ராஜாதி ராஜாய ப்ரஸ்ஞஸாஹினே,
நமோ வயம்வை ஸ்ரவணாய குரமஹே
ஸமாகா மான்காம காமா யமக்யம்
காமேஸ்வரோவை ஸ்ரவணோததாது -
குபேராய வைஸ்வரவணாய மஹாராஜாய நம
லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம், லட்சுமியுடன் கூடிய குபேரனின் படம் ஆகியவற்றை பூஜை செய்யும் இடத்தில் வைத்து,. படத்தின் முன்
வாழை இலை போட்டு, மஞ்சள் பிள்ளையாரை வைக்கவேண்டும்..
இலையில் நெல்லை குவியலாக கொட்டி,. தங்க நகைகளை வைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்கள் படைத்து ,திருவிளக்கேற்றி பூஜை செய்து ,. வடக்கு நோக்கி நின்று குபேரனை நினைத்து வழிபட வேண்டும்...மகாலட்சுமியை வழிபட்டு வர. வற்றாத செல்வம் வீட்டில் தங்கும்.
லட்சுமி கடாட்சமாய் வீடு என்றும் திகழ
குபேர பூஜை வழிவகுத்துக் கொடுக்கும்.
குபேர பூஜையன்று பசுக்களுக்கு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருப்பதால் கோமாதா பூஜை குபேர பூஜையாகக் கருதப்படுகிறது.
அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்
தனலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம.
சகல உயிர்களிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் உள்ள
தனலக்ஷ்மியை வணங்குகிறேன்.
வித்யா லக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் உள்ள
வித்யாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
தான்யலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள
தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
வீரலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு த்ருதி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள
வீரலக்ஷ்மியை வணங்குகிறேன்.
சௌபாக்ய லக்ஷ்மி:
யாதேவி ஸர்வ பூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
ஸந்தான லக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள
ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன்.
காருண்யலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள
காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
மஹாலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள
ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
செல்வம் என்பது பணம், வீடு, வாசல், நகை என்பவற்றோடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமான ஆரோக்கியம் ,
ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தையும் அருளவல்லவை
தீபாவளியன்று நிகழ்த்தப்படும் ஸ்ரீலஷ்மி குபேர பூஜை ஆகும்..
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தத்துவத்தை உணர்த்துவதே குபேர பூஜை. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவாகி, லட்சுமி தேவியின் அருளைப் பெற்று,, வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரர் ஆகிய குபேரனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன்.
திருப்பதி தலத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்து பத்மாவதியை திருமணம் செய்யும் வேளையில், எஜமானுக்கு ஒரு கோடியே 14 லட்சம் பொன் கடன் கொடுத்து பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டவர் குபேரன்.
தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம்.
யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம் அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி அன்று ஏற்றப்படும் தீபம் வாழ்வில் இனிமை சேர்த்திடும்..
சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்ற ஐதீகத்தின்படி அன்று வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்
எண்ணெயில் லட்சுமிதேவியும்,
அரப்புப்பொடியில் சரஸ்வதியும்,
சந்தனத்தில் பூமிதேவியும்,
குங்குமத்தில் கவுரியும்,
புஷ்பத்தில் மோகினிகளும்,
தண்ணீரில் கங்கையும்,
புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும்,
இனிப்பு மருந்தில் தன்வந்திரியும்,
இனிப்பு பண்டங்களில் அமிர்தமும்,
தீபத்தில் பரமாத்மாவும்,
நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் அருள்பாலிப்பார்கள்.
இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும்
மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, குடும்பத்தாரை
இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்பது ஐதீகம்.
மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, குடும்பத்தாரை
இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்பது ஐதீகம்.
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteநல்ல பகிர்வு!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வாழ்க நலம்!..
ReplyDeleteஅன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஇருளிலிருந்து நம்மை ஒளிக்கு அனைவரையும் அழைத்துவரட்டும் அனைவரும் நலம்பெற வேண்டும்.
அழகான படங்கள் அருமையான செய்தி தொகுப்பு இவற்றிற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html