Thursday, November 14, 2013

குதூகல குழந்தைகள் தின விழா



சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!



குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களது விருப்பத்தின் பேரிலும்நேருவின் நினைவாகவும் , அவரது பிறந்த நாளான 
நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

எதிர்கால உலகை ஆளப்போகிற குழந்தைகளை மகிழ்விப்பதற்காக
கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம்.

சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி திகழ்கிறது.

உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட
நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று.

 இந்தியாவில் கோடிக்கணக்காக குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட் டுள்ளனர். கணிசமான சத விகித குழந்தைகள் “குழந்தை தொழிலா ளர்களாக” உள்ளனர்.

 நாள்தோறும் பலவிதமான வன்முறைகளுக்கு எளிதில் ஆளாகும்
குழந்தைகளின் துன்பங்களுக்கு சரியான பதில் சொல்வதாக அமைந்தால் வருடா வருடம் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும் ..!

ஆள்வோர்களும், அதிகாரிகளும் குழ ந்தைகளின் நல்வாழ்வு தொடர்பாக விடை காண வேண்டிய கேள்விகள் உள்ளன!

உலகளாவிய அமைப்பான ஐ.நா. சபை, குழந்தைகள் உரிமை மற்றும் நல் வாழ்வு தொடர்பாக பல தீர்மான ங்களை நிறைவேற்றியிருக்கிறது.

 உலகின் ஏராளமான நாடுகள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆனால் அவை அனைத்தும் காகித அளவிலேயே, பேச்சளவிலே இருப்பது வருத்தத்துக்குரியது..

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மேம்படுத்துவதன் பொருட்டே, சிற ப்பு விழாக்களும், நிகழ்ச்சிகளும் கொண்டாடப்படுதலே மகிழ்ச்சிதரும் அர்த்தமுள்ளதாக அமையும் ...

சமூகத்தில்  குழந்தைகள் தினமும் சம்பிரதாயங்களாக மாறிவிட்டது.

 இந்த உலகின் குழந்தைகளுக்கு  விமோசனமும், நல்வாழ்வும் கிடைக்கிற திருநாள்தான் உலகெங்கிலும் உண்மையான குழந்தைகள் தினம்
கொண்டாட்டமாக அமையும் ..




15 comments:

  1. இன்றைய குழந்தைகள்தான் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம் அம்மா.
    நல்லதொரு பகிர்வு. அனைத்து சிறார்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். படங்கள் அத்தனையும் அழகு. மியாவ்ஸ் கணினி முன் இருக்கும் படம் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. குழந்தைகள் தின வாழ்த்துகள் அம்மா!!

    ReplyDelete
  4. குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. 'குதூகல குழந்தைகள் தினவிழா' பற்றிய பதிவு மிகவும் அர்த்தம் பொதிந்த செய்திகளைத் தாங்கி வந்துள்ளது. அனைவரையும் யோசிக்க வைப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. வெறும் ஏட்டளவில் சம்பிரதாய அளவில் இந்த தினத்தினைக் கொண்டாடப்படுகிறது என்பதை நன்கு சுட்டிக்காட்டியுள்ளது உண்மை தான்.

    >>>>>

    ReplyDelete
  7. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் + வன்முறை நிகழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வு நாட்டை ஆள்பவர்களுக்கு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம்.

    அதுபோல குழந்தைத் தொழிலாளிகளை வேலையில் அமர்த்தி, ஆட்டிப்படைத்து, அநியாயமாகச் சம்பாதித்து மகிழும் முதலாளி வர்க்கத்திற்கும் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே குழந்தைகளில் எதிர்காலம் பிரகாசிக்க வழியுண்டு என்பதையும் பகிர்ந்துள்ளது நன்று.

    >>>>>

    ReplyDelete
  8. இங்கு திருச்சியில் என் பெரிய அக்கா பேத்திகள் படிக்கும் பள்ளியில், நேரூஜியின் பிறந்த தினமும், குழந்தைகள் தினமுமான இன்றும் விடுமுறை விடப்படவே இல்லை.

    நாளைக்கு விடுமுறை விட வேண்டியுள்ளதால் இன்று பள்ளிக்கு விடுமுறை கிடையாதாம்.

    அவர்கள் வீட்டுக்குச் சென்று வந்த எனக்கு, அந்தக் குழந்தைகளைப் பார்க்காமல் வந்ததில் ஏமாற்றமே ஏற்பட்டது.

    >>>>>

    ReplyDelete
  9. ஆரம்பத்தில் பாப்பா பாடல்களை அழகாகச் சொல்லுயுள்ளது அருமை.

    >>>>>

    ReplyDelete
  10. அனிமேஷன் படங்கள் அனைத்துமே ஜோர் ஜோர்.

    கீழிருந்து படம் 3 + 4 மிகவும் அருமையாக உள்ளன.

    அதிலும் பூனைகள் நடத்தும் அலுவலகம் அட்டகாசம்.

    மேலிருந்து இரண்டாவது படமும் நல்லதொரு தேர்வுதான்.

    -oOo [ 6 ] -oOo-

    ReplyDelete
  11. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய குழந்தைகள் தின வாழ்த்து.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  13. குழந்தைகள் தின வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  14. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வெளியூர் சென்று இருந்தேன். இப்பொழுதுதான் இந்த பதிவைப் படித்தேன். நேரு பிறந்தநாளாம் குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான வண்ணப் படங்கள். பதிவிற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete