ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்;
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங்களைப் போக்குபவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;
மூன்று உலகங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குபவருமான
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான
ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு பிரபல்ம்.. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் சுலோகத்தை 16 முறைக்குக் குறையாமல் கூறி வழிபடலாம்.
நல்ல பலன்கள் கிட்டும்.
ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் தனது இழந்த செல்வங்களை. மீண்டும் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.
அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார்.
தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனிதமான பொருட்கள் வந்தன.
பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே தன்வந்திரியாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார்.
தேவேந்திரன் சாவா மருந்தான அமிர்தத்தையும் தான் இழந்த
பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்
ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது
திருமால் தன்வந்திரி யாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ் டிக்கின்றனர்
. திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக
தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
தன்வந்திரிபகவானே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை தன்வந்திரி அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.
ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்திய வாறும் காட்டப்படுவது வழக்கம். அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கை யில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு. அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து
கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஹிமா என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவன் மனைவி அந்த நாள் (தன்திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்குகளை ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து, கணவனுக்கு புராணக் கதைகளைக் கூறி தூங்காது பார்த்துக் கொண்டிருந்தாளாம். பாம்பு உருவில் வந்த எமன் தீப ஒளியில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசவே, காலை வரை காத்திருந்துவிட்டுத் திரும்பினான் என்றும்; மன்னன் யமனிடமிருந்து காப்பாற்றப் பட்டான் என்றும் ஐதீகம்..
தன்னைச் சுற்றிலும் யம தீபங்கள் ஏற்றி, தன்னை தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி கடவுளே காரணமென்று மன்னன் நம்பினான். மக்கள் அனைவரும் தன்திரேயாஸ் நாளைக் கொண்டாட வேண்டுமென்றும்; அன்று இரவில் யம தீபம் ஏற்ற வேண்டுமென்று மன்னன் உத்தரவிட்டானாம்.
ஐப்பசி மாத அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே தீபாவளித் திருவிழா துவங்கிவிடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திர யோதசி என்றும் கொண்டாடப்படுகிறது.
தன்திரேயாஸ் நாளில் 13 வெள்ளி அல்லது தங்கக் காசுகள் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை.
இதே தன்திரேயாஸ் நாள் எமனுக்குரிய நாளாகவும் ,
அன்றிரவு யமதீயா என்ற யம தீபம் ஏற்றப்படுகிறது.
சிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
தனதிரயோதசி அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வழக்கம்போலவே அழகிய படங்களுடன் பதிவு ஜொலிக்கிறது.
ReplyDeleteஅழகிய படங்கள். தன்வந்த்ரி ஜெயந்தி என்று அறிந்திருக்கவில்லை - தன்தேரஸ் என்பதை குபேரனோடு சம்பந்தப்பட்டது என்று நினைத்திருந்தேன்.....
ReplyDeleteதன்வந்திரி பெருமான் நல்ல உடல் ஆரோக்கியத்தை அனைவருக்கும் தரட்டும்.
ReplyDeleteபடங்களும், தகவல்களும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
அழகான படங்களுடன் தன்வந்த்ரி குறித்த அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteதன் திரேயாஸ் பற்றி அறிந்தது இல்லை! சிறப்பான தகவல்கள்! நன்றி! படங்கள் வெகு சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல அறியாத தகவல்கள். அழகிய படங்கள் வழக்கம் போலபதிவு அருமை.
ReplyDeleteதந்திரேயாஸ் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி .
ReplyDeletenice
ReplyDelete