Thursday, November 21, 2013

ஆனே குட்டா ஆனை முகன்

-வது பதிவு..

ஆயிரத்து நூறாவது பதிவு..


ஆனைமுகன்  துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

வஞ்சகத்தில் ஒன்றானை துதிக்கைமிகத் திரண்டானை .. வணங்கா ருள்ளே
அஞ்சரண மூன்றானை மறைசொலுநால் வாயானை .. அத்த னாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானைச் சென்னியணி ஆறானைத் .. துகளெ ழானைச்
செஞ்சொன்மறைக் கெட்டானைப் பரங்கிரிவாழ் கற்பகத்தை சிந்தை செய்வாம்

ஆனே குட்டா  ஆனை முகன் வரம் தரும் வரஹஸ்தம், சரணடைந்தோரைக் காக்கும் அபய ஹஸ்தம் என நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தினமும் வெள்ளிக்கவசம் சாத்தப்படும். இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கையுள்ளது. 

கோயில் வாசலில் சிவ பார்வதி கைலாயக்காட்சியை தரிசிக்கலாம்.

பிரார்த்தனை நிறைவேறினால், பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.

தமிழக விநாயகர் அமைப்பில் இல்லாமல், யானை போல் சிலையமைப்பு உள்ளது. இதை சுயம்பு விநாயகர் என்றும் சொல்கின்றனர். 

திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது. 
 விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், 
சர்வ சித்தி பிரதாய்கா என்கின்றனர். 

வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் சன்னதியில் உலக நன்மைக்காக மகா ரெங்க பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். 

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்கள் தினமும் தீப வழிபாடு நடக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று நடக்கும் துலா பாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீராத நோய் உள்ளவர்கள், குடி மற்றும் இதர கெட்ட வழக்கங்களைக் கொண்டவர்களைத் திருத்தும் தீபக்கணபதியாக இவர் உள்ளார்.

மூலவர் அபிஷேகத்துக்கு, கோயில் அருகிலுள்ள மலை உச்சியிலுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம், வியாபாரத்தில் லாபம் கிடைக்க கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. 

பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும்,  பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
Pretty birds like dancing to The Rodeo Song and the orchestra playing the 2nd Movement of  Beethoven's 9th Symphony
அரபிக்கடல் ஓரத்திலுள்ள மங்களூரு ஒரு காலத்தில் காட்டுப் பகுதியாக இருந்தது. இங்கு வறட்சி நிலவியது. 
பசியில் வாடிய முனிவர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்த மக்களும் அகத்திய முனிவரிடம் சென்று, வறட்சியிலிருந்து தங்களை காப்பாற்ற கோரினர். 

அவர் வருண பகவானின் அருள் வேண்டி தவமிருந்தார். அப்போது கும்பாசுரன் என்ற அரக்கன், அவரை தவமிருக்க விடாமல் தொந்தரவு செய்தான். 

அவனைத் தண்டிக்குமாறு, அகத்தியர் விநாயகரிடம் வேண்டினார். 

கும்பாசுரனை அழிக்கும் சக்தி, அவனுக்கு சமபலமுள்ளவனும், பாண்டவர்களில் ஒருவனுமான பீமசேனனுக்கே இருந்தது. 

விநாயகர் யானை வடிவெடுத்து தும்பிக்கையில் ஒரு ஆயுதத்தை எடுத்துச் சென்றார். 
யானை ஒன்று ஆயுதத்துடன் வருவதைக் கண்ட பீமன், அதை கைப்பற்றும் நோக்கத்தில் செல்ல, அது கீழே போட்டு விட்டு ஓடியது. 

அந்த ஆயுதத்தால் கும்பாசுரன் வீழ்த்தப் பட்டான். 

விநாயகரின் ஆயுதத்தால் உயிர் பிரியும் நிலை ஏற்பட்டதால், அவனுக்கு ஞானம் ஏற்பட்டது. 

தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து திருந்தினான். 

மழையும் பொழிந்து மீண்டும் செழிப்பானது. 

மகிழ்ந்த முனிவர்கள் தங்கள் குறைதீர்த்த இடத்தில் எழுந்தருள வேண்டுமென விநாயகரை வேண்டினர். 

கும்பாசுரன் கடைசி நேரத்தில் மனம் திருந்தியதால், அந்த இடத்திற்கு அவனது பெயரால் கும்பாசி என்ற பெயர் ஏற்பட்டது. 

கும்பாசியிலுள்ள ஆனேகுட்டே பகுதியில் கோயில் இருக்கிறது. 

ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. 

யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே 
ஆனேகுட்டே என்றானது.











30 comments:

  1. Congrats madam on 1100 th post, wish you reach many many more mile stones.
    Such a beautiful Vinayagar, totally new to me very very interesting story about the vinayagar and the temple. Awesome and stunning clicks of Vinayagar. Thanks a lot for sharing.... waiting for your next post...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      ஊக்கமளிக்கும் அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

      இறைவன் நாடினால் தினம் தவறாமல் எமது பதிவுகள் பதிவாகும் ..!

      Delete
  2. அந்த
    தந்த
    தங்க பிள்ளையார்
    எங்கள் மனதில்
    தங்கவே வந்திருக்கும்
    பிள்ளையார்.

    வினயாகனே வினை தீர்ப்பவனே

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      மனதில் தங்கி நிறையும் அருமையான கருத்துரைகளுக்கும் , சிறப்புடன் பாடிப்பகிர்ந்தளித்த காணொளிப் பகிர்வுகளுக்கும் நிறைந்த நன்றிகள் ஐயா..!

      Delete
  3. 1100வது பதிவு !!!!!! ;)

    1100வது சந்தோஷம் மட்டுமல்ல.

    1100 முறைகள் ஒவ்வொன்றையும் மனதில் திரும்பத்திரும்ப நினைவுபடுத்தி மகிழ்வித்தது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      மகிழ்விக்கும் இனிய கருத்துரைகளுக்கு அன்பு நன்றிகள்..

      Delete
  4. இன்னும் 11 நாட்களில் எண்ணிக்கை 1111 ஆகுமோ !!!!!!

    வரும் டிஸம்பர் மாதம் 11ம் தேதியில் ஒரு விசேஷம் + விசித்திரம் உள்ளது.

    11....12....13

    இதுபோன்றதோர் அழகான தேதியை மீண்டும் யாருமே பார்க்க இயலாது தானே !

    மீண்டும் மீண்டும் மனிதப்பிறவி எடுத்துப் பிறந்தால் ஒரு வேளை பார்க்கலாம்.

    அப்போதும் பதிவர்களாக இருந்தால் மட்டுமே இதை பகிர்ந்து கொள்ளலாம்.

    >>>>>

    ReplyDelete
  5. ஆரம்பத்தில் ஆனைமுகன் துதியும், வழக்கம்போல் அனைத்துப் படங்களும் நல்லா இருக்குதுங்க.

    >>>>>

    ReplyDelete
  6. ஆனே குட்டா பற்றியும், பக்ஷி சங்கர பூஜை பற்றியும், கும்பாசி பெயர் காரணமும் அறிய முடிந்ததில் சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  7. மொத்தத்தில் கிளி கொஞ்சும் பதிவாகவே அமைந்து விட்டது, ஆயிரத்து நூறாவது ....... நிலவும் !

    -o [ 5 ] o-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      சந்தோஷமான கருத்துரைகளுக்கும் ,இனிய வாழ்த்துரைகளுக்கும் இதயம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  8. ஆனைமுகனின் அரும் புகழைக் கூறும் ஆயிரத்து நூறாவது பதிவு!.. அழகிய படங்களுடன் ஐங்கரனின் வரலாறு!.. மேலும் மேலும் நல்ல பதிவுகள் வெளியிட நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      அழகிய கருத்துரைகளுக்கும் ,
      நல்வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  9. அசத்தும் படங்கள்... 1100 பதிவு... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      அசத்தலான கருத்துரைக்கும் ,
      வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  10. ஆனைமுகன் துதி... மிக நல்ல பாடல்.
    1100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்....

      நல்ல கருத்துரைக்கும் வாழ்த்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      Delete
  11. Meenakshi Suryanarayanan
    Shared publicly9:14 AM

    Ms.Rajarajeswari in her blog www.jaghamani.blogspot.com has posted two DIVINE HYMNS in praise of LORD VINAYAKA on the occasion of SANKATAHARA CHATHURTHI which falls today.
    THIS IS HER 1100TH POSTING .
    SUBBU THATHA PRAYS TO LORD VINAYAKA TO BLESS HER AND FAMILY ALL THAT THE FAMILY RICHLY DESERVES FOR HER IMMENSE CONTRIBUTION TO THE SPIRITUAL WORLD.
    IT IS TRUE THAT RAINS DO SHOWER AND MAKE THE GROUND FERTILE ONLY BECAUSE OF PEOPLE AS GOOD NATURED AS Mrs.Rajarajewari.
    Thank U so much Madam.
    The hymns are sung in Raagas Thodi and Anandha Bhairavi.
    For the text of the hymns, please move on to
    www.jaghamani.blogspot.com

    தங்களின் அருமையான ஆசியுரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா...

    எனக்குத்தான் தாங்கள் பகிர்ந்த அருமையான காணொளிப்பதிவை பதிவில் இணைக்கத்தெரியவில்லை..

    ReplyDelete
  12. 1100 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
    அழகான விநாயகர் படங்களுடன், அருமையான பதிவு. நன்றிகள்.

    ReplyDelete
  13. போற்ற வேண்டிய சாதனை... தினந்தவறாமல், அற்புதமான படங்களுடன் அருமையான பகிர்வுகளை அளித்து வருகிறீர்கள்..எங்களைப் போன்ற சக பதிவர்களையும் அருமையான கருத்துரைகளின் மூலம் ஊக்கமூட்டி வருகிறீர்கள்.. வணங்குகிறேன் உங்களை!!! ... இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகள் கண்டு சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. ஆனைமுக(ன்) இன்னருளால் ஆயிரத்து நூறெனத்
    தேனை நிகர்த்த சிறப்பு!

    அற்புதம் அனைத்தும்!
    மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  15. 1100 வது பதிவு .. மிக பெரிய விஷயம்தான்! சாதனை தொடரட்டும்.. வாழ்த்துக்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  16. வணக்கம்
    அம்மா
    1100 வது பதிவை பார்த்தபோது..மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. தொடர்ந்து சிறப்பாக பயணிக்க எனது வாழ்த்துக்கள் அம்மா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. 1100-வது பதிவுக்கு வாழ்த்துகள்.ஆனெ குட்டா விநாயகனை தரிசித்திருக்கிறோம். மங்களூரில் இருந்து புனே போகும் வழியில் இன்னொரு விநாயகர் கோவிலும் இருக்கிறது. இடுகுஞ்சி விநாயகர். பதிவைப் பார்க்கும்போது அந்த இடங்களுக்கு எல்லாம் போய் வந்த நினைவுகள் வருகின்றன. வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  18. நான் மங்களூரில் ஏழு வருடம் இருந்தவன். ஆனேகுட்டா விநாயகனைப் பலமுறை தரிசித்திருக்கிறேன். தங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெழுப்பியது. நன்றி! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  19. ஆயிரத்து நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  20. வணக்கம் அம்மா..
    ஆயிரத்து நூறாவது பதிவு அப்படியே அசந்து தங்களைப் பார்த்து வார்த்தையற்று நிற்கிறேன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். அற்புதமான பகிர்வு ஆனை முகத்தானையையும், பட்சி சங்கர பூஜை பற்றிய செய்தியும் பகிர்ந்து சென்ற விதம் அருமை அம்மா. அனைத்து படங்களும் கண்களிலிருந்து இறங்க மறுக்கிறது. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  21. வாழ்த்துகள். மேலும் சிறப்புறட்டும் பகிர்வுகள்.

    ஆனே குட்டா அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.

    ReplyDelete
  22. ஆனே குட்டா ஆனை முகன் தரிசனம் கிட்டியது.....

    ஆயிரத்து நூறு பதிவுகள் - மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    ReplyDelete