
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் ஆபத்துகள் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும்.
1.ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
2. ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
3. ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
4. ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
5. ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
6. ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
7. ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
8. ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
9. ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

10. ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
11. ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
12. பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
13. லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்
14. ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

15. அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
16. ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
17. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம்
வஜ்ர நகாய வித்மஹே, தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத். - நரசிம்ம காயத்ரி

"அன்னகூட மகோத்ஸவம்'. "திருப்பாவாடை உற்ஸவம்' என்றும் அழைக்கப்படும் உற்ஸவம் வைணவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பான விழாவாகத்திகழ்கிறது..!

பெருமாளின் சந்நிதியில் அவர் முன்பு சித்ரான்னங்கள் எனச் சொல்லப்படும் பல்வேறு அன்ன வகைகளையும், பட்சண வகைகளையும், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் அழகாக வரிசைப்படுத்தி வைத்து படைப்பார்கள்.
சாற்றுமுறை, வேத திவ்ய பிரபந்த பாராயணங்களுடன் நிவேதனம் செய்துவிட்டு பின்பு அனைத்து பக்தர்களுக்கும் வழங்குவார்கள்.
சிவாலயங்களில் நடைபெறுவது அன்னாபிஷேகம். அங்கு சிவபெருமானின் லிங்கத் திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்திருப்பார்கள்..
பகவான் கண்ணன் கோவர்த்தன கிரிதரனாக இருந்த பொழுது அவன் அருளிய வண்ணம் பல்வேறு உணவுகள் படைக்கப்பட்டு கோவர்த்தனகிரிக்கும் (மலைக்கும்), பசுக்கள், பிற விலங்குகள்,வேதியர்கள், ஆயர்கள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டதாம்.


இன்றும் கோவர்த்தன பூஜை வட மாநிலத்தில் பிருந்தாவனத்திலும், பிற ஆலயங்களிலும் நடத்தப்பட்டு, உணவு பெரும் அளவில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது "அன்னகூடம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த அன்னகூட மகோத்ஸவம் திருவள்ளூர் மாவட்டத்தில், பேரம்பாக்கம் அருகில் உள்ள அருள்மிகு மரகதவல்லி சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நடைபெறுகிறது.
ஏழரை அடி உயரத்தில் நரசிம்மர் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்தி அருள்கிறார்.

தாயாரின் பார்வை முழுவதும் தரிசிப்பவர்கள் மீது விழுவது
தலத்தின் தனிச்சிறப்பு.
கார்த்திகை மாதம் நரசிம்மர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது.
நரசிம்மரின் சுவாதி நட்சத்திரத்தன்று அன்னகூட உற்ஸவம்
நடைபெறுவது விசேஷம்.



அன்னக்கூட மகோத்ஸ்சவம் அறிந்தேன் வியந்தேன். நன்றி சகோதரியாரே
ReplyDeleteநரசிம்மர் தரிசனம் கார்த்திகை மாதம் சிறப்பாய் அன்னகூட விழாவுடன் கண்டு மகிழ்ந்தேன்.உங்கள் பதிவின் மூலமே அனைத்து விழாக்களிலும் கலந்து மகிழ்கிறோம்.
ReplyDeleteஉங்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அருமையான பாடல்கள்... விளக்கமும் அருமை படங்கள் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்று லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்ரம் கராவலம்பம் படிக்க அருளியது மகிழ்ச்சி.
ReplyDeleteஇஸ்கான் இந்த ஸ்தோத்திரத்தை மிகவும் அழகாக அம்ருதமாக வழங்கி இருக்கிரார்கள்.
அதை எனது ஆன்மீக வலையில் இட்டு இருக்கிறேன்.
அதையும் கேட்பதற்கு வழி தந்தது தங்கள் வலையே.
சுப்பு தாத்தா.
www.pureaanmeekam.blogspot.com
நரசிம்மர் தரிசனம். என் சின்ன மாமியார் தன் இரு மகன் மருமகள்களுடன் நன்கொடை வசூலித்து(ம்) வருடா வருடம் சோளிங்கரில் இந்த நாளில் அன்னதானம் செய்கிறார்கள்.
ReplyDeleteஎஸ் பி பி வழங்கும் ஸ்ரீ அமிர்தபாலவல்லிசமேத நரசிம்மசுவாமி ஸ்தோத்ரம் இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா என்று தேடுவேன். வழக்கம்போல அது தவிர மற்றவை கிடைக்கும்
ReplyDeleteசிறப்பு... சிறப்பு... சேமித்துக் கொண்டேம் அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சிறப்பு... சிறப்பு... சேமித்துக் கொண்டோம் அம்மா ... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அழகான படங்களுடனும் அருமையான விளக்கங்களுடனும் அற்புதமாகத் திகழ்கின்றது - அன்னகூடம்..
ReplyDeleteஅன்னகூட மஹோத்ஸவம் பற்றிய அருமையான பகிர்வு ..... பார்த்ததும் பரவஸமானேன்.
ReplyDelete>>>>>
ஆஹா, கடைசி இரண்டு படங்களில்தான் எத்தனை எத்தனை நிவேதனப்பொருட்கள் !
ReplyDeleteஅசத்தலான படங்கள்.
>>>>>
ஆரம்பத்திலேயே கராவலம்ப ஸ்தோத்ரத்தின் 17 ஸ்லோகங்களையும் கொடுத்து, நரசிம்ஹ காயத்ரியுடன் முடித்துள்ளது சிறப்பாக உள்ளது..
ReplyDelete>>>>>
அசையும் மாலையுடன் காட்சியளிக்கும் திவ்யமான நரசிம்ஹ மூர்த்தியை, நீண்ட நாட்களுக்குப்பின் இன்று ஸ்திரவார சனிக்கிழமையில் தரிஸிக்கச் செய்துள்ளது மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுத்தாற்போல உள்ளது.
ReplyDelete>>>>>
ஸ்ரீவைஷ்ணவாளின் ’திருப்பாவாடை உத்ஸவம்’ என்ற இந்தப்பெயரே குதூகலம் அளிப்பதாக உள்ளதே !!!!!
ReplyDelete>>>>>
திருவள்ளூர் மாவட்ட பேரம்பாக்கம் பெருமாள் கோயில் பற்றிய தகவல்கள் சுவையான சுவையாக உள்ளன.
ReplyDeleteஅன்னகூடம் என்றால் சும்மாவா .... சுவைக்கு என்ன பஞ்சம்? !!!!!
>>>>>
அம்பாளின் [தாயாரின்] பார்வை முழுவதும் பதிவினைப் படிப்பவர்கள் மீது விழுவது இந்தத்தளத்தின் தனிச்சிறப்பு தான். ;)
ReplyDelete>>>>>
மேலிருந்து கீழ் நாலாவது படம் [ஸ்வாமி மடியில் அம்பாளுடன்] மிக அழகாக உள்ளது. மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteoooo oooo
அன்னக் கூட உற்சவக் காட்சி கண் கொள்ளாக் காட்சி.எத்தனை அற்புதமாய் இருக்கிறது. புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteமுதல் படம் மிகவும் பிடித்தது. தகவல்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநரசிம்ம ஸ்வாமியும், ப்ரஹலாதனும் இருக்கும் முதல் படம் மனத்தைக் கவர்ந்தது. கராவலம்ப ஸ்தோத்திரத்தை முழுக்கக் கொடுத்து பேருதவி செய்துவிட்டீர்கள், நன்றி!
ReplyDeleteதிருப்பாவாடை உத்சவம், கோவர்த்தனத்தில் அன்னகூட உத்சவம் சேவித்தது எல்லாம் நினைவிற்கு வந்தன.