திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
அன்னவாகனத்தில் அருள்தரும் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன்
திருச்செந்தூரில் சூரபன்மனை சம்காரம் செய்த முருகப்பெருமான், பராசுர முனிவரின் புதல்வர்கள் அறுவரும், நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக்கொண்டதால் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினார்
சூரபன்மனை சம்காரம் செய்து மீண்டும் தனக்கு அரசாட்சி அளித்த முருகப் பெருமானுக்கு இந்திரன் தனது மகள் தெய்வானையை மணம்முடித்த
திருப்பரங்குன்றத் திருத்தலத்தைப் பற்றி திருமுருகாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல், மதுரைக்காஞ்சி, தேவாரம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மும்மணிக்கோவை உள்ளிட்ட ஏராளமான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவன் பரங்கிரிநாதர், இறைவி-ஆவுடைநாயகி.
கல்லத்தி மரம் ஸ்தல் விருட்சமாகத்திகழ்கிறது ..!
குடைவரைக் கோயில் 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
வடக்குத் திசை நோக்கி கோயில் அமைந்துள்ளது.
கோயில் முகப்பில் ஆஸ்தான மண்டபம் எனும் பெரியமண்டபம்
48 தூண்களுடன் உள்ளது.
கருப்பண சுவாமி கோயில் மற்றும் பத்ரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு மற்றும் முருகப் பெருமான் தெய்வானை திருமணக்கோலம், மஹாவிஷ்ணு, மகாலெட்சுமி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
லட்சுமி தீர்த்தம் மீனுக்கு பொரி உணவு போடுவது விஷேசம்..!
கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை.
3 வாயில்களுடன் அர்த்தமண்டபம் உள்ளது.
பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை (கொற்றவை) மற்றும் முருகப் பெருமான் வடக்கு நோக்கியும், பவளக் கனிவாய்ப் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
முருகப்பெருமான் கருவறைக்குள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானையும், வடப்பக்கம் நாரதரும் இடம் பெற்றுள்ளனர்.
இனிய காலைப் பொழுதில் - அருமையான தரிசனம்.. முதலாவது படை வீட்டின் முத்தான படங்களுடன் அழகான பதிவு!..
ReplyDeleteஅருமையானதொரு பகிர்வு அம்மா!!. நான் பிறந்து வளர்ந்த ஊர் இது. திருமணக் கோலத்தில் இருப்பதால், திருமுருகன் அன்பர் தம் குற்றங்களைக் காணாது,குணங்களை உவந்து வரமளித்தருளுகிறான்.
ReplyDeleteஒரு சிறிய மேலதிகத் தகவல் அம்மா!!.. கோயிலில் நவக்கிரக சந்நிதி தனித்துக் கிடையாது. ஆனால், அர்த்த மண்டபத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள திருவுருவங்களில், சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி(குரு) ஆகிய திருவுருவங்கள் உள்ளன. செவ்வாய் பகவான் வணங்கும் தெய்வமான முருகன், புத பகவான் வணங்கும் தெய்வமான பெருமாள், சுக்கிரபகவான் வணங்கும் தெய்வமான ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆகியோரின் சந்நிதி இருப்பதால் அவர்களுக்கு தனித்து சந்நிதி இல்லை. அர்த்த மண்டபத்தின் கீழுள்ள மண்டபத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. அருகில் ஸ்ரீராகு, ஸ்ரீகேது பகவானும் நாக உருவில் வீற்றிருக்கின்றனர்.
அழகான படங்களுடன் திருமுருகனைக் கண்ட போது நேரில் சென்றது போல் தோன்றிவிட்டது. அருமையான பகிர்வு அம்மா!!. மிக மகிழ்கிறேன். மிக்க நன்றி..
மனம் நிறைந்த திவ்ய தரிசனம்! நன்றி!
ReplyDeleteகடைசியில் காட்டியுள்ள படம் மிகவும் பிடித்துள்ளது. சூப்பர் கவரேஜ்.
ReplyDeleteதிருமணக்கோலம் கொண்ட முருகனை மறுபடியும் பாடி பாடி மகிழ
ReplyDeleteஇன்னுமொரு வாய்ப்பு தந்தமைக்கு,
உங்களுக்கு நன்றி சொல்வதா இல்லை,
உங்களை இப்பதிவு எழுதச்சொல்லி உந்திய
முருகப்பெருமானுக்கு நன்றி சொல்வதா ???
சுப்பு தாத்தா.
எங்கள் வீட்டருகே உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயத்தின் சார்பில்நேற்று இரவு எங்கள் தெருவில் எங்கள் அடுக்குமாடி வளாக வாசலில் சூர சம்ஹாரம் வெகு ஜோராக வழக்கம் போல நடைபெற்றது. நிறைய கூட்டம்.
ReplyDeleteநாங்கள் எங்கள் வீட்டு ஜன்னலிலிருந்தே ஜோராகப் பார்த்து மகிழ முடிந்தது. தங்களின் பதிவுகளைத்தான் மனதில் நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்.
>>>>>
ஆட்டுகிடா வாகனத்தில் முருகனை ஜோராக அலங்கரித்து மின் விளக்குகளுடன் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மேள தாளத்துடன் தூக்கி வருவார்கள்.
ReplyDeleteஅதே போல சூரனை கிழக்கிலிருந்து மேற்காக ஸ்வாமியை எதிர் நோக்கி தாறுமாறுமாக ஆவேசமாக சண்டை இடுவது போலத் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
>>>>>
ஸ்வாமி முன்னே வரவர சூரனை பின்னோக்கி இழுத்துச் செல்வார்கள். பிறகு ஒரு கட்டத்தில் தலையைத் தனியே ஒரு வேலால் குத்தி எடுத்து விடுவார்கள்.
ReplyDeleteபிறகு தலை தனியாகவும், உடல் தனியாகவும் உள்ள சூரனை வேகமாக அந்த பஜ்ஜிக்கடை சந்துப்பக்கம் ரிவர்ஸில் மறைவாக எடுத்துச்செல்வார்கள்.
>>>>>
பிறகு மீண்டும் வேறொரு சூரன் தலையை அதில் பொருத்தி மீண்டும் தூக்கி வந்து சண்டை நடப்பதாகச் செய்வார்கள்.
ReplyDeleteஅந்த சூரனை நேராகக்கொண்டுவராமல் இங்குமங்கும் இடது புறமும் வலது புறமும் உள்ள ஜனங்களின் கூட்டத்தை நோக்கிக் கொண்டு போவது தான் .... ஒரே பரபரப்பாகவும் .... வேடிக்கையாக இருக்கும் நிகழ்ச்சி.
>>>>>
இரண்டாவது முறையும் தலை தனியே வேலால் குத்தி எடுக்கப்படும். ஜனங்கள் ஹாய் ... ஹூய் என விசிலடித்துக் கூச்சலிடுவார்கள்.
ReplyDeleteமீண்டும் பஜ்ஜிக்கடை சந்துக்குள் ஓடி ஒளிந்த சூரனை மூன்றாவதாக ஓர் புதிய அலங்கரிக்கப்பட்ட தலையுடன் கொண்டு வருவார்கள்.
>>>>>
மூன்றாவது முறை என்பது கடைசி தடவை என்பதால், வேடிக்கை பார்க்கும் ஜனங்களிடமும், சூரனை வையாளி போட்டுத் தூக்கி வரும் ஆட்களிடமும், அதற்கேற்றபடி மேள தாளங்கள் அடிப்பவரிடமும், ஒருவித பேரெழுச்சியும் பரபரப்பும் அதிகமாக இருக்கும்.
ReplyDeleteஇவை எல்லாவற்றையுமே எங்கள் வீட்டு ஜன்னல்கள் மூலம் அழகாகப்பார்த்து போட்டோவும் எடுக்க முடிவதில் எனக்கு ஓர் தனி சந்தோஷம்.
>>>>>
மூன்றாம் முறை சூரனின் தலை சீவப்பட்டதும் ஜனங்கள் ஸ்வாமிக்கு மிக அருகேயும், ஸ்வாமிக்குப்பின்புறமும் [ராமா கஃபே அருகில்] ஓடி விடுவார்கள்.
ReplyDeleteஸ்வாமிக்கு முன்னால் ரோட்டில் ..... ஈ காக்காய் இருக்காது.
>>>>>
ஏனெனில் நடுரோட்டில் மிகப்பெரிய 10000 வாலா பட்டாசு வெடிச் சரங்களில் 2-3 ரெடியாக ஏற்கனவே வைத்து விடுவார்கள். கொளுத்தி விடுவார்கள்.
ReplyDelete10 நிமிடத்திற்கு தொடர்ந்து வெடித்தபடி இருக்கும். ஒரே ஜே... ஜே... ன்னு அலம்பல் தான்.
அது ஒருவழியாக வெடித்து முடிந்த பிறகே ஸ்வாமிக்கு தீபாராதனை, விசேஷ அர்ச்சனைகள் முதலியன சிறப்பாக நடைபெறும்.
>>>>>
ஏதோ ஒவ்வொரு வருஷமும் [கடந்த 11 வருஷங்களாக] இந்த சூர சம்ஹாரத்தையும், தைப்பூசத் திருநாளில் அடுத்தடுத்து வரும் அனைத்துக்கோயில் ஸ்வாமி அம்பாள் ஊர்வலங்களையும் வீட்டிலிருந்தவாறே காண, பகவத் கிருபையால் கொடுத்து வைத்துள்ளோம். ;)
ReplyDelete-oOo-
அதே போல சித்திரை மாதம் தாயுமானவர் தேர் ஊர்வலங்கள், வாணப்பட்டரை மஹமாயீ தேர், இதர விசேஷ நாட்களில் மலைக்கோட்டை + நாகநாதர் கோயில் ரிஷப வாகனம் + இதர வாகன ஸ்வாமி புறப்பாடுகளை நன்றாகப் பார்க்க முடிவதில் ஓர் தனி சந்தோஷமாகவே உள்ளது.
ReplyDeleteHeart of the Town ஆக இருப்பதால் ஒருசில தவிர்க்க இயலாத சிரமங்கள் இருப்பினும், குறிப்பாக இங்கு நான் வீடு வாங்கி குடி வந்தது இவற்றையெல்லாம் உத்தேசித்து மட்டுமே.
தேர்களும் ஒருசில ஸ்வாமி புறப்பாடுகளும், நம்ம ஊர் தெப்பமும் காண இதோ இணைப்புகள் ......
http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html
http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html
ஏற்கனவே நீங்க பார்த்தது தான். இணைப்புகள் மற்றவர்களுக்காகக் கொடுத்துள்ளேன்.
-oOo- -oOo- -oOo-
திருப்பரங்குன்ற முருகனின் திவ்ய தரிசனம்...
ReplyDeleteஅழகன் முருகனின் அற்புதத் தோற்றங்கள் மிக அருமை!
பகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
திருப்பரங்குன்றம் முருகனின் தரினம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.... படங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகன் முருகனின் அழகிய படங்களுடன் திருப்பரங்குன்றம் பற்றிய பகிர்வு அருமை அம்ம...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
superb pictures
ReplyDeleteகந்தசஷ்டி சமயத்தில் தினம் தினம் முருகன் பற்றிய பதிவுகள்....
ReplyDeleteரசித்தேன்...