





உணவு , உடை ,உறையுள் என உயிர் வாழ இன்றியமையாதவற்றுள் முதலிடம் பெறுவது உணவு..!
உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட.


தனியொருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழங்கினார் முண்டாசுக்கவி பாரதியார்..


பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்டோபர்,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
"விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: "உலக உணவு உற்பத்திக்கு வழி'
என்பது, மையக் கருத்து.

ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. அனைத்து உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.
ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம்.

இதை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரிக்கின்றன.
அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம்.

வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசியால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன.
ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது, கடினமான விஷயமாகிறது.
உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், உலகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் விருது பெற்றிருக்கிறார்கள்..




Real facts!
ReplyDeleteஅருமையான தகவல்கள்! படங்களும் அருமை! எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்த வேண்டியது அரசின் கடமை....சரிதான் ஆனால் நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர்! விலை வாசியும் ஏறுவதை அரசு கண்டுகொள்வதில்லை!
ReplyDeleteதனியொருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் ....பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. வறுமையும், பஞ்சமும் ஒழிந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்!
நல்ல பதிவு. ஒவ்வொருவரும் உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்று உறுதி கொள்வோம்.
ReplyDeletegood infomatiom.
ReplyDeleteThank you sister
Vetha.Langathilakam
கவனத்திற்கும் கண்களுக்கும் உகந்த பதிவு!
ReplyDeleteபஞ்சம் பறந்து பாரோர் சிறக்க வேண்டுவோம்!
வாழ்த்துக்கள் சகோதரி!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று முண்டாசுக் கவிஞன் பாடியதை நினைவில் நிறுத்திக் கொள்வோம்.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete