ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
எட்டே வரியில் ஆதித்தன் பெருமையெல்லாம் சொல்லும் சாகசம்...!
சூரியனே ! நீயே மகான்; நீயே ஸத்யம். ஆதித்தனே !
நீயே மகான். நீயே ஸத்யம்.
நீ மகான் என்பதால் உன் மஹிமை போற்றதற்குகந்தது.
ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதய நேரத்தில் பிரம்மா ரூபத்திலும், உச்சிப் போதில் பரமேஸ்வர ரூபத்திலும், அஸ்தமன மாலை நேரத்தில் விஷ்ணு ரூபமாகவும் காப்பதாக ஐதீகம், காலை மற்றும் மாலை சூரியக் கதிரில் விட்டமின்- D இருப்பதாக விஞ்ஞானமும் கூறுகின்றது.
தமிழகத்தில் ஐப்பசி அமாவாசைக்குப் பின் (தீபாவளி) வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடநாட்டில் சில இடங்களில் ஐப்பசி சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நலமுடன் இருக்க மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.
பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள்.
நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.
சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.
மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாக இருப்பதாகச் சொன்னாலும், தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனைப் பிரார்த்திப்பதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும்.
இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று
வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.
கங்கை நதி ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும்
சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.
.
GOOD MORNING !
ReplyDeleteசூர்ய சஷ்டி பூஜை பற்றி அறியாத பல தகவல்களை அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்.
மிகவும் பிரமாதம்.
>>>>>
GOOD MORNING !
ReplyDeleteசூர்ய சஷ்டி பூஜை பற்றி அறியாத பல தகவல்களை அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்.
மிகவும் பிரமாதம்.
>>>>>
அனைத்துப் படங்களுமே வெரி வெரி பியூட்டிஃபுல் கவரேஜ்.
ReplyDeleteகட்டிக்கரும்பாய் இனிக்கிறது ;)
>>>>>
நடுவே, குளக்கரையில் முறங்களில் காட்டியுள்ள தேங்காய், பழங்கள் போன்ற வாயனப் பொருட்கள் ரொம்ப நன்னா இருக்கு.
ReplyDeleteஅப்புறம் இறுதியாகக் காட்டியுள்ள படமும் மிக அழகோ அழகு. எப்படித்தான் இவற்றையெல்லாம் இவ்வளவு அழகாகப் பெரிதாக நிறைவாக உங்களால் காட்ட முடிகிறதோ?????
தொழில் இரகசியம் + இராணுவ இரகசியம் போல எதுவும் சொல்ல மாட்டீர்கள் ;(
[சொல்லாட்டி போங்க - எதைத்தான் சொல்லியிருக்கீங்க? ;( ]
>>>>>
எங்குதான் போய் எப்படித்தான் இவ்வளவு படங்களையும் தகவல்களையும் திரட்டிச் சேகரித்துத் தருவீர்களோ!!!!!!
ReplyDeleteஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. பீஹார், மத்யப்பிரதேசம் என அவர்கள் கொண்டாடும் ரவிசஷ்டியை இங்கிருந்தே தங்கள் தயவால் அழகாக காணமுடிந்ததில் மகிழ்ச்சி.
>>>>>
எட்டே வரிகளில் ஆதித்தன் பெருமையெல்லாம் சொல்லும் சாகசம் ’ஆயிரம் கரங்கள் நீட்டி.....” பாடல் என்றால் அதை மிக அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் பதிவாக்கிக்கொடுத்துள்ள ’ஆயிரம் பதிவுகள் தந்த அபூர்வ சிந்தாமணியாகிய’ தங்களின் சாகசம் மட்டும் சும்மாவா!
ReplyDeleteசூப்பரோ சூப்பராக்கும். ;)
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
-oOo-
முற்றிலும் அறிந்திராத தகவல்கள்...
ReplyDeleteஅறிந்துகொண்டேன் தங்களின் பதிவு மூலம்...
இதுவரையிலும் படித்தறியாத தகவல்கள்..
ReplyDeleteசூரிய சஷ்டியைப் பற்றிய விஷயங்கள் அருமை!..அழகு!..
இதுவரையிலும் படித்தறியாத தகவல்கள்..
ReplyDeleteசூரிய சஷ்டியைப் பற்றிய விஷயங்கள் அருமை!..அழகு!..
அழகான படங்கள்......
ReplyDeletesurya pooja is new information
ReplyDeleteசூரிய பூஜை கண்டு களித்தேன்.
ReplyDeleteநன்றி.
Sorry for this out of context quarry but do you know where that gold-foil Surya Narayana Poster (in the center of 3rd from the last image) could be bought from online?I am a devoted hindu from Sri Lanka where it isnt available in any from. Thank alot for your understanding.
ReplyDeleteregards,
Dr. Rajitha SiriwardenaMullaithivu, Sri Lanka
rajiruleon@gmail.com
Sorry for this out of context quarry but do you know where that gold-foil Surya Narayana Poster (in the center of 3rd from the last image) could be bought from online?I am a devoted hindu from Sri Lanka where it isnt available in any from. Thank alot for your understanding.
ReplyDeleteregards,
Dr. Rajitha SiriwardenaMullaithivu, Sri Lanka
rajiruleon@gmail.com