கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள
ஈஷா யோகா மையத்தில் லிங்கபைரவியில்l களைகட்டிய
நவராத்திரி திருவிழா பல அம்சங்களில், மிக பிரம்மாண்டமாக
10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி – இருளிலிருந்து ஒளிக்கு செல்லும் ஒரு பயணம். தெய்வீகத்தாயின் முக்கியத்துவத்தை குறிக்கும் ஒன்பது சக்தி வாய்ந்த இரவுகளாக நவராத்திரி விளங்குகிறது.
இந்த ஒன்பது நாட்களில் தேவியோடு இருப்பது நல்வாழ்வுக்கும், இயற்கையின் கருணையினை உள்வாங்கிக் கொள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
லிங்கபைரவி தேவி, நவராத்திரி காலங்களில்
முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும், அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள்
சந்தன அலங்காரத்திலும் காட்சியளிக்கிறாள்.
லிங்கபைரவிதேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதோடு, ஒவ்வொரு நாள் மாலையிலும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உச்சாடனைகளில் பங்குபெற்று தேவியின் அருளைப் பெறலாம்..
நவராத்திரியின் முந்தைய நாளான,மஹாளய அமாவாசை நாளில், பேசும் மொழியிலிருந்து உடுத்தும் உடை வரை கலாச்சாரத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும் முன்னோர்களுக்கு நன்றியை வெளிப்படுத்துவதற்கு, மாலை யிலிருந்து நள்ளிரவு வரை லிங்கபைரவியில் நடந்த
“அக்னி அர்ப்பணத்தில்” ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
நள்ளிரவில் நடந்த “காலபைரவ சாந்தி”யில், தமிழகம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த 500 அன்பர்கள் தங்கள் பித்ருக்களுக்கு காலபைரவ சாந்தி எனும் பித்ரு அர்ப்பணை செய்கிறார்கள்...
ஒவ்வொரு நாள் மாலையும் லிங்கபைரவி உற்சவ மூர்த்தி
சிறப்பு ஊர்வலம் நிகழ்ச்சி முத்தாய்ப்பாய் விளங்குகிறது..
கோவையின் பல பகுதிகளிலிருந்து தேவியை தரிசித்து அருள்
பெற வந்திருந்த அத்தனை பேருக்கும் லிங்கபைரவி
நிர்வாகம் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கிறது.
இந்திய பாரம்பரிய கைவினைக் கலைகளுக்குப் புத்துயிரூட்டும் விதமாக, ‘கலையின் கைவண்ணம்’ (Hands of Grace) என்ற கைவினைக் கண்காட்சி, சிறப்பு நிகழ்ச்சியாக, நடைபெறும்..!
இந்தியா முழுவதிலுமிருந்து 15 மாநிலங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கலைக் குழுவினர் தங்கள் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துவர். நலிந்து வரும் கைவினைக் கலையை ஊக்குவிக்கும் விதமாக ஈஷா மேற்கொண்ட ஒரு முதற்கட்ட முயற்சி இது இந்த கண்காட்சியில் இடம்பெற்ற கலைப் பொருட்கள்பெரும் வரவேற்பைப் பெறுகிறது..
9 நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு தலைசிறந்த கலைஞர்கள் நிகழ்த்தும் இசைக் கச்சேரி, பரத நாட்டியம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு, வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்..
நவராத்திரியின் 9வதுநாளில், சரஸ்வதி தேவி – படிப்பிற்கும் அறிவிற்கும் மூலமான தேவியை வணங்கும். ஆயுத பூஜை தினம் திருநாளில் தாங்கள் உபயோகிக்கும் தொழிற் கருவிகள் அனைத்தையும் தேவியின் முன்னிலையில் சமர்பித்து தங்கள் தொழில் விருத்தி பெற அருளைப் பெறுவர்.
அனைத்திலும் உயரிய கருவிகளாகிய உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திநிலையை இலைமறைகாயாக குறிக்கிறது என்பதை மறந்துவிடாமல். இத்திருநாளில் அவற்றையும் கூர்மை பெறச் செய்து ஒரு உயரிய நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நவராத்திரி நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் வண்ணம் விஜயதசமி கொண்டாட்டங்கள் விஜயதசமி நாளான குழந்தைகளுக்கு முதல் கல்வி அறிமுகப்படுத்தும் சடங்கான “வித்யாரம்பம்” நடைபெறும்.
குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி, தேவியின் அருளுடன் கல்வி துவக்கி வைக்கப்படும்.
நவராத்திரியின் முக்கிய அம்சமான கொலுவும் மையத்தில் அமைக்கப்பட்டது.
லிங்கபைரவி நவராத்திரி விழாவை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்து விட்டது. நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
லிங்க பைரவி நவராத்திரி கொண்டாட்டங்கள் அறிந்தேன்
ReplyDeleteஉணர்ந்தேன்
நன்றி சகோதரியாரே
லிங்க பைரவி பற்றி தகவல்கள் இதுவரை இத்தனை விளக்கமாக அறிந்திருக்கவில்லை! இப்போது அறிந்து கொண்டோம்! மிக்க ந்னறி! அழகான படங்கள்!
ReplyDeleteஇஷா யோகாவின் லிங்க பைரவி - பயனுள்ள செய்திகள் ...பகிற்விற்கு நன்றி
ReplyDeleteலிங்க பைரவி அறிந்ததே இல்லை..
ReplyDeleteநல்ல தகவல்களும் படங்களும்! அருமை!
வாழ்த்துக்கள்!
எனக்கு(ம்) இவை புதிய தகவல்கள்தான்.
ReplyDeleteஇஷா மையம் சென்றிருக்கிறேன். அங்கு நீரில் மெர்குரியில் ஒரு பெரிய லிங்கம் பார்த்தோம்/ நீரில் (ஏறத்தாழ ஆள் உயர நீரில் பிரதிஷ்டைசெய்யப் பட்டது). அப்போதும் யாரும் லிங்க பைரவி பற்றிச் சொல்லவில்லை. அரிய தகவல்களுக்குப் பாராட்டுக்கள்
ReplyDeleteலிங்கபைரவி அறிந்திராத தகவல்கள். அலங்கார லிங்கபைரவியின் படங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. சிறப்பான தகவல்களை பகிர்வாகியமைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல ஆன்மீக தகவல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை.
ReplyDelete