ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
ஓம் ஈஸான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதானாம்
ப்ரஹ்மாதிபதி: ப்ரஹ்மணோதிபதி: ப்ரஹ்மா ஸிவோ மே
அஸ்து ஸதாஸிவோம்
ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்
கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தெற்கே 23 கி.மீ. தொலைவிலுள்ளது பிரசித்தி பெற்ற வைக்கம் திருத்தலத்தில் அன்னதானப் பிரபுவாகக் கொலுவிருக்கிறார் வைக்கத்தப்பன்.
ஆலயத்தில் வழங்கப்படும் முக்கியமான பிரசாதம் வைக்கத்தப்பனின் சமையலறை விபூதிப் பிரசாதம்.
பக்தர்களுக்காக அன்னதானப் பிரபுவான வைக்கத்தப்பன் இங்கே சமையலறையில் சேவை செய்ததாகவும், அந்த நிலையில் அவரை வில்வமங்கள சுவாமி தரிசித்ததாகவும், அந்தச் சமையலறை அடுப்புச் சாம்பலே விபூதிப் பிரசாதமாகத் தரப்படுவதாகவும் ஐதீகம் ..
இந்த விபூதியைப் பக்தியுடன் ஏற்று தரித்துக் கொண்டால் ‘ஹிஸ்டீரியா’ போன்ற சகல மனோவியாதிகளும் தீர்ந்துவிடும்
வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா. வைக்கம் மகாதேவாஷ்டமி
மலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது.
வைக்கம் கோயிலில் மகாதேவாஷ்டமி விழா 12 நாள்கள் நடைபெறுகிறது.
அஷ்டமியன்று உச்சிக்கால பூஜை முடிந்தபின் சுவாமி ஆனக்கொட்டில் எனப்படும் யானை வளர்க்கும் இடத்தில் எழுந்தருள்கிறார்.
அருகில் உள்ள கோயில்களில் இருந்தும் உற்ஸவர்கள் எழுந்தருள்கின்றனர்.
அனைத்து தெய்வங்களும் வைக்கத்தப்பன் பின்தொடர ஆனக்கொட்டிலில் காட்சிதருவார்கள்.
அதன்பின்னர் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காகவே பக்தர்கள் காத்திருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
பிற சிவாலயங்களுக்கு இல்லாத மற்றொரு சிறப்பு வைக்கம் கோயிலுக்கு உண்டு. இங்கு மட்டுமே சிவன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார்.
காலையில் தட்சிணாமூர்த்தியாகவும்
பிற்பகலில் கிருதமூர்த்தியாகவும்.
மாலையில் பார்வதியுடன் சாம்பசிவனாகவும் அருள்பாலிக்கிறார்.
மகாதேவாஷ்டமி அன்று தமிழகத்தில் பல இடங்களில் அன்னதானம் நடைபெறும்.
சிவலிங்கத்தையோ அல்லது சிவபார்வதி படத்தையோ வைத்து ருத்ரம், சமகம், ஸுக்தங்கள் ஜெபித்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படும்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்குவார்கள். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது.
வைக்கம் அஷ்டமி விழா அன்னதானத்திற்கு பொருள் வழங்கினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலகாலமாக தொடரும் நம்பிக்கை.
வைக்கத்தப்பன் வியாக்ரபுரிசுவரர் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்..!
ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார்.
நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்த இடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துபீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார்..!
சிவபெருமான், தன் பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார்.
கரனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார்.
அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்.
மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான்.
சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார்.
கரன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார்.
எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாதபுரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது.
ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.
கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம்.
தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய மேடையை "வியாக்ரபாதர் மேடை" என்று அழைக்கிறார்கள்.
The Beauty of VAIKOM is really excellent and Wonderful ;)
ReplyDelete>>>>>
மகாதேவாஷ்டமி அறிந்தேன். நன்றி சகோதரியாரே
ReplyDeleteஆனக்கொட்டில் முழுவதும் லைட்டிங்ஸ் உடன் பார்க்கவே பளபளன்னு ஜோராக உள்ளது !
ReplyDelete>>>>>
கீழிருந்து 12 as well as மேலிருந்தும் 12, படம் விசித்திரமாக அழகாக உள்ளது.
ReplyDeleteமிக அருமையானபடத்தேர்வு.
அதாவது நாவல்பழ நிறமுள்ள சிவலிங்கம் ............... என்ற பத்திக்குக் கீழேயுள்ள படம்.
>>>>>
சிவன் மூன்று வேளைகளிலும், மூன்று வெவ்வேறு பெயர்களுடன், மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது இந்தக்கோயிலில் மட்டுமே என்பது சிறப்பான தகவல்.
ReplyDelete>>>>>
விபூதிப்பிரஸாதம் வாங்கிப் பூசிக்கொண்டு அன்னதானத்திலும் கலந்து கொண்ட திருப்தி தரும் பதிவு.
ReplyDelete>>>>>
ஆனைமீது அம்பாரி வைத்து தெரியாததொரு கோயிலுக்குக் கூட்டிச்சென்று, அறியாத பல செய்திகளை அறியச்செய்தது பாராட்டுக்குரியது.
ReplyDeleteo o o o o o
அழகான படங்கள்... அருமையான விளக்கங்கள்....
ReplyDeleteவைக்கம் கோவில் பற்றி அதிகம் தெரித்தது கிடையாது. தங்கள் கட்டுரையால் அறிந்தேன். நன்றி. எவ்வளவு அழகான படங்கள்! அதிலும் சீருடை அணிந்த மாதிரி மஞ்சள் பட்டுச் சேலையில் கேரளப்பெண்கள் வரிசையாக நிற்கும் அழகு கண்ணைக்கவர்கிறது, போங்கள்!
ReplyDeleteஅருள் தரும் வைக்கத்தப்பன் தரிசனம் ஆனந்தமயமானது.. திருக்கோயில் மிக மிக சுத்தமாக, அழகாக இருக்கும் . தள்ளு முள்ளு கிடையாது. நிம்மதியாக தரிசனம் செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன் வைக்கத்தில் தரிசனம் செய்ததைப் போலவே - இப்போதும் மனநிறைவு!..
ReplyDeleteஅறியாத பல தகவல்கள் அம்மா... நன்றி... படங்கள் அனைத்தும் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹிஸ்டீரியா தீர விபூதி உதவும் போன்ற நம்பிக்கைகள்! கேரளக் கோவில்களுக்குத் தனி அழகு எப்போதும் உண்டு. எத்தனை எத்தனை வரலாறுகள்?
ReplyDeleteஅருமையான பகிர்வு. நன்றி.
ReplyDeletenice post with good pictures
ReplyDeleteஅருமை! அழகும் பொலிவும் மனதையும் கண்களையும் ஈர்க்கின்றன.
ReplyDeleteநல்ல பகிர்வு சகோதரி!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
வைக்கம் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். படங்களுடன் விளக்கங்களும் அருமை. நன்றி
ReplyDeleteவணக்கம் சகோதரி..
ReplyDeleteதெரியாத பல தகவல்கள் தெரிந்த கொண்ட மகிழ்ச்சி. படங்கள் கண்களில் பசுமரத்தாணி போல் ஒட்டிக்கொண்டது கூடுதல் மகிழ்ச்சி. அற்புதமான ஆன்மீகப் பகிர்வுக்கு நன்றிகள்..
தெரியாத பல தகவல்கள்.....
ReplyDeleteபடங்களும் நன்று.
பகிர்வுக்கு நன்றி.
ஆஹா என்ன ஒரு அழகிய தொகுப்பு.. படங்கள் பார்க்கவே பக்தி பரவசமாயிடுது..
ReplyDelete