Tuesday, November 19, 2013

வளமான வாழ்வருளும் சங்காபிஷேகம் !





திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்  1008 சங்குகள் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்து சங்குகளில் இருந்த புனித நீர் மூலவர் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது சிறப்பு பெற்றது 
கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.

சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் 

கார்த்திகை மாதத்தில் வரும்  சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில்,சந்திர அம்சமான சங்குகளுக்குபூஜை செய்து,சங்கு தீர்த்தம் கொண்டுசிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது,சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல,நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்

ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் 
அதிபதியாக விளங்குபவர். சந்திரன் 

 சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களின் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதால் சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்பது ஐதீகம்..!

கோலங்களிட்டு  வாழை இலை பரப்பி  பச்சரிசி பரப்பி இறைவனை ஆவாஹனம் செய்வதற்குரிய ஒரு கலசமும், இறைவியை உருவேற்றுவதற்குரிய ஒரு கலசமும், 108 அல்லது 1008 வெண் சங்குகள் அலங்காரம் செய்யப்படும். 

 பெரிய வலம்புரி சங்கில் இறைவனை ஆவாஹனம் செய்கின்றனர். 

அவற்றுள் நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட நன்னீர் நிரப்பப் பெற்று, மலர், தருப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு சங்கங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்படுகின்றன. 

 ஹோமத்துடன் தேவ பூஜா மந்திரங்களினால் பிரதான வலம்புரி சங்கில் இறைவன் மற்றும் இறைவியின் அருள் உருவேற்றப்படுகின்றது. 

.சிவபிரானது சகஸ்ரநாமாவளியிலுள்ளபெயர்களுக்குரிய வடிவங்கள் உருவேற்றப்பட்டுபூஜைகள் செய்வித்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது கண்கொள்ளா புனித காட்சிகளாகும் ..!

[sangu7.JPG][sangu6.JPG]

20 comments:

  1. சங்குகள் வரிசை வரிசையாய்
    காண கண் கோடி வேண்டும்
    சகோதரியாரே நன்றி

    ReplyDelete
  2. காலையில் இனிய தரிசனம். மகிழ்ச்சி!..

    ReplyDelete
  3. அற்புதமான படங்களுடன் அருமையான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. thanks for sharing info about sangu abhisegam with great pictures

    ReplyDelete
  5. குளிர்ச்சியான சங்காபிஷேக படங்கள் அனைவரின்
    கண்களுக்கும் குளிர்ச்சி.

    ReplyDelete
  6. வளமான வாழ்வருளும் சங்காபிஷேகம் ... என்ற தலைப்பே அருமை.

    >>>>>

    ReplyDelete
  7. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    மேலிருந்து மூன்றாவதும், கீழிருந்து நான்காவதும் ரொம்ப நன்னா ஜோராயிருக்கு.

    >>>>>

    ReplyDelete
  8. கார்த்திகை ஸோமவார விஷேசங்கள் நன்கு அறியப்பெற்றோம்.

    >>>>>

    ReplyDelete
  9. சந்திரனின் அம்சமே சங்குகள், திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள், அன்று குளிர்ந்த நீரினை சங்குகளில் நிரப்பி அபிஷேகக் செய்வதால் ஸ்வாமி குளிர்ந்துபோய் நம்மையும் குளிர வைக்கிறார்...... விளக்கங்கள் அருமையே.

    >>>>>

    ReplyDelete
  10. வலம்புரிச்சங்கினில் இறைவனை ஆவாஹனம் செய்து மந்திர கோஷத்துடன் நடைபெறும் சங்காபிஷேகம் காண்பது மிகவும் நல்லது என தெரிந்து கொண்டோம்.

    -o [ 5 ] o-

    ReplyDelete
  11. கீழிருந்து நாலாவதாக இப்போது ஓர் சிவன் படம் [சங்குகள் + மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது] புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

    அதுவும் ரொம்ப நன்னாவே இருக்கு. நான் ஏற்கனவே சொன்னது அதற்கு மேல் உள்ள படமாகும்.

    ReplyDelete
  12. கார்த்திகை சோமாவார சிறப்பினை அழகாக படங்களுடன் விளக்கி விட்டீர்கள். நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  13. சங்கும் மலர்களும் அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
  14. Very informative and interesting post, reading your post makes me happy. Beautiful pictures. Thanks for sharing, waiting for more...

    ReplyDelete
  15. Madam, I just have one obligation, I have a doubt what is chandraashtamam, and why do they say on that particular day of your star we have to be careful. If you have time and if you can share that info it will be nice.

    ReplyDelete
  16. படங்கள் தகவல்கள் எல்லாம் அருமை!

    ReplyDelete
  17. வணக்கம் அம்மா..
    அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள். நிச்சயம் நெஞ்சில் குடியமர்ந்து கொண்டது. பகிர்வுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  18. சங்காபிஷேகம் பற்றிய செய்தியும் படங்களும் அருமை அம்மா.

    ReplyDelete
  19. 1008 சங்குகள் வைத்து எம் பெருமானைத் தருசிப்பதால்க் கிட்டும்
    மகிழ்ச்சியானது இங்கே அனைவருக்கும் கிட்டிட வேண்டும் .
    வாழ்த்துக்கள் தோழி எப்போதும் போல கண் முன் நிறுத்திய
    அரிய காட்சிப் பகிர்வுக்கு .

    ReplyDelete
  20. சங்காபிஷேகம் குறித்த விவரங்கள் படித்து பரவசமானேன்.....

    ReplyDelete