Thursday, November 7, 2013

சூரசம்ஹாரம்


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா!

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
ஐப்பசி மதத்தில் வளர்பிறை சஷ்டி அன்று முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள். கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும்.
மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.

தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அஸ்திவாரமாக  கந்தசஷ்டி  விரதம் அமைகிறது.

கொடுங்கோலாட்சி செலுத்திய
ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும்,
கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும்,
மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும்,
அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான கந்தப்பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் மேற்கொள்ளப்படுகின்றது.

 ஆறாவது திதியாக வரும் சஷ்டி திதி ஆறுமுகக் கடவுளைப்
போற்றித் தொழ மிகவும் ஏற்றது.

ஆறு என்ற எண்ணுடன் முருகபெருமான்   தொடர்பு கொண்டவர்..!

ஆறு நெருப்புப் பொறிகள், சரவணப் பொய்கையில்
ஆறு தாமரை மலர்களில், 
ஆறு குழந்தைகளாக அவதரிக்க, 
ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். 
ஆறு குழந்தைகளையும், உமாதேவியார் ஒன்று சேர்க்க, ஸ்கந்தப் பெருமான், ஆறுமுகமும், பன்னிருகரமும் கொண்டு அன்பர் மகிழும் உருக்கொண்டார்.
அறுகோண யந்திரம், ஷடாக்ஷர மந்திரம் கொண்டு,  ஞானமார்க்கத்தில்' ஆற்றுப்' படுத்தி, அருள் புரியும் வள்ளல் பெருமான் 
மாயையே சூரன், அதை நீக்கி ஞான வழிகாட்டும் முருகன்.
இம்மைப் பயன்களோடு, பிறவிப்பயனான ஆத்மஞானம்
அடைவிக்கும் முருகனடி போற்றி,வழிபடுவோம் ..!
சூரனை வெல்ல, உமாதேவியார்  முருகப்பெருமானுக்கு சக்திவேல். வழ்ங்கினார்  சிக்கல் திருத்தலத்தில், வேல்நெடுங்கண்ணி அம்மையிடம் இருந்து, சிங்காரவேலர் வேல்வாங்கும் வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சூரனை அழிப்பதற்காக,அன்னையிடம் இருந்து வேல் வாங்கிய முருகனின் திருமுகத்தில், அதன் வீர்யம் தாங்காமல், முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம்.
பட்டுத்துணி வாங்கி வந்து கொடுத்து, அதில், முருகனின் வியர்வையை ஒற்றியெடுக்கச் செய்து அதை இல்லத்தில் வைத்து வழிபடுவது சிறப்பு..!
[027103.jpg]
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வதை சாயாபிஷேகம் என்பர்.

 "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். 

இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்


19 comments:

  1. விடியற்காலைப்பொழுதில் - வெற்றி வடிவேலவனின் அழகிய தரிசனம்..

    ReplyDelete
  2. நல்ல படங்கள் மற்றும் செய்திகள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஓம் சரவண பவா !
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
    பல புதிய செய்திகளுக்கு நன்றிகள் !

    ReplyDelete
  4. இன்று மதியமே ஒளிபரப்பு இருக்கிறது சங்கரா தொலைக்காட்சியில். பார்க்கப் பார்க்க அலுக்காத சூரசம்ஹரக் காட்சிகள். முருகனின் அருள் வடிவம் சூரனை அழிக்காமல் அவன் அஞ்ஞானத்தை வென்று அருள் செய்த அழகன்.அன்பன்.மருதமலையானுக்குக் கோடி நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  5. சூரசம்ஹாரம் என்ற இந்தப்பதிவில் தாங்கள் காட்டியுள்ள முதல் மூன்று படங்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    >>>>>

    ReplyDelete
  6. முதல் இரண்டு படங்களுக்கு இடையே கொடுத்துள்ள மூன்று பாடல்களும் ஜோர் ஜோர் .....

    கோடிப்பதிவுகளிலே தேடிக்கொடுக்கும் பதிவு எந்த பதிவு?

    கொங்கு[ஜக]மணி நாட்டினிலே மனம் குளிர வைக்கும் பதிவு எந்தப்பதிவு?

    [வலையைத்] தேடிவந்தோர் மனமெல்லாம் குளிர்விக்கும் [ஆயிரம் நிலவேயானப்] பதிவு எந்தப்பதிவு?

    படாடோபப் பயங்கரப் பதிவரெல்லாம் தேடிவரும் மருதமலைக்கருகே உள்ள ’மணிராஜ்’ பதிவு மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
  7. மணமிகு சந்தனம் ......
    அழகிய குங்குமம் ......
    அம்பாள் உங்களது அன்றாட
    அற்புதப்பதிவுகளே !

    >>>>>

    ReplyDelete
  8. ’ஆறு’ பற்றிக்கூறியுள்ள வரலாறு [வரல் + ஆறு] ஆற்று வெள்ளம்போல அழகாக, அமைதியாக, அற்புதமாக, அதிசயமாக, அதிரஸமாக ருசியாக அமைந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. சாயா அபிஷேகம் ......

    தினமும் பொழுது விடிந்தால் தங்கமாக ...
    கொங்கு நாட்டுக் கோவைத்தங்கமாக .......
    மனதில் தங்கக்கூடிய தங்கமான பதிவுகள்
    தந்திடும் தங்களுக்குக் கனகாபிஷேகம்தான்
    செய்ய வேண்டும். ;)

    வாழ்க ! பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  10. சாயா அபிஷேகம் ...... தினமும் பொழுது விடிந்தால் தங்கமாக ... கொங்கு நாட்டுக் கோவைத்தங்கமாக ... மனதில் தங்கக்கூடிய தங்கமான பதிவுகள் தந்திடும் தங்களுக்குக் கனகாபிஷேகம் தான் செய்ய வேண்டும். ;)

    வாழ்க ! பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  11. படங்களும் பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. கந்தபுராணம் படித்த மகிழ்ச்சி.
    உங்கள் பதிவும், செய்திகளும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சூரசம்ஹார தகவல்களும் குமரனின் அழகிய படங்களும் மிக அருமை! நன்றி!

    ReplyDelete
  14. சம்ஹாரம் நேரில் பார்த்த திருப்தியை தரும் தங்கள் விளக்கமும் படங்களும். நன்றிங்க.

    ReplyDelete
  15. சூரன் போர்ப் படங்கள் சூப்பர். ஊரை நினைக்க வைக்குது.

    ReplyDelete
  16. விடியற்காலை பொழுதினில் முருக தரிசணம் அருமை. நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  17. சஷ்டிநாளில் கந்தன் புகழ்பாடி வணங்குவோம்.

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  18. பதிவுடன் படம் சிறப்பு
    பல தகவல்களிற்கு நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete