தேவாரம்
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
- திருஞானசம்பந்தர்
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.
.சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள்
கேதார கௌரி விரதமும் ஒன்று.
சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதி உடலைப் பெற்று, அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் பாகம் பிரியாளாக ஒன்றாகிய விரதமே கேதார கெளரி விரதமாகும்.
லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு,
கௌரி காப்பு நோன்பு , நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது..
இமயமலைச் சாரலில் உள்ள சிவத்தலமான . கேதாரம் என்னும் இடத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி அம்பாள்” இவ் விரதத்தினை மேற்கொண்டதால் கேதாரகௌரி விரதம் என்கிற பெயர் உண்டாயிற்று.
சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது
”பராசக்தி” எனப்போற்றப்படுகின்றது.
சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே நோன்பினை நோற்று பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பது விரதத்திற்கு சிறப்பாகும்.
சிறப்பு பெற்ற "கேதார கௌரி விரதம், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் அருளுகிறது.
தாய் வீட்டில் இந்த நோன்பு உண்டு. பதிவின் படங்கள் நிறைவு. மனதில் பழைய நினைவு.
ReplyDeleteஅழகிய படங்களுடன் இனிய பதிவு..
ReplyDeleteகேதாரகெளரி விரத சிறப்புப்பகிர்வு.அழகியபடங்கள்.நன்றி
ReplyDeleteமிக அருமை! விரத மகிமையும் லிங்காஷ்டகம்
ReplyDeleteதமிழிலும் கண்டு மகிழ்ந்தேன்!
அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!
அனைது நலங்களையும் அனைவருக்கும் அள்ளி தரட்டும்
ReplyDeleteகேதாரகெளரி.
வாழ்த்துக்கள்.
அருமையான படங்கள் மற்றும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete