Sunday, November 10, 2013

வண்ண மலர்'கள்..!


ஹெலிகோனியா கொய்மலர் "கிளிமலர்', கிளி வாழை, 
பொய் வாழை என்று அழைக்கப்படுகிறது. 
கிளிமலர்' கொய்மலராகவும், மேடை அலங்காரம், கல்யாண வரவேற்பு ஆகியவற்றில் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது.
காற்றில் ஈரப்பதம் உள்ள இடங்களில் செழித்து வளரும். 
கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரம் வரை உள்ள 
பகுதிகளிலும் வெப்பமண்டல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.
திறந்தவெளியில் அதிக வெளிச்சம், நீர்ப்பாசன வசதி 
கொண்ட இடங்களில் நன்கு வளரும்.
ஹெலிகோனியாவில் சில ரகங்களின் பூக்கள் கொத்தாகவும், 
ஒரு சில ரகங்களின் மலர்கள் தலைகீழாகவும் 
மலரும் தன்மை உடையவை.
கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது.
 "வௌவால்கள்'' மலரின் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. 
பொதுவாக ஹெலிகோனியா 8 மாதங்களில் அதாவது ஜனவரி மாதத்தில் நடவு செய்தால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள காலங்களில் மலரும். 
அதற்கடுத்த வருடத்திலிருந்து ஏப்ரலிலிருந்து தொடங்கி 
டிசம்பர் வரை தொடரும். 
மொட்டு உருவானதிலிருந்து 15ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். முதல் வருடம் விளைச்சல் குறைவாகக் காணப்படும். 

அறுவடை செய்யும்போது பூத்தண்டின் நீளம் 70 செ.மீ. முதல் 1 மீ. 
வரை இருக்க வேண்டும்.

20 comments:

  1. கண்னைணக் கவரும் வண்ண மலர்கள் அருமை சகோதரியாரே. நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    மலர்கள் பற்றிய விளக்கம் அருமை படங்களும் அருமை
    வாழ்த்துக்கள் அம்மா

    வாருங்கள் அன்புடன்...புதிய பதிவாக என்னுடைய வலைப்பக்கம்
    உயிரில் பிரிந்த ஓவியமாய்(கவிதையாக)
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. Aha!!!!!!
    Alagu malarakal.
    Cute kili.
    rounding kili.
    You made my day enthu.
    Thanks dear.
    viji

    ReplyDelete
  4. முதலில் ரெளண்ட் அடிக்கும் கிளி அழகோ அழகாக உள்ளது.

    ஆனால் கிளிப்பிரியனான என்னால் அதை இப்போது பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லையே என்பதில் மிகவும் வருத்தமே.

    புதுக்கம்ப்யூட்டர் வாங்கியபிறகு என்னால், வேறொரு முறையில் போய் முன்பு போலெல்லாம் COPY & PASTE செய்து SAVE செய்துகொள்ள முடிவதில்லை. ;(

    அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள்ன.

    அந்த வேறொரு முறைக்குச்சென்றாலே, வைரஸ் பிரச்சனைகள் உள்ளன. இதை முயற்சிக்காதே என எச்சரிக்கை மணி அடிப்பதாலும், புது கம்ப்யூட்டராக இருப்பதாலும், நானும் கடந்த 2 மாதங்களாக அதுபோல எதுவும் செய்ய முயற்சிப்பது இல்லை. அநாவஸ்யமான RISK எடுக்க விரும்புவது இல்லை.

    >>>>>

    ReplyDelete

  5. கிளிமலர் சரம் அழகோ அழகாக உள்ளது.

    வாழைத்தார் போல தொங்கிக்கொண்டு, ஜோராகவும் கலர் கலராகவும் சூப்பராகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம்,

    வெளவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை

    என கிளிபோலப் பறந்து போய் தகவல்களைத் திரட்டிக் கொடுத்துள்ளது பாராட்டப்பட வேண்டியவைகள் தான்.

    >>>>>

    ReplyDelete
  7. இடது உள்ளங்கையில் உள்ள தேனைப்பருகும் தேன்சிட்டு படத்தைப் பார்க்கவே எனக்குப் பொறாமையாக உள்ளது.

    தங்களின் படச்சேகரிப்பை நினைத்து பெருமூச்சு விடுகிறேன்.

    அதேபோல கிளியொன்று தன் கால் விரல்களால் ஒருவரின் கை விரலை அன்புடன் வருடிக்கொடுக்கும் படமும் படா ஜோராகவே உள்ளது.

    மீண்டும் பெருமூச்சு விடுகிறேன்.

    >>>>>

    ReplyDelete
  8. IN FACT இன்று பின்னூட்டம் ஏதும் கொடுக்க மனமே இல்லாத என்னை, மீண்டும் பின்னூட்டமிட தூண்டி விட்டது, இந்தத் தங்களின் இன்றைய பதிவு என்று சொன்னால் அது மிகையாகாது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் கொடுக்கக்கூடாது என்கிற
      சங்கல்பத்தைப் பங்கப்படுத்திய கிளிகளுக்குப் பாராட்டுக்கள்...

      //?????
      Totally I have given 7 Comments - Today.

      2 More comments will be there.

      Please check-up in Spam or somewhere else.//

      தேடிப்பார்த்தேன் ஆறுதான் கிடைத்தது ..!!

      Delete
    2. இராஜராஜேஸ்வரி has left a new comment on the post "வண்ண மலர்'கள்..!":

      //பின்னூட்டம் கொடுக்கக்கூடாது என்கிற சங்கல்பத்தைப் பங்கப்படுத்திய கிளிகளுக்குப் பாராட்டுக்கள்...//

      !!!!!! ;) கடைசியில் எல்லாமே பிரஸவ வைராக்யம் போலத்தான் ஆகிவிடுகிறது.

      என் மனஸு குழந்தை போல கிளிகளைக்கண்டதும் ஒரே குஷியாகி விட்டது போல.

      என்ன செய்வது? அதுவே என் பலமும் பலகீனமும் ஆகும்.

      //தேடிப்பார்த்தேன் ஆறுதான் கிடைத்தது ..!!//

      ஆறாவது கிடைத்ததே ... ஆறுதலாக உள்ளது.

      இதோ இங்கே கீழே கொடுத்துள்ளேன். அதுவே அன்று நான் முதன்முதலாகக்கொடுத்த பின்னூட்டம்.

      -=-=-=-
      ”வண்ண மலர்கள்” என்ற தங்களின் இன்றையப்பதிவினை வெகு நேரம் பார்த்துப்பார்த்து மகிழ்ந்து பூரித்துப்போனேன்.

      >>>>>
      -=-=-=-=-

      இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. வெளியிடத்தான் வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை.

      Delete
  9. வ ண் ண ம ல ர் ’க ள்

    என தலைப்பினிலேயே ‘கள்’ போன்ற போதையை ஏற்றியுள்ள தங்’கள்’க்கு என் பாராட்டுக்கள்,

    வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  10. படங்கள் மிகவும் அழகு! பதிவும் அழகோ அழகு!

    ReplyDelete
  11. அத்தனையும் மிக அழகு! அத்தனை வண்ணங்களும் அழகோ அழகு!

    ReplyDelete
  12. கிளி கொஞ்சும் எனப்படுவது இது தானா?!!

    ReplyDelete
  13. அழகிய பதிவு.
    மலரென்றால் மயங்காதார் உண்டோ!
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. அருமையான வண்ணமலர் பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வணக்கம் அம்மா..
    அழகான மலர்களைப் படங்களாய் காணத் தந்தமைக்கு நன்றி. அத்தனையும் மனதை கவ்விப் பிடிக்கிறது. மலர்கள் மனதை இதமாக்குகிறது.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  16. படங்கள் அழகு...
    வண்ணமயமாய் பகிர்வு.

    ReplyDelete
  17. படங்கள் ஒவ்வொன்றும் பிரமாதமாக இருக்கின்றதே !! வாழ்த்துக்கள்
    தோழி அருமையான படங்களுடன் கூடிய தங்கள் பகிர்வுகள் இன்று
    போல் என்றுமே துலங்கிட .....

    ReplyDelete
  18. வண்ணமயமான மலர்கள். பார்க்கவே அழகு. நன்றி.

    ReplyDelete