கோவை கொடீஷியா அரங்கத்தில் தசாவதார சிலைகள்...
மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் வாமன அவதாரம்
கிருஷ்ண அவதாரம் பலராம அவதாரம் கல்கி அவதாரம்
“மீனமென வந்துமறை மீட்ட
மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
ஞாலபரி பாலதச மானபெரு மாளே
தசாவதாரங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் தனிக்கோவிலே அமைந்துள்ளது.
சென்னை பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலிலும்
தசாவதார சந்நிதி உண்டு.
திருவரங்கனே தசாவதாரங்களை எடுத்தவன் என்று குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன். தசாவதார ஸ்தோத்திரத்தையும் எழுதியுள்ளார். இவரின் ஆராதனைத் தெய்வமான ஹயக்ரீவரும் திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்று என்றும் குறிப்பிடுகிறார். திருக்கோவில்களில் விழாக்காலங்களில் பெருமாளுக்கு தசாவதார அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
தசாவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக தோஷங்களிலிருந்து விடுவிக்கும் என்று குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன்.
ஸ்ரீராம அவதாரம்- சூரியன்
ஸ்ரீகிருஷ்ண அவதாரம்- சந்திரன்
ஸ்ரீநரசிம்ம அவதாரம்- செவ்வாய்
ஸ்ரீகல்கி அவதாரம்- புதன்
ஸ்ரீவாமன அவதாரம்- வியாழன்
ஸ்ரீபரசுராம அவதாரம்- சுக்கிரன்
ஸ்ரீகூர்ம அவதாரம்- சனி
ஸ்ரீவராக அவதாரம்- ராகு
ஸ்ரீமத்சய அவதாரம்- கேது
ஸ்ரீபலராம அவதாரம்- குளிகன்
ஸ்ரீபவிஷ்ய புராணத்தில், கலியுகத்தில் நிகழப்போகும் அரசவம்சம், காலநிலை, கல்கி அவதாரம் போன்றவற்றுடன், பாரத தேசம் மட்டுமல்லாது அயல்நாட்டு ஆட்சியாளர்கள், அவர்களது மதம், பழக்க- வழக்கம் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆன்றோர்கள் கூறுகின்றனர்.
"சாதுக்களை ரட்சிப்பதற்கும் தர்மத்தைக் காப்பாற்றவும் நான் அவதாரம் எடுக்கப் போகிறேன்' என்ற கீதா வாக்குப்படி, உலகம் போகும் போக்கைக் கண்காணித்து வரும் ஜெகத்ரட்சகன், விரைவில் கல்கி அவதாரம் எடுத்து உலகத்தைக் காக்க வேண்டுமென அவன் தாள் பணிந்து போற்றுவோம்.
தசாவதாரப் பதிகம் மிக்க சிறப்புடைத்து.
ReplyDeleteபாடிப் பாடி மகிழ்ந்தேன்.
சுப்பு தாத்தா.
கல்கி பத்திரிக்கை வாராவாரம் வருகிறதே தவிர, கல்கி அவதாரம் வரக் காணேனே...! :)))))
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஓ அவதாரங்களுக்கும் நவக்ரகங்கள் இருக்கின்றதா! புதிய தகவல்! மிக்க நன்றி !
ReplyDeleteதசாவதாரப் பதிவில் வந்து தவறாது கலந்தகொண்டதில் மகிழ்ச்சியே.
ReplyDeleteதசாவதாரங்கள் பற்றி சிறப்பான தகவல்கள். தசாவதாரங்கள் நவகிரக தோஷங்களை விடுவிக்கும் புதியசெய்தி.கோவை கொடீஷியா அரங்கில் தசாவதார சிலைகள் அழகு. நன்றி
ReplyDeleteபுதிய தகவல்கள் நன்றிம்மா....
ReplyDeleteஅறியாத தகவல்கள் சகோதரியாரே நன்றி
ReplyDeleteதிரு ஸ்ரீராம் சொல்வது போல் பெருமாள் கல்கி அவதாரம் எப்பொழுது எடுக்கப் போகிறாரோ?
ReplyDeleteஅருமையான தகவல்களும் படங்களும். மெய் மறக்கும் படியான படங்கள் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஒரு முறை ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் திரு,சோ அவர்கள் அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல இன்னும் என்னென்னவோ அடுக்கிக் கொண்டே போனார். இந்தப் பத்திலேயே புத்தரையும் சேர்த்துக் கணக்கிடுவோரும் உண்டு.
ReplyDeleteதசாவதார சிற்பங்கள் அழகு! அருமையான தொகுப்பு! நன்றி!
ReplyDelete