Sunday, November 3, 2013

தீபாவளி - ஸ்ரீ லஷ்மி குபேர பூஜை











ஹே மாதா! கங்கா தேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதையாக உடையவளாகவும் இருக்கிறாய். 

பிறப்பு முதல் மரணம் வரை உள்ள பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். 

தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம் ஆகிய எல்லாவற்றிலுமாக மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக வாயு பகவான் கூறியுள்ளார். 

அவை எல்லாம் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருள வேண்டும்' என பிரார்த்தித்து நீராடிய பிறகு, புத்தாடைகள், ஆபரணங்கள் அணிவது சிறப்பு..

பொதுவாக சதுர்த்தசியில் எண்ணெய் நீராடுவது கூடாது
 என்பது தீபாவளிக்குப் பொருந்தாது. 

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் அமாவாசைக்கு முதல் தினம் விடியற்காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் நீராடுவது கட்டாயமாகச் செய்ய வேண்டிய கடமை  

"யஸ்யாம் ஹதச் சதுர்தச்யாம் நரகோ விஷ்ணுநா நிசி
தஸ்யாமப் யஞ்ஜனம் கார்யம் நரைர் நரக் பீருபி:'

நரக சதுர்த்தசியன்று உஷத் காலத்தில் சூரியன், சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் மிகவும் புனிதமான தினம் ; இந்த நன்னாளில் எண்ணெய் நீராடல், லக்ஷ்மி பூஜை, புத்தாடை உடுத்தல் முதலிய சுபகாரியங்களை அவசியம் செய்யும் படியும் விதிக்கப்பட்டுள்ளது. 

"ஸ்வாதி ஸ்திதே ரவாவிந்துர் யதிஸ்துôதி கதோ பவேத்

வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று குடும்பத்தின் பெரியோர்கள் ஆசி கூறும் நன்னாளாக தீபாவளி திகழ்கிறது.

விருந்துகளும், இனிப்புகளும், பரிமாறப்பட்டு மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்லும் நன்னாள் இது.

  வாழ்க்கையின் அக மதிப்புகளை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக வாழ்வின் பல்வேறு தேவைகளைக் கருதி, அவற்றுக்குரிய தெய்வங்களை வணங்குவதை  வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

 வளத்தையும், நலத்தையும் பெருக்கும் திருமகளாக லட்சுமி தேவி திகழ்கிறாள்.

 தீபாவளி அன்று குடும்பத்தின் செழிப்பைப் பெருக்குவதற்காக லட்சுமி பூஜை செய்து பக்திப் பரவசம் அடைகிறார்கள்.

நன்னாளைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் தங்க நாணயங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

இதன் மூலம் குடும்பத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்கு லட்சுமியை வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பதற்கு  வாய்ப்புத் திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

  அமாவாசை அன்று லட்சுமி பூஜை கடைபிடிக்கப்படுகிறது.

தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கிறார்கள்.

 நன்மையையும், வளத்தையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய  லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

வீட்டின் முற்றங்கள், தாழ்வாரங்களிலெல்லாம் அழகான கோலங்கள் ரங்கோலிகள்  இடப்பட்டு பொலிவூட்டப்படுகின்றன.

லட்சுமி தேவி வரும் வழியெல்லாம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் வீட்டைச் சுற்றி விளக்குகளை வரிசை வரிசையாக அடுக்கி வைத்து மகிழ்கிறார்கள்.

முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபட்டு லட்சுமி பூஜை தொடங்குகிறது.

 விநாயகரின் அளப்பரிய சக்தியால் எல்லாத் தடைகளையும் மக்களகர சதுர்த்தி நாயகனாகிய விநாயகப் பெருமான் உடைத்தெறிந்து தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டும் அருளையெல்லாம் வழங்குவார்.

எடுத்த காரியங்கள் எல்லாம் இனிதே நிறைவேற்றிக் கொடுக்கும் தெய்வமாக விநாயகர் அமைவதால், விநாயகர் வழிபாடு முதலிடம் பெறுகிறது.

   ஒரு புத்தம் புதிய பட்டுத் துணியை மரத்தினாலான மேடையில் விரித்து அதில் கொஞ்சம் நெல் மணிகளைப் பரப்பி, அதன் மேல் கலசம் வைக்கப்படுகிறது.

 புனிதக் கலசம் வழக்கமாக வெள்ளியினால் ஆனதாக இருக்கும்.

அதன் மீது குங்குமம், மஞ்சள், பொட்டு இட்டு பூக்களால் அலங்கரிக்கப்படும்.

 கலசத்தின் உள்ளே முக்கால் பங்கு மஞ்சள் நீரால் நிரப்பப்பட்டிருக்கும்.

தங்க நாணயங்களையும் நெல் மணி அல்லது அரிசியைப் போட்டு வைப்பார்கள்.

 மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு அந்தக் கலசத்தின் வெளிப்புறத்தில் நூலால் வலை போன்று அழகுறச் சுற்றி அலங்கரிப்பார்கள்.

    கலசமாகிய அந்தச் சொம்பின் வாய்ப் பகுதியில் தேங்காயும், அதைச் சுற்றி மாவிலைகள் செருகப்படும். இந்தக் கலசம் வளத்தையும், புனிதத்தையும் குறிக்கிறது.

லட்சுமி தேவியின் சிலை  மஞ்சள் நீர், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.

  பூக்கள், பழங்கள், பூஜைப் பொருள்கள், தங்க நாணயங்கள், வீட்டில் காலம் காலமாக சேமிக்கப்பட்டிருக்கும் தங்கக் காசுகள் ஆகியவற்றுடன் வியாபாரக் கணக்குகளுக்கான குறிப்பேடுகள், புத்தகங்கள் போன்றவற்றையும் அதன் எதிரில் அழகாக அடுக்கி வைத்து வழிபாடு செய்வார்கள்.

குத்துவிளக்கு ஏற்றப்படும். லட்சுமி பூஜைக்கென்று உள்ள சிறப்பு மந்திரங்களை ஓதி லட்சுமி தேவியை மகிழ்வித்து,  நிறைந்த செல்வமும், வணிகத்தில் லாபமும் முழுமையாகக் கிடைப்பதற்கு லட்சுமி தேவியின் அருளை வேண்டி வழிபாடு செய்வார்கள்.

  சுவாமிக்குப் படைத்த இனிப்புகள், பிரசாதங்கள் ஆகியவற்றை அனைவருக்கும் வழங்கி மகிழ்வார்கள்.

நிறைந்த மன திருப்தியோடு தங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், மனநிறைவோடும் அவரவர் தங்களுடைய பணிகளுக்குத் திரும்புவார்கள்.


நிறைவாக லட்சுமி பூஜை என்பது நிறைந்த வளமும், பொங்கும் மகிழ்ச்சியும், தங்கும் நிகழ்வாக  ஊன்றி நிலைத்துவிட்டது.

வாழ்க்கையில் வறுமையாகிய இருளை விரட்டி, செழிப்பாகிய ஒளியைக் கொண்டு வருவதால்  எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகிறது.







21 comments:

  1. உங்கள் படைப்பைப் பார்க்கும்போதே "வந்தாள் மகாலக்ஷ்மியே" என்று பாடவேண்டும்போல் உள்ளம் துள்ளுகிறது. எங்கிருந்துதான் இவ்வளவு படங்களைப் பிடிக்கிறீர்களோ! தங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  2. படங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

    குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கண்முன் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை நிகழ்ந்ததைப் போன்ற மன நிறைவு.. அருமை!.. எங்கும் மங்கலம் நிறைவதாக!..

    ReplyDelete
  4. இலட்சுமி பூஜை பெருமைகள் அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. வழக்கம்போலவே படங்களுடனும் விளக்கங்களுடனும் பதிவு அருமை.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக அருமை!
    லக்ஷ்மியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஆஹா,

    ”தீபாவளி ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை”

    தீபாவளிப்பண்டிகை முடிந்தாலும் ஆங்காங்கே வெடிகள் வெடிக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றன.

    அதேபோல தங்களின் தீபாவளிப் பதிவுகளும் தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. எவ்ளோ படங்கள்!

    எவ்ளோ அரிய பெரிய விஷயங்கள்!!

    அசத்தலோ அசத்தல் தான் ! ;)

    >>>>>

    ReplyDelete
  10. இன்றும் ஸ்வாதியும் அமாவாசையும் சேர்ந்து உள்ளது.

    எங்களுக்கெல்லாம் இன்று தான் பித்ருக்களுக்கான தர்ப்பண தினம்.

    சூர்ய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் கூடவே கூடாது.

    அதுபோல அமாவசையன்றும் கூடாது.

    அதுபோல சதுர்தஸி அன்றும் கூடாது.

    ஆனால் தீபாவளியன்று ஒரே ஒரு நாள் மட்டுமே இதற்கெல்லாம் விதிவிலக்கு சொல்லப்பட்டுள்ளது.

    அதையும் தாங்கள் எடுத்துச் சொல்லியுள்ளது மிகவும் சிறப்பு தான்.

    >>>>>

    ReplyDelete
  11. ஸ்ரீலக்ஷ்மி பூஜை பற்றி நாணயமாக, தங்கமாக, தங்க நாணயமாக தகவல்கள் அளித்துள்ளது மனதில் தங்கக்கூடியதாக உள்ளது.

    விஷயங்கள் யாவும் தங்கக்கலசம் போல ஜொலிக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  12. இறுதியாகக் காட்டியுள்ள இரண்டு படங்களும், மேலிருந்து கீழ் 9வது வரிசைப் படத்தில் உள்ள குழந்தையும், விளக்கும், வாழ்த்து மடலும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    கீழிருந்து ஐந்தாவது படத்தில் அரிசி மாவினால் எழுதியுள்ள ’ஸ்வஸ்திக்’ சின்னமும், ”ஸ்ரீ” என்ற எழுத்தும் சூப்பரோ சூப்பர் ! ;)

    >>>>>

    ReplyDelete
  13. அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    இந்த ’ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை’ப் பதிவினைப் பார்க்கும் + படிக்கும் அனைவரின் பொருளாதார நிலமையும், இந்தப் பதிவரைப்போன்றே, மிகச் சிறப்பாக அமையட்டும். ;)

    -oOo-

    ReplyDelete
  14. லக்ஷ்மி பூ'சை மகிமை அறிந்த கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம் அம்மா.
    படத்துடன் கூடிய லட்சுமி குபேர பூஜை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. அறியாத தகவல்கள் தங்களின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.
    அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. ாழகிய பதிவு. இன்று கேதார கெளரிப் பூஜை காப்புக் கட்டு.

    ReplyDelete
  17. அழகிய பதிவு. இன்று கேதாரகெளரிப் பூஜை காப்புக் கட்டு.

    ReplyDelete
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  19. இலட்சுமி குபேர பூசைத் தகவல்கள் நன்று.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete