

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
- ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ
-லக்ஷ்மி ஹிருதயம்

வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி



1. ஓம் யஷேசாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி
தந்நோ ஸ்ரீத, ப்ரசோதயாத்.
2. ஓம் ஸ்ரீம் உனபதுமாம் தேவசக கீர்த்திஸ்ச மணினா ஸக. ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வ்ருத்தியம் ததாதுமேஸ்வாஹா.
3.ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே
தனதான்ய ஸம்ப்ருத்திம்மே தேகிதாபய ஸ்வாஹா.
4.ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் விநேஸ்வராய ஸ்வாஹா.
5.ஓம் ஸ்ரீம் குபேரம் மநுஜாகீரும் ஸகர்வம் கர்வ விக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத்,
ஸ்ரீம்க்லீம் குபேராய ஸ்வாஹா.
என்கிற குபேர மூல மந்திரங்கள் பூசநட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை, வெள்ளி, பவுர்ணமி மற்றும் தீபாவளிப் பண்டிகை மறுதினம் சுபயோக சுபதினம் காலை வேளையில் 11 மணிக்குள். வியாழன் மாலை 5 முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் ஜபிக்கவேண்டும்..
நவநிதிகளுடன் குபேரன் மற்றும் லஷ்மிதேவி, சிவப்புநிறப்பட்டு சாத்திய இரண்டு கலசங்களில் லஷ்மி குபேரனை ஆவாகனம் செய்து , செந்தாமரை செவ்வரளி மலர்களால் அலங்கரித்து குரேப கோலமிட்டு சதுரவடிவ ஹோம குண்டம் அமைக்க வேண்டும்.
வடக்கில் பார்க்கும்படி கலசம் வைக்கலாம்.
வலம் புரிச்சங்கு அலங்கரித்து வைக்க வேண்டும்..



ஹோமப் பொருட்கள்: லட்டு, ஜாங்கிரி, 32 வகை யாகப்பொருட்கள், பசுநெய், பால், தயிர், தாமரை மலர், வில்வக்குச்சிகள், அரச சமித்து, தாமரை மலர், பாயாசம், பஞ்ச தள வில்வ இலைகள், செம்பட்டு வஸ்திரம்.



சர்க்கரை பொங்கல், அவல் பாயாசம், கேசரி, அதிரசம், ஹவிஸ், தேன்குழல், பால் கொழுக்கட்டை.நிவேதனங்களாக படைக்கலாம்.

.jpg)

.jpg)
செல்வச் சேர்க்கை, பெரிய மனிதர்கள் நட்பு, அரசு பதவிகளில் அனுகூலம், பொருளாதார வளர்ச்சி, நவநிதி தர்ஸனம் ஆகிய பலன்கள் பெறலாம்.

ஹோமம் நிறைந்ததும் ஸ்ரீ சூக்தம், லஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்..





லட்சும் குபேர ஹோமம் அறிந்தேன் உணர்ந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteதகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅழகிய படங்களும் அருமையான பூஜை வழிபாட்டு முறைத் தகவல்களும் சிறப்பு!
ReplyDeleteலக்ஷ்மி அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!
வாழ்த்துக்கள் சகோதரி!
வழிபாட்டு முறைகளை விரிவாக சொன்னதற்கு நன்றி மேடம். இந்தக் குபேர வழிபாடு தான் வட இந்தியாவில் ' தந்தேத்ரஸ் ' என்று சொல்லபடுகிறது என்று நினைக்கிறேன் .
ReplyDelete
ReplyDeleteசிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
படங்களும் தகவல்களும் சிறப்பு அம்மா நன்றி.
ReplyDeleteஅருமையான படங்களும் தகவலும். நன்றி!
ReplyDelete