

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து.

வினாயகனே வினை தீர்ப்பவனே வேழமுகத்தோனே ஞால முதல்வனே
குணானிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம்
உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய் கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்























விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர் இந்த ஆழத்து விநாயகர் .


பிரம்மா விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார்.
அங்கு சிவபெருமான் பழமலையாக காட்சி அளித்தார்.
ஆகையால் பிரம்மா சிவனே மலையாக இருக்கிறார்
என்று சென்று விட்டார்.


விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.

விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர், திருமணதடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிறந்த கல்வி வழங்குகின்றார்,
21 பிறவி தோஷங்களை நீக்குகிறார்.

ஜாதகம் இல்லாதவர்கள் விநாயகரை வேண்டி வணங்கினால்
எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர்.
சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால்
எல்லா சங்கடங்களும் நீங்கும்.
108, 27, சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துவது விஷேசம்..!



VRIDHACHALAM

விநாயகரின் ஓவியம் எத்தனை அழகாய் இருக்கிறது!!
ReplyDeleteவழக்கம் போல் படமும் தந்த தகவல்களும் வெகு சிறப்பு. முதல் படத்தில் இருந்து அடுத்த படத்திற்கு வர வெகு நேரம் ஆனது..
ReplyDeleteபல முறை திட்டமிட்டும் போக முடியாத இடம் விருத்தாசலம். திருமணத்தடை நீக்கும் ஆழத்து விநாயகர் பிரம்மசாரியா சம்சாரியா. ?படங்களுடன் பதிவு அழகு. ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைப் பார்க்கும் போது உங்கள் dedication தெரிகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆழத்து விநாயகரின் அருள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல சினிமா தியேட்டர்கள் வணிக நிறுவனங்களாக மாறிவிட்ட போதும், திருச்சியில் இன்றும் ” முருகன் டாக்கீஸ்” எனப்படும் சினிமா தியேட்டர் 60 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. அந்த டாக்கீஸில் படம் ஆரம்பிக்கும் முன் ஸ்லைடுகள் போடும் போது வைக்கும் முதல் பாடல் “விநாயகனே! வினை தீர்ப்பவனே! ” என்ற பாடல்தான். உங்கள் பதிவில் இந்த பாடலின் வரிகளைப் படித்ததும் , அந்நாளில் எனது இளம் வயதினில் இந்த தியேட்டரில் திரைப்படங்கள் பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்து விட்டன. கண்ணீர் வந்து விட்டது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேங்காயுடன் உள்ள படம் காணக் கிடைக்காத காட்சி.
ReplyDeleteநல்ல படங்கள் .பதிவிற்கு மிக்க நன்றி.
அதை விட தங்கள் பேட்டி வை.ஜி சாரின் பக்கத்தில்
இனிய வாழ்த்துடன்
வேதா. இலங்காதிலகம்.