திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில்
சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை
அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது.
சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை
அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது.
தோகை மயிலேறிவரும் சேவற்கொடியோனாக,
சுந்தரத் திருநீறு பூசிவரும் ஆறுமுகனாக ,
காவடிகள் ஏந்திவரும் பகதர்களின் மனகுறைகள் களைபவனாக , செல்வமும் புகழும் அள்ளித்ரும் பரம்பொருளாக,
வள்ளிதெய்வானை மணாளனாக, நச்சுப்பாம்பால் தீண்டப்பட்டோரின் உயிர்காக்கும் உத்தமனாக காளிப்பட்டி கந்தசுவாமி அருள்புரிகிறார்..
ஸ்தல வரலாறு விளக்கும் படங்கள்...
ஸ்தல வரலாறு விளக்கும் படங்கள்...
பழனி மலையிலிருந்து முருகனை காளிப்பட்டி வரவழைக்கும் வரலாறு..
தைப்பூசத்தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.. தேர்த்திருவிழாவில் வண்ண வண்ண தேர்மிட்டாய் மிகவும் பிரபலம் ..
காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர்.
பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.
கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆலய மேல் விதானத்தில் கருத்தைக்கவரும் அற்புத ஓவியங்கள்
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் `மை' பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது
காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலையெல்லாம்
பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
விளக்கம்படங்கள் அனைத்தும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கந்தா போற்றி.. கடம்பா போற்றி!..
ReplyDeleteஅழகிய படங்களுடன் இனிய பதிவு!..
கந்தன் சேவடி போற்றி. காளிப்பட்டி கந்தசாமி அனைவரையும் காக்கட்டும்.
ReplyDeleteபடங்கள் செய்திகள் எல்லாம் அருமை.பார்க்காத கோவில் .
அந்தப்பக்கம் நிறைய தடவைகள் சென்றிருந்தும் அறியாத கோவில். தங்களால் தெரிந்து கொண்டோம் நன்றி அம்மா. தொடர்க தங்களின் ஆன்மீகப் பணி.
ReplyDeleteஅறியாத கோயில்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல தகவல் அருகில் இருந்தும் அறியமால் இருந்து விட்டேனே ...!!! தெரிந்து கொண்டேன் நன்றி !!!
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு.
ReplyDeleteமனம் கவரும் ஓவியங்கள்.
இனிய பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
ஆன்மிக திருவிழாக்கள் அனைத்தையும் இதுகாறும் தொடர்ந்து பதிந்து உலக சாதனை படைத்து வரும் உங்களை நேற்று மதுரையில் நடந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் சந்திக்கலாம் என நினைத்தேன். ஆனால் தாங்கள் வருகை தராத காரணத்தால் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. எனினும் அடுத்தமுறை புதுக்கோட்டையில் நடைபெறும் விழாவிற்கு அவசியம் வருகை தாருங்கள் அம்மா.
ReplyDeletehttp://sattaparvai.blogspot.in/2014/10/2014.html
எங்கிருந்தெல்லாம் பிடிக்கிறீங்க.. கோவில்களை! ஆச்சரியம் அடங்கவே இல்லை.
ReplyDeleteசிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
இவ்வாலய கோபுரம் மற்ற கோபுரங்களை போல அல்லாமல் சற்றே வித்தியாசப்பட்டு, காளிப்பட்டி கந்தையனின் திருக்கரத்தில் அமையப்பெற்றுள்ள வேல் வடிவில் காட்சியளிப்பதை உணரும்போது மெய் சிலிர்க்கிறது..
ReplyDeleteஇவ்வாலய கோபுரம் மற்ற கோபுரங்களை போல அல்லாமல் சற்றே வித்தியாசப்பட்டு, காளிப்பட்டி கந்தையனின் திருக்கரத்தில் அமையப்பெற்றுள்ள வேல் வடிவில் காட்சியளிப்பதை உணரும்போது மெய் சிலிர்க்கிறது..
ReplyDeleteஎங்கிருந்தெல்லாம் பிடிக்கிறீங்க.. கோவில்களை! சிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்