Wednesday, November 20, 2013

க்ஷேமம் அருளும் சந்திரபகவான்..!




நாளென் செயும்வினை தானென்செயும் எனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே! 

முருகப் பெருமானை ஒருமுறை அவர்தம் திருவடி முதல் திருமுடி வரை கண்ணாரக் கண்டு, வழிபட்டால்  இருபத்தேழு நட்சத்திரங்களின் பாதிப்பும் நம்மைத் துன்புறுத்த மாட்டா. 

குமரேசர் -  முருகனின் இருதாள், இருசிலம்பு, இருசதங்கை, இருதண்டை, ஆறுமுகம், பன்னிரண்டுதோள்கள், ஒரு கடம்பமாலை ஆகியவற்றின் கூட்டுத்தொகை, இருபத்தேழாகிறது.

இந்த இருபத்தேழையும் தரிசனம் செய்தால் நட்சத்திரங்களாகிய இருபத்தேழும் நம் ஜாதகப்படி தீமைதராமல், நன்மையே செய்யும் என்பது “நாளென் செயும்” என்ற தொடருக்கு விளக்கமாகும்.

முருகப்பெருமானின் திருப்பாதம் இரண்டு, திருமுகம் ஆறு, கடம்பமாலை ஒன்று ஆகிய ஒன்பதையும் கண்டு, வணங்கி தியானித்தால் கிரகசார பலன்கள் நன்மையாகவே அமையும் என்பதை ‘நாடிவந்த கோள் என்செயும் என்ற தொடரின் புதிய விளக்கமாகக் கொண்டு மகிழலாம். 

இதையே ‘ஆசறுநல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே என்றார் திருஞான சம்பந்தர்பெருமான்.

 மதுரையில் சைனரோடு வாதிடப் புறப்படுகையில் திருஞானசம்பந்தரிடம் நேரம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட சிவபெருமான் தன்மைகளை எடுத்துச் சொல்லி ,அவன் எனக்கிருக்க இந்த நேரங்கள் என்னை என்ன செய்யும் என்று  அஞ்சாமையும்,ஊக்கமும் பிறக்குமாறு கோளறு பதிகம் பாடினார். 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனிபாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

எங்கள் தலைவன் சிவபெருமான் பெண் ஒரு பாகமாகக் கொண்டவன்.விஷத்தையே உண்டு கண்டங் கருத்தவன்.
கங்கையையும்,பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் குடிபுகுந்தவன்.அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன் ,வியாழன்,வெள்ளி,ஆகிய நாள்களும்,ராகு,கேது என்பனவும் ஒரு தீமையும் செய்ய மாட்டா.
அவை எல்லாம் நல்லவைகளே.அடியார்களுக்கு மிகவும் நல்லவை.’  
என்னும் பொருள் நிறைந்த   தேவாரப் பதிகத்தைப் பாடினால் கிரஹங்களால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை..!
திருஞானசம்பந்தர் சமணருடன் வாதிட பாண்டியநாடு சென்றிருக்கிறார் என்று கேட்டு அஞ்சிய தந்தை சிவபாத இருதயரை சம்பந்தர் பணிந்து எங்கு சென்றாலும் தன்னை தோணியப்பர் காப்பார் என “மண்ணில் நல்ல வண்ணம்” என்னும் பதிகம் பாடி உணர்த்தினார்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் 
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் 
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.  -     அப்பர்

திருநாவுக்கரசர்  கல்தூணில் தெப்பமாக மிதந்ததும் , வெப்ப அறையில் மலராய் மலர்ந்து இருந்ததும் , விஷத்தால்  துன்பப்படாமல் இருந்தத்தும் நம்ச்சிவாய என்னும் உயரிய மந்திரத்தை மனதில் சிந்தை செய்ததுதான் ..!
வேதங்கள் பூஜித்த காலத்திலிருந்து அடைப்பட்டிருந்த நுழைவாயில் கதவைத் திறந்து பக்தர்களுக்கருள் புரிய எண்ணிய சம்பந்தர் நாவுக்கரசைப் பதிகம் பாட வேண்டினார். அவரும் பாட, மூடியிருந்த கதவுகள் தாமே திறந்து கொண்டன. தொண்டர் குழாம் சம்பந்தருடனும் அப்பருடனும் சென்று இறைவனை வழிபட்டனர். பின்னர் இனி தினமும் திறந்து மூடுமாறு கதவை அடைத்திட சம்பந்தர் “சதுரம் மறைதான்” என்ற பதிகம் பாட முதல் செய்யுள் முடிந்ததுமே கதவு அடைத்துக் கொண்டது.



 நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பது ராசி...

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம்  ராசி என்று ஜாதககட்டத்தில் குறிப்பிடப்படுகிறது..

. சூரியனைப் "பிதுர் காரகன்" என்கிறோம்.

சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம்.

எனவே சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாக்களாக
வழிபடு தெய்வங்களாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன்.

அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர் ‘சர்வம் சந்திர கலாபிதம்‘ என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன.

எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி.

 சாத்வீக குணம் கொண்ட சந்திரன் ஒரு சுப கிரகர்.

பராசக்தியின் அம்சமான சந்திரன் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம்

அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன்.

நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே.


சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான்
பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.  ,திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கவும் , கோச்சார பலன்களைப் பார்க்கவும் . கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்யவும்   சந்திரன் முக்கியத்துவம் பெறுகிறது..

சந்திரன் மூலம்  யோகங்கள், அவயோகங்கள், தடைகள் , இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

 பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் 
சந்திரன் வருமானால், அதையே  சந்திராஷ்டமம் என்கிறோம்.  

சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம்.

சந்திரன் ஒரு  ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம்.

அதிலும் குறிப்பாக ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

 சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்வதில்லை..!

மணமகன், மணமகள் ஆகிய  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.

குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள்.

சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால்  மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன

சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம்  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை
சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால்  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

வேகமாக சுற்றும் சந்திரன் கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து குணாதிசயங்கள் வேறுபடுகிறது, 

லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன.

சந்திரன் வழியாக தான் அதிகப்பட்ச கிரகங்கள்  பலனை தருகிறது.
சந்திரன் மறையும்பொழுது கிரகங்களின் நல்ல பலன் கிடைப்பதில்லை. அதனால் பிரச்சினை ஏற்படுகிறது. 

சந்திராஷ்டம தினத்தில் பல பிரச்சினை ஏற்படும்.. ஜாதகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது என்று குறித்துக்கொண்டு வந்தால் அது சந்திராஷ்டம நாளாக இருக்கும்.

மாதம் ஒருமுறை இரண்டே கால் நாள் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. முதல் நாள் பதட்டம் அதிகமாக இருக்கும். இரண்டாம் நாள் 25 சதவீதமாகக் குறைந்துவிடும்.

இரண்டாம் நாளில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். முதல் நாள் செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் விநாயகருக்குத் தயிர் அபிஷேகம் செய்து அருகம்புல் சாத்தி வழிபட்டு செய்யலாம்.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாத்தி வழிபட்டுந்தால் சிரமம் நீங்கும்..!


பிறந்த நட்சத்திரம்    -    சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி    -    அனுஷம்
பரணி    -    கேட்டை
கிருத்திகை    -    மூலம்
ரோகிணி    -    பூராடம்
மிருகசீரிஷம்    -    உத்திராடம்
திருவாதிரை    -    திருவோணம்
புனர் பூசம்    -    அவிட்டம்
பூசம்    -    சதயம்
ஆயில்யம்    -    பூரட்டாதி
மகம்    -    உத்திரட்டாதி
பூரம்    -    ரேவதி
உத்திரம்    -    அஸ்வினி
அஸ்தம்    -    பரணி
சித்திரை    -    கிருத்திகை
சுவாதி    -    ரோகிணி
விசாகம்    -    மிருகசீரிஷம்
அனுஷம்    -    திருவாதிரை
கேட்டை    -    புனர்பூசம்
மூலம்    -    பூசம்
பூராடம்    -    ஆயில்யம்
உத்திராடம்    -    மகம்
திருவோணம்    -    பூரம்
அவிட்டம்    -    உத்திரம்
சதயம்    -    அஸ்தம்
பூரட்டாதி    -    சித்திரை
உத்திரட்டாதி    -    சுவாதி
ரேவதி    -    விசாகம்


21 comments:

  1. திருஞான சம்பந்தர் பார்க்க பாலமுருகனைப் போலவே இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

      திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம்

      வேத நெறி தழைத்தோங்கவே திருஞான சம்பந்தரின் அவதாரம் நடந்தது என்று சொல்கிறார் சேக்கிழார்.

      Delete
  2. சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..!

      கருத்துரைக்கும் , வாழ்த்துரைக்கும் இனிய நன்றிகள்..!

      Delete
  3. வழக்கம் போலத் தெய்வீக மனம் கமழும் பதிவு. உங்கள் தொண்டு நீடூழி வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  4. சந்திரனின் தகவல்களுடன், சந்திராஷ்டமம் பற்றி விரிவாக விளக்கியிருந்தமை கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றிகள்.

    ReplyDelete
  5. மிக அருமையாக தகவல்களைத் திரட்டி
    அழகிய படங்களுடன்... அற்புதம்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. ' நாளென் செய்யும் ' பாடலைப் பல வருடங்களுக்குப்பிறகு இங்கு படித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  7. இந்த ஆண்டின் 325வது பதிவான இது சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..
      கருத்துரைகள் அனைத்திற்கும்
      சந்தோஷப் பகிர்வுகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  8. நாளைய பதிவு தங்களின் 1100வது பதிவாகும்.

    இரட்டிப்பு சந்தோஷங்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. இந்த பதிவினை வெளியிட தங்களைத் தூண்டிய திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  10. நமது தாய்க்கும், மனதுக்கும், எண்ணங்களுக்கும், ஜாதக ஜனன ராசிக்கும் அதிபதியாக சுப கிரஹமாக அமைந்துள்ள சந்திரனையே பீஸ் பீஸாகக் கிழித்துக் கோர்த்து, தகவல்களை அதற்குள் வெகு வேகமாகத் திரட்டிச் சேகரித்து, எழுதியுள்ள அனைத்து விஷயங்களும் பிரமிப்பளிப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  11. நாளென் செயும் ......

    ஆசறு நல்ல நல்ல ......

    வேயுறு தோளி பங்கன் ....

    மண்ணில் நல்ல வண்ணம் .....

    சொற்றுணை வேதியன் ......

    போன்ற பதிகங்களும் அதற்கான விளக்கங்களும் சூப்பரோ சூப்பர்.

    >>>>>

    ReplyDelete
  12. சந்திராஷ்டமம் என்றால் என்ன ? என்பதைப்பற்றியும் அதன் விளைவுகளைப்பற்றியும் மேல்வந்தவாரியாக ஓரளவு அனைவராலும் அறிய முடிந்திருக்கும் இந்தத் தங்களின் தங்கமான பதிவினால்.

    -o [ 6 ] o-

    ReplyDelete
  13. ஆன்மீகப் பதிவுகளூடே சோதிடமுமா?நீங்கள் சொல்வதன்படி என் மனைவியின் நட்சத்திரம் வரும் நாள் எனக்கு சந்திராஷ்டம நாளாகும்.....!..?

    ReplyDelete
  14. சாத்தியம் பற்றியும் எழுதுகிரீர்களே!.இனி ஜோதிடமும் எதிர் பார்க்கலாமா?

    ReplyDelete
  15. Madam, thank you so much for sharing the wonderful information. As u have mentioned I have gone through worst days, only then came to know it was chandrashtamam. Now my mom tells me every month when is chandrashtamam. ButiI wanted to know the exact reason and u have explained it scientifically. I asked about it in the previous post and ur really fast, thank you so much amma

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!

      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      சில் காலண்டர்களில் சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரத்திற்கு என்று குறிப்பிட்டிருப்பார்கள் .. அன்று முக்கியமான சுபகாரியங்களைத்தவிர்க்கலாம்.

      தவிர்க்கமுடியாவிட்டால் , பதிகங்களைப்பாடலாம் ..ஒன்பது முறை ஓம் ஓம் என்று உச்சரித்தாலும் மனத்த்டுமாட்டம் நீங்கி நலன் பெறலாம் ..

      Delete
  16. அருமையான விளக்கம் அம்மா.
    படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  17. எத்தனை தகவல்கள்...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete