.
’அதவா’ என்பது ’அதாவா’ என ஒருகால் உபரியாக விழுந்து எழுத்துப்பிழையாகி விட்டது. Sorry.
ஒருகால் [இந்த என் எழுத்துப்பிழையினை] நீங்களே கூட உணர்ந்திருக்கலாம்.
தீபங்களைப் பார்க்கும்போது மனதிற்குள்
ReplyDeleteஅமைதியை ஒரு சலசலப்பில்லாத
உணர்வதனை உணருகின்றேன்...
அழகிய படங்களுடன் அருமையான பதிவு சகோதரி!
நன்றியும் வாழ்த்துக்களும்!
தீபத் திருநாளில் அருணாசல மகிமை கூறும் பதிவு. அழகான படங்களுடன் உள்ளம் கவர்ந்தது
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் வாழ்த்து.
ReplyDeleteஅருணாசல மகிமை அனுபவித்தேன்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அனைவருக்கும் மங்கலகரமான - தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவணக்கத்திற்குரிய பதிவு!
ReplyDeleteகார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeletevery very interesting and lovely post madam, thanks a lot for sharing...
ReplyDelete