எல்லா பூஜை நிறைவிலும் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கி பூஜையின் பலன் கிட்டுவதற்காக , கற்பூர ஆரத்தி காட்டும் போது
யஜுர் வேதமான,
ராஜதிராஜய ப்ரஸஹய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/
ஸ மே காமாந் காமகாமாய மஹயம்
காமேஸ்ரே வைஸ்ரவனோ ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம//
என்ற சுலோகத்தைக் கூறியவாறு மங்களாரத்தி செய்கிறோம்.
தியான சுலோகம்
மதுஜ வாஹய விமாந வரஸ்திகம்
கருடரத்த நிபம் நிதிதாயகம்/
ஸிவஸகம் முருடாதி விபிஷிதம்
வரகதம் தநதம் பஜ துத்திலம்//
மனிதர்களால் தாங்கப்படும் சிறந்த விமானத் தில் அமர்ந்திருப்பவரும், மரகதம் போன்று ஒளிவீசுபவரும், நவநிதிகளின் தலைவரும், சிவபெருமானின் தோழரும், சிறந்த கதையை கையில் ஏந்தியவரும், பொன்முடி முதலிய ஆபரணங்கள் அணிந்தவரும், தொந்தியுடைய வரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானைப் போற்றுவாயாக!
குபேர மந்திரம்
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரவணாய/
தநதாந்யாதிபதயே தநாஷதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா//
மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான
சங்கநிதி - பதுமநிதியை குபேரன் ரட்சிக்கின்றார்.
சங்க- பதும நிதிகள் அளவற்ற பொருட் செல்வத்தைக் கொண்டு,
குபேரனின் இருமருங்கிலும் வீற்றிருப்பார்கள்.
சங்க நிதி தேவதை (ஆண் உருவம்) தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வர முத்திரையுடனும் இருக்கிறார்.
குபேரனுடைய இடப்புறத்தில் பத்ம நிதி தேவதை (ஆண் உருவம்) தன் வலக் கையில் பத்மத்துடனும், இடக் கை வர முத்திரையுடனும் இருக்கிறார்.
குபேரனுடைய இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர் ஏந்திய வண்ணம் இருக்கிறார்.
சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர். தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வசக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால், தனத்திற்கும் வீரத்திற்கும் ராஜாவாகிறார்.
குபேர பூஜை துவங்குவதற்குமுன், வழக்கம் போல்
விநாயகரை தியானித்து பூஜிக்க வேண்டும்.
தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ வைத்து தூபதீபம் போன்ற பதினாறு உபசரணைகள் செய்து, அஷ்டோத்திர (நூற்றியெட்டு) திருநாமங்களைக் கூறி பூஜிக்க வேண்டும்.
அடுத்து நவகிரகங்களைப் பூஜித்து, தொடர்ந்து
தேவி வழிபாடு செய்யவேண்டும்.
நிறைவாக வடக்குத் திக்கில் குபேரனின் படம் அல்லது தர்ப்பைகளாலான கூர்ச்சத்தில் குபேரனை ஆவாகனம் செய்து குபேர பூஜையைத் தொடங்கலாம். பின் குபேரனை நூற்றியெட்டு திருநாமங்களால் பூக்களைக் கொண்டு அர்ச்சித்து, இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து பூஜையை நிறைவுபெறச் செய்யவேண்டும்.
குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சௌபாக்யலட்சுமி யந்திரம் அல்லது படத்தையும் பூஜை செய்யவேண்டும்.
தீபாவளி தினத்தன்று குபேர பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும்.
ராஜாதி ராஜாய ப்ரஹஸ்ய ஸாஹினே நமோ வயம் வைஸ்ரவனாய குர்மஹே
ReplyDeleteஸமே காமான் காமகாமாய மஹ்யம் காமேஸ் வரோ வைஸ்ரவணோ ததாது குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:
குபேரனின் நல்லாசிகளினால் அனைவருக்கும் மங்கலங்கள் உண்டாகட்டும்..
இனிய பதிவு.. அரிய செய்திகள்.. வாழ்க நலம்..
குபேர வழிபாடு அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
சங்கநிதி, பதுமநிதி – இவைகளோடு குபேரனின் அருட்செல்வம் பற்றியும் விளக்கியதற்கு நன்றி!
ReplyDeleteகுபேர பூஜை வழிபாடு முறை அறிந்துகொண்டேன்!
ReplyDeleteஅருமை! குபேரர் அருள்கிட்டி யாவரும் மகிழ வேண்டுகிறேன்!
வாழ்த்துக்கள் சகோதரி!
தீபாவளி குபேர வழிபாடு தகவல்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி. அனைவருக்கும் குபேரனின் அருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteகுபேர வழிபாடுகள் அறிந்தேன் நன்றி !
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....!
கருத்து சொல்ல வரவில்லை
ReplyDeleteகற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
புதுவை வேலு
சிறந்த பகிர்வு
ReplyDeleteதங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
குபேர வழிபாடுகள் அறிந்தேன் நன்றி !
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....!
குபேர வழிபாடுகள் அறிந்தேன் நன்றி !
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....!