
“விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”!.......
{கந்தரலங்காரம்}

முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

மு - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்கிற வாக்குப்படி ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள்
மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது
முருகனது திருமுகங்கள் ஆறு,
கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்;
முருகனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; முருனது இருப்பிடம் அறுபடை வீடுகள்,
முருகனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம்,
மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப்
பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன

திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது



.jpg)




அழகன் முருகனன்றோ..!
ReplyDeleteஅற்புதமான படங்களும் பதிவும் சகோதரி!
கந்தன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!
வாழ்த்துக்கள்!
அழகான படங்களுடன் இனிய பதிவு!..
ReplyDeleteஇப்போது வடமொழியின் ஸ்காந்த புராணம் படித்து வருகிறேன். உங்கள் பதிவும் படங்களும் என்னை மயிலாக மாற்றி விட்டது. முருகனருள் உங்களுக்கு என்றும் இருக்கட்டும் மேடம்.
ReplyDeleteகச்சியப்பர் எழுதிய ஸ்ரீ கந்தபுராணம் படித்து வருகிறேன். உங்கள் தளத்தில் முருகன் தரிசனம்.
ReplyDeleteதிருவிடைகழி முருகனை தரிசனம் செய்து இருக்கிறேன்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html
வணக்கம் அம்மா....
ReplyDeleteதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html
நன்றி
பழநி திருத்தலத்தின் படம் பார்க்க மிக அழகாக இருக்கிறது...
ReplyDeleteமனக்கோல மயிலேறும் மால் மருகன்- திரு
ReplyDeleteமணக்கோலம் காட்டும் மகிமை பரங்குன்றம்
நந்தி ஆண்டவன் நாயகன் குமரன்
செந்தில் ஆண்டவன்திருச் செந்தூர் தரிசனம்
ஞானத் திருக்கனி நயவாச் சினத்தில்
மோனத் தவம்செய் முருகனின் பழனி
அருள்கூறும் முகத்தான் அரனுக்கு பிரணவப்
பொருள்கூறும் கோலத்தின் பெரும் சுவாமி மலையும்
மனம் கனிந்து மயில்முருகன் மண்ணுக்கருள
சினந்தணிந்து அமர்ந்த சீர்மை திருத்தணி
வேலை ஏந்துவான் வள்ளி தெய்வானையோடு
சோலை அமர்ந்து சிறந்திடும் தரிசனம்
இவையனைத்தும் காட்டியதற்கு நன்றிகள்
அற்புதமான படங்களும் பதிவும்
ReplyDeleteகந்தன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!