துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை,
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை
தன்பகத்தைக் காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும்
அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.''
சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள்.....!
பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். கார்த்திகை தீபம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுகின்றது. திருவண்ணாமலை க்ஷேத்ரத்தில் சிவனும் சக்தியும் இணைந்த வடிவாகிய அர்த்தநாரீஸ்வரருக்கு தீபம் ஏற்றிய பிறகு தான் மலை மேல் தீபம் ஏற்றப்படும்...
அனைத்து சிவாலயங்களிலும், முருகப்பெருமான் குடிகொண்ட ஆலயங்களிலும் ஸர்வாலய தீபமாகக் கொண்டாடப்படுகின்றது.
கார்த்திகை தீபத்தினை ஏற்றுவதும், காண்பதும் நம் வாழ்வில் ஏற்படும்
இருள் எனும் துன்பங்களை நீக்கி, மகிழ்ச்சி எனும் ஒளிவெள்ளத்தை அளிக்கும்
திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம்.
சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் திரிபாக கூறுவார்கள்.
திரிபுரஸம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக ஐதீகம் ..!
சொக்கப்பனை - பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் ..
பனை மரம் கல்பதரு ,. தேவமரம் என்றும் அழைக்கப்படுகிறது.
பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது.
வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.
பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் அன்று புதுமணமகளைக் கொண்டு, புது தீபம் ஏற்றச் சொல்வதும், பால் காய்ச்சச் செய்வதும், மணல் படாத கார் அரிசியைக் கொண்டு செய்யப்படும் அவல் - வெல்ல இனிப்பைச் செய்து நிவேதனம் செய்வதும், தீபங்களை வீடுகளிலும், தெருக்களிலும் ஏற்றச் செய்வதும் சிறப்பு ..!
வீட்டளவில் தீபம் என்பது ஊரளவில் சொக்கப்பனை. சொக்கப்பனையின் உள்ளர்த்தம் மன இருள் அகன்று அக ஒளி ஏற்பட்டால் தீயன கருகும் ஞான ஒளி மனதில் உண்டாகும். தீயன தூசாகும் என்பதே. கார்த்திகை பௌர்ணமியன்று பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. அதில் பனை ஒலை கொளுத்தப்படுகின்றது.
உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 6,000 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 1,000 லிட்டரில் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி வைக்கப்பட்டு மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள்
அணையாமல் எரியக்கூடியதாகும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை பௌர்ணமியில்
பெருந்தீப வழிபாடு சிறப்பு பெற்றது ..!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் நம்பெருமாள் கதிர் அலங்காரம் எனப்படும் முலிகைகள் கொண்ட தனி பாதுகாப்பு ஏற்பாட்டுடன் கார்த்திகை கோபுரம் பகுதிக்கு வருவார்.
சுமார் 20 அடி உயரத்தில் பனை ஓலைகளால் நிர்மாணிக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வந்து பெருமாள் சக்கரத்தாழ்வார் சன்னதி பகுதியில் காத்திருக்க இரவு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
பெருமாள் நந்தவனம் வழியாக தாயார் சன்னதி பகுதிக்கு செல்வார்.
அங்கு அரங்கனுக்கு திருவந்தி காப்பு எனப்படும் திருஷ்டி கழித்தல்
நிகழ்ச்சி நடைபெறும்.
பெருமாள் மூலஸ்தானத்தின் முன்புறம் உள்ள சந்தனு மண்டபம் சேர்ந்து அங்கு வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்த திருமுகப்பட்டயம் படிக்கப்படும்
அருணாசலத்தை மனதால் நினைத்தாலே முக்தி கிட்டும்..
அரங்கனோ ...அருணாசலமோ அப்போதைக்கு
இப்போதே சொல்லிவைத்தால்தான் நல்லது ..
இறுதிக்காலத்தில் நா எழும்பாமல் சிரமப்ப்டுத்தும்போது உடல் உபாதைகளில் மனம் தடுமாறி இறைவனை நினைக்கமுடியுமோ என்னவோ ..
இப்படித்தான் இறுதிக்காலத்தில் துன்ப்படும் ஒருவரை அருணாசலா என்று சொல்லவைக்க அரும்பாடு பட்டனர் அக்கறையுள்ள உறவினர்கள்..
அவரோ அப்படீங்க முடியல்லியே.. ங்க முடிந்தால் .. ங்கப்பட்டால் இங்கமாடேனா என்று நீளமாக பிதற்றத்தான் முடிந்தது அவரால்..
உறவினர்கள் ங்கப்பட்டால் ங்கமாடேனா என்று சொல்வதற்குப் பதில் இறைநாமம் சொல்ல லபிக்கவில்லையே என விசனப்பட்டனர்..
வேறு என்னதான் செய்யமுடியும் அவர்களால் ..!
மற்றொரு தோசைப்பிரியர் முருக ..முருக .. என்று சொல்ல முடிந்தவ்ரிடம் அப்படித்தான் முருகா.. முருகா ..என்று சொல்லு என ஊக்கப்படுத்தினர் ..
அவரோ முறுக முறுக ரவா தோசை வேண்டும் என்று சொல்லி உயிரை விட்டாராம் .... ஹூம் ..என்னத்தைச் சொல்ல..!
மற்ற கற்களெல்லாம் தெருவில் கிடக்க தங்கம் உரசிப்பார்த்த உரைகல் மட்டும் பொற்கொல்லனின் பாதுகாப்பான பெட்டியில் காக்கப்படுவது போலத்தானே ..முருகா.. அரங்கா.. அருணாசலா.. சிவா ..ராமா .. போன்ற ஏதாவது இறைநாமத்தால் உச்சரிக்கப்பட்டு இதயத்தால் இறைவணை வணங்கி நாவால் துதிபாடிய ஆன்மாக்களை இறைவன் தன் பாதுகாப்பில் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்...!
ஒளி மயமான பதிவு!.. அருமையான அழகான படங்கள்!.. நல்ல தகவல்களைத் தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி!..
ReplyDeleteSUPERB POST.
ReplyDeleteSUBBU THATHA.
அருமையான படங்களுடன் தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
’மஹா தீபம் - சொக்கப்பானை’ என்ற தலைப்பினில் இன்றும் ஒளி மயமானதோர் பதிவு.
ReplyDelete>>>>>
ஜொலித்திடும் படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteஎரியும் விளக்குகளால் காட்டப்பட்டுள்ள சங்கு + ஸ்ரீசக்ரம் மிகவும் பிடித்துள்ளது.
>>>>>
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஏற்றப்பட்டுள்ள மஹாதீபத்தை அருகே சென்று பார்த்தது போன்றதோர் மனத்திருப்தி ஏற்பட்டது.
ReplyDelete>>>>>
மேலிருந்து கீழ் மூன்றாவதாகக் காட்டியுள்ள வெள்ளி ரிஷபத்தில் ஸ்வாமியும் அம்பாளும் அசத்தல்.
ReplyDelete>>>>>
சொக்கப்பானை தத்துவ விளக்கங்களை நன்கு அறிந்து மகிழ்ந்தோம்.
ReplyDelete>>>>>
முறுக முறுக ... முறுகலாக ரவாதோசை [ கெட்டிச்சட்னி + சூடான வெங்காய சாம்பாருடன் ] சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது அந்த வரிகளைப்படித்ததும்.
ReplyDeleteநாக்குக்கு ருசியான உணவுகளில் மட்டுமே [என்னைப்போல] இறைவனைக் காண்பவராக இருப்பாரோ என்னவோ.
நிச்சயம் அவரும் இறைவனடி சேர்ந்திருப்பார் என எனக்கு எண்ணத்தோன்றுகிறது.
>>>>>
தங்கம் உரசிப்பார்த்த உரைகல்லாகத்தான் உள்ளன ... தங்களின் தங்கமான இதுபோன்ற பதிவுகள்.
ReplyDeleteஅதனால் மட்டுமே மனதில் பத்திரப் ப டு த் தி, வருகிறேன்.
>>>>>
மன இருள் அகன்று - அக ஒளி ஏற்படட்டும்
ReplyDeleteதீயவை தீயெனக் கருகி தூசாகட்டும்.
ஞான ஒளி என்றும் மனதில் நிலைக்கட்டும்.
-o [ 8 ] o-
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம் நாராயணா என்னும் நாமம்.
ReplyDeleteசொக்கப் பானை பகிர்விற்கு நன்றி.
பனை பற்றிய விவரங்கள் அருமை!
ReplyDeleteசொக்கப்பனை பற்றிய விவரங்களை படங்களுடன் சூடாகத் தந்தமைக்கு நன்றி! எங்கள் ஊரான திருச்சியையும் உங்கள் பதிவின் வழியே ரசித்தேன். ” முறுக முறுக ரவாதோசை” நல்ல ஜோக்! எனக்கும் முறுக முறுக ரவாதோசை என்றால் சின்ன வயதிலிருந்தே ஆசைதான்.
ReplyDelete
ReplyDeleteநேற்று தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் காட்சியைக் கண்டு களித்தேன். இன்று தங்கள் பதிவு மூலம் காணற்கரிய காட்சியை கண்டு அகமகிழ்ந்தேன். காண வழி செய்த தங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
ReplyDeleteநேற்று தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் காட்சியைக் கண்டு களித்தேன். இன்று தங்கள் பதிவு மூலம் காணற்கரிய காட்சியை கண்டு அகமகிழ்ந்தேன். காண வழி செய்த தங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
சொக்கப்பனை பற்றிய அரிய தகவல் வாசித்தேன்.... மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்ட விதம் அருமை படங்களும் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
very very informative madam, I am learning a lot of new things, I have seen this sokka panai but did not know the real meaning of it. Thanks a lot for that. The incident about the dosa is very funny and interesting. Thanks a lot for sharing madam, waiting for your next post....
ReplyDeletePriya Anandakumar has left a new comment on the post "மஹா தீபம் - சொக்கப்பனை":
Delete//very very informative madam, I am learning a lot of new things, I have seen this sokka panai but did not know the real meaning of it. Thanks a lot for that. The incident about the dosa is very funny and interesting. Thanks a lot for sharing madam//
Mrs. Priya Anandakumar Madam,
I am very happy to see your comments here for the past 2-3 posts. Thanks a Lot for the same.
//waiting for your next post.... //
Every Day exactly in the early morning 5 o' clock [Sharp 5 AM], you may expect a new post in this Blog. It is an automatic system of release.
I hope you may remember my Post about this Honorable Madam:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
With Best Wishes VGK [GOPU]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை நேரில் கண்டதில்லை. தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் ஒளி வீசுகின்றன வாழ்த்துக்கள்
ReplyDeleteபயனுள்ள பதிவு அசத்தலான படங்கள்
ReplyDeleteஅனைத்தும் அருமை
வாழ்த்துக்கள்
பதிவு தீபங்களைப் போல் ஜொலிக்கிறது.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - மஹா தீபம் - சொக்கப்பனை - பதிவு அருமை - எத்தனை எத்தனை படங்கள் - விளக்கங்கள் - தகவல்கள்
ReplyDeleteதிருவண்ணாமலி, உச்சிப்பிள்ளையார் கோவில் - திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில், அனைத்தியும் ஒரு பதிவில் அற்புதமாக அளித்தது நன்று
அருமை நண்பர் வை.கோவின் அத்த்னை மறுமொழிகளையும் அப்படியே வழி மொழிகிறேன்
அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா) has left a new comment on the post "மஹா தீபம் - சொக்கப்பனை":
Deleteஅன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.
//அருமை நண்பர் வை.கோவின் அத்தனை மறுமொழிகளையும் அப்படியே வழி மொழிகிறேன் - நட்புடன் சீனா //
ஆஹா, தாங்களாவது அவ்வப்போது இதுபோல ஏதாவது சொல்லி, அடியேனையும் தட்டிவிட்டு, நினைவில் வைத்துக்கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா. மிக்க நன்றி, ஐயா.
அன்புடன் VGK
கார்திகைதீபம் சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி ஒளி பரவட்டும்.
சொக்கப்பனை குறித்த தகவல்களும், படங்களும் மிக நன்றி. ரசித்தேன்.....
ReplyDelete